Author: Meykandar

  • The Significance of Rudrākṣa Dāna

    The Significance of Rudrākṣa Dāna


    TaHiEnFrEs

    || மதுமாமிசம் புசிப்பவர்க்கு ருத்ராக்ஷ தானம் செய்தலாகாது ||

    உருத்திராக்க தானம் . 

    சிவனடியராயுள்ளார்க்கு உருத்திராக்க மாலையை யாவது , மணியையாவது தானஞ் செய்தல் சொல்ல வொண்ணாப் பரம புண்ணியம் ஆகும் . சுத்த வித்தைகளிலே சொல்லப்பட்ட துலாபுருட தானம் , இரணிய கருப்பதானம் பிரமாண்ட தானம் , இரணிய கற்பகதானம் , அட்டோத்தர சகத்திர கோதானம் , இரணிய விடபதானம் , இரணிய வசுவதானம் , இரணிய கன்னிகா தானம் , இரணிய துவாரபாலக தானம் , சொர்ண ரத தானம் , பஞ்சலாங்கல தானம் , சுவர்ண பூமி தானம் , கற்பகலதா தானம் , இரத்தின தேனு தானம் , பொற்கும்ப தானம் , சுவர்ண கணபதி தானம் , விட்டுணு விம்ப தானம் , திலபதும தானம் , திலபருவத தானம் , திலதேனு தானம் , இலக்குமி தானம் , அன்னதானம் , சுவர்ண தானம் , வித்தியா தானம் , சிவிகா தானம் , கவிகா தானம் , பாதரக்ஷாநி முதலிய த னங்கள் எவற்றினும் இது மிக விசேடமுடையது . உருத்திராக்க தானத்திற்கு ஒப்பாகவாவது உயர்வாகவாவது வேறோர் தான முளதென நினைத்தலும் மகாபாவம்.தானஞ் செய்வார்அன்புடனே செய்க . மதுமாமிச பக்ஷணமுடையார், சிவ தீக்ஷையில்லார் , தூர்த்தர் முதலிய அசற்பாத்திரர்க்குத் தானஞ் செய்தலாகா.சற்பாத்திர முடையார்க்குத் தானஞ் செய்தவர் இருவினையி னின்றும் நீங்கிச் சிவசாலோக்கிய முத்தியையடைந்து , அங்கிருந்தவாறே  சிவபெருமானோடு இரண்டறக் கலத்தலாகிய சிவசாயுச்சிய முத்தியை யடைவர் . 

    பெருந்திரட்டு . 

    துலைப்புருட முதலாகச் சுத்தவித்தை கிளக்குபல தூய தானக் 

    கிலையிதன்ற னிலேசமென வெண்ணியா னடியவர்க்கிங் கியன்ற கண்டீ 

    யலைவின்றிப் பத்தியுடன் கொடுப்பரே லவர்முத்திக் கருக ரிந்த 

    மலைவகற்றுந் தானமொரு பாத்திரர்க்கே செய்வதென மறைகள் பேசும் .

    யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்தசரபம் சைவத்திரு நா.கதிரைவேற் பிள்ளை இயற்றிய சைவபூஷண சந்திரிகை என்னும் நூலில் இருந்து…

  • The Cosmic Role of Śiva

    The Cosmic Role of Śiva


    TaHiEnFrEs

    சிவபெருமான் அடியவர்‌ அல்லலை அறுப்பவன்‌. இதனைச்‌ “சிறந்தடியார்‌ சிந்தனையுள்‌ தேனூறிநின்று, பிறந்த பிறப்பறுக்கும்‌ எங்கள்‌ பெருமான்‌” என்று திரு மணிவாசகப்பெருமான்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. இச்செய்தியைக் கலித்தொகை

    “ஆறறி அந்தணர்க்‌ கருமறை பலபகர்ந்து
    தேறுநீர்‌ சடைக்‌ கரந்து திரிபுரந்‌ தீமடுத்துக்‌
    கூறாமல்‌ குறித்ததன்மேல்‌ செல்லும்‌ கடுங்கூளி
    மாறாப்போர்‌ மணிமிடற்‌ றெண்கையாய்‌ கேளினி”
    (கடவுள்‌ வாழ்த்து)

    என்று கூறுகின்றது. நான்முகனுக்கு நான்கு மக்கள்‌. சனகர்‌, சனந்தனர்‌, சனாதனர்‌, சனற்குமரர்‌ என்பார்‌. நால்வரும்‌ நற்‌ கலை பல கற்றும்‌ வீடுறுநெறியை விளக்கமாகக்‌ கண்டிலர்‌. எனவே சிவபிரானை அணுகினர்‌. அவன்‌ வாக்கிறந்த பூரணமாய்‌ மனத்துக்கப்பாலாய்‌ எல்லாமாய்‌ உள்ளதுமாய்‌ உள்ள பொருளை உணர்த்தினான்‌. அதனை எவ்வாறு உணர்த்தினான்‌? கரதலம்‌ மோன முத்திரையைக்‌ காட்டிச்‌ சொல்லாமல்‌ சொல்லியருளினான்‌. இதனையே

    “ஆறறி அந்தணர்க்‌ கருமறை பலபகர்ந்து” என்றது. மதங்கொண்ட யானை யாவற்றையும்‌ அழிவு பண்‌ணும். அதைவயப்படுத்திப்‌ பயிற்சி தந்தால்‌ மக்கட்‌ பணிகளைச்‌ செய்யும்‌. அதுபோலக்‌ கங்கையாறு வீறுகொண்டு பாய்ந்தால்‌ உலகம்‌ நீறுபடும்‌. அதை துளியாக்கிச்‌ சடையிலே கரந்து அதன்‌ வீறு ஒழித்து நிலவுலகிற்‌ பாய்ந்து நலம்‌ பல விளையச்‌ செய்தான் பரமன்‌.

    சிவபிரானே சருவ சங்காரகருத்தா என்பதைச் சரப உபநிடதம்‌ “யோந்தகாலே ஸர்வலோகாந்‌ ஜஹாரஸ ஏக ச்ரேஷ்டச்சஸர்வ” என்று கூறும்‌.

    அடைந்தவர்க்கு அளி செய்‌யும்‌ அண்ணல்‌ அரன்‌, அதனையே நீலமணியொத்த அவனது மிடறு காட்டி நிற்கும்‌. கடலின்‌ தோன்றிய நஞ்சை எம்பிரான்‌ உண்டு உலகைக்‌ காவானேல்‌ யாவரும்‌ அழிந்திருப்பர்‌, இதனை

    “பூரரோடும்‌ விண்ணோர்கள்‌ பறந்தோடப்‌ புரந்தரனார்‌ பதி விட்டோடத்‌ தேரோடும்‌ கதிரோட மதியோட விதியோடத்‌ திருமால்‌ மேனிக்‌ காரோடத்‌ தொடர்ந்தோடும்‌ கடல்விடத்தைப்‌ பரமனுண்டு காவா விட்டால்‌ ஆரோடும்‌ நீரிருப்பீர்‌ எங்கோடியுயிர்‌ பிழைப்பீர்‌ அறிவிலீர்காள்‌?”

    என்று திருக்குற்றாலத் தலபுராணம்‌ கூறும்‌.

    சிவஞான பூஜா மலரில்(1988) இருந்து…

  • Divine Epithets of Arunachaleshvara

    Divine Epithets of Arunachaleshvara


    TaHiEnFrEs

    திருவண்ணாமலை திருத்தலத்திற்குரிய திருநாமங்கள் : –

    அருணாசலம் , அருணகிரி , அருணாத்ரி , சோணாசலம் , சோணகிரி , சோணாத்ரி , சிவலோகம் , சுத்தநகரம் , கௌரிநகரம் , ஞானநகரம் , தக்ஷிணகைலாசம் , தேசுநகரம் , முக்திநகரம் , வாயு நகரம் , ஸ்தலைச்வரம் , அருணாபுரி , திருவருணை , திருவ ண்ணாமலை என்னும் இத்திருநாமங்கள் முக்தியடைய இச்சிப்பவர்கள் எக்காலத்திலும் இடைவிடாது சிந்திப்பதற்குரிய இனிய திருநாமங்களாம் .

    திருவண்ணாமலை க்ஷேத்திர மூர்த்திக்குரிய திருநாமங்கள் : –

    அருணாசலேசன் , சோணாசலேசன் , அருணகிரீசன் , சோணாத்ரீசன் , அம்ருதேசானன் , பக்தபாச விமோசகன் , முகராங்க்ரிபதி , ம்ருகமதேசுவரன் , கௌரீசன் , ஸ்படிகாசலன் , ஞானசம்பந்தநாதன் , வேதமூர்த்தி , ஸித்தராஜன் , க்ஷமாரூபி , பால மூர்த்தி , திகம்பரன் , சர்வவித்யேச்வரன் , அருணன் , ப்ரதக்ஷிணப்ரியன் , அக்ஷராக்ருதி , அனாதி , அந்தரகிதன் , பக்தஞானப்ரகன் , ஆச்சர்யவைபவன் , வாஞ்சிதகாயகன் , முக்திப்ரதன் , சுவயம்பு , மரகதாசலன் என்பனவாதி நாமங்கள் ஒருநாமம் ஓருருவமொன்றுமிலார்க்குரிய எண்ணிறந்த திருநாமங்களில் ஞானமடைய விரும்புமவர் அகத்தில் இடைவிடாது ஜபித்தற்குரிய சிந்தைக்கு அமுதமெனவினிய அருணேசரது புனித திருநாமங்களாம்.

    ஸ்ரீ ஸ்காந்த மஹாபுராணத்தில் உள்ள அருணாசல கண்டத்தில் ஸ்ரீ கௌதம முனிவர் ஸ்ரீ அருணாசலேஸ்வரப் பெருமானிடம், ‘சுவாமி! இந்த திவ்ய திருத்தலத்தில் தங்களுக்கு வழங்கப்படும் விஷேச திருநாமங்களைக் கூறியருளுக’ என்று கேட்க, அதற்கு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் அருளிய திவ்ய திருநாமங்கள்.

  • Śiva: The All-Encompassing Reality

    Śiva: The All-Encompassing Reality


    TaHiEnFrEs

    “விருக்ஷமூலத்திலே இறைத்த நீரால்‌ அம்மரச்‌ சாகைகள்‌ புஷ்டியடையுமாறுபோல, சிவ பூஜையினால்‌ அவர்‌ சரீரமாகிய உலகம்‌ செழிக்கன்றது; பரமான்மாவாய சிவபெருமானுக்கு எட்டாவது மூர்த்தம்‌ மற்றைய மூர்‌த்தங்களுள்ளே வியாபகமாய ஆன்மா; ஆகலின்‌, உலகமனைத்‌தும்‌ சிவசொருபம்‌”

    ஸ்ரீ வாயு ஸம்ஹிதை

    जैसे वृक्ष की जड़ में डाला गया जल उसकी शाखाओं को पोषण देता है, उसी तरह शिव की पूजा से उनके शरीर के रूप में स्थित विश्व का कल्याण होता है। शिव, जो परमात्मा हैं, की आठ मूर्तियाँ हैं और विश्व उनकी आत्मा के रूप में उनके अंदर व्याप्त है। इसलिए, सम्पूर्ण विश्व शिव का ही रूप है।

    श्री वायु संहिता

    Just as water poured at the root of a tree nourishes its branches, the worship of Śiva nourishes the universe, which is His body. Śiva, the ultimate reality, has eight forms, and the universe is pervaded by Him as the all-encompassing soul. Therefore, the entire universe is a manifestation of Śiva.

    Sri Vayu Samhita

    Tout comme l’eau versée à la racine d’un arbre nourrit ses branches, le culte de Śiva nourrit l’univers, qui est son corps. Śiva, la réalité ultime, a huit formes, et l’univers est imprégné par Lui en tant qu’âme omniprésente. Par conséquent, l’univers entier est une manifestation de Śiva.

    Sri Vayu Samhita

    Al igual que el agua vertida en la raíz de un árbol nutre sus ramas, el culto a Śiva nutre al universo, que es su cuerpo. Śiva, la realidad última, tiene ocho formas, y el universo está impregnado por Él como alma omnipresente. Por lo tanto, todo el universo es una manifestación de Śiva.

    Sri Vayu Samhita
  • Understanding the Term Śvāmī

    Understanding the Term Śvāmī


    TaHiEnFrEs

    சீடன் – சாமி என்பதற் கருத்தமென்ன?

    குரு – ‘ஸ்வாமி’ என்னும் வடமொழி, தென்மொழியிற் சாமியென விகாரப்பட்டது. சுவாமியென்றுஞ் சொல்லப்படும்.

    ஸ்வம் = சம்பத்து. அதனையுடையான் ஸ்வாமியெனவாம். அந்தச் சம்பத்து, பரம சம்பத்தாகலின் ஆன்மகோடிகட்கு அதனை அருளாலருள் பரமகுருவென்று பொருள் படுத்தப்படும். அதனால், ஆசானென்னு நாமப்பொருளையும் பொருந்தும்.

    வேதத்தில் வெளிப்படும் ஆன்ம குகையிலிருத்தலிற் குகனென்னும் பெயர் குமாரனொருவனுக்கே வழங்கப்படுதல் போல இந்தச் சாமியெனும் பெயரும் அவனொருவனுக்கே வழங்கப்படுவதாயிற்று. அதனாலன்றோ சரவணபவனிருக்குஞ் சயிலம் சாமிமலையென விளங்குகின்றது. ஆகலின்,மகேசுரனடியாரை மாகேசுரரெனச் சொல்லுமாற்றாற் போல் சாமியினடியாரைச் சாமிகளெனச் சொல்லலும் மரபே.

    இதனை ஏனையோர்க்குச் சொல்லுவதும்,யாதொரு பெயரோடு புனைவதுஞ் சிறப்புண்டாக்கும் பொருட்டே ஆம்.

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சுப்ரமண்ய வியாசத்தில் இருந்து…

  • The Six Faces of Ṣaṇmukha: A Study of Śaiva Tradition

    The Six Faces of Ṣaṇmukha: A Study of Śaiva Tradition


    TaHiEnFrEs

    சீடர்: அறுமுகன் என்பதற்குக் கருத்தமென்ன?

    குரு: ஆறு முகமுடையவன் எனவாம். விவரம்: சிற்சத்தியாகிய சிவசத்தியினுடைய முகமொன்று, சிவனுடைய முகம் ஐந்தும் ஆக ஆறு முகங்கள் உள்ளன. இந்த ஆறு முகங்களும் ஆன்மாக்கள் விருப்பு நிறைவேறுமாறு அருளால் செய்யப்படும் ஸிருட்டி யாதி பஞ்சகிருத்திய நிமித்தம் அபேத சிவசத்தியாய் சிற்சத்தியில் பத்திலொரு கூறு வலியுள்ள மஹாசாதாக்கிய மென்னும் தத்துவமும் மஹாசாதாக்கியமென்னும் மூர்த்தியும் பொருந்தின கீழ் நோக்காயுள்ள அதோ முகமும், பராசத்தியிற் பத்திலொரு கூறு வலியுள்ள சாதாக்கியமென்னுந் தத்துவமும் சதாசிவனென்னு மூர்த்தியும் பொருந்தின மேனோக்காயுள்ள ஈசானமுகமும், ஆதி சத்தியிற் பத்திலொருகூறு வலியுள்ள அமூர்த்திசாதாக்கிய மென்னுந் தத்துவமும் ஈசனென்னு மூர்த்தியும் பொருந்தின மேற்கு நோக்காயுள்ள சத்தியோசாத முகமும், இச்சாசத்தியிற் பத்திலொருகூறு வலியுள்ள மூர்த்திசாதாக்கியமென்னுந் தத்துவமும் பிரமீச னென்னு மூர்த்தியும் பொருந்தின வடக்குநோக்கா யுள்ள வாமதேவமுகமும், ஞானசத்தியிற் பத்திலொரு கூறு வலியுள்ள கர்த்திருசாதாக்கிய மென்னுந் தத்துவமும், ஈசுரனென்னு மூர்த்தியும் பொருந்தின தெற்கு நோக்காயுள்ள அகோரமுகமும், கிரியாசத்தியிற் பத்திலொருகூறு வலியுள்ள கன்மசாதாக்கியமென்னுந் தத்துவமும் ஈசானனென்னு மூர்த்தியும் பொருந்தின கிழக்கு நோக்காயுள்ள தற்புருட முகமுமாம் என்ப.

     அறுமுகங்கட்குமுரிய பிரமாணம் – சம்பவகாண்டத்து நரு-ம் அத்தியாயத்து எ -ம் சுலோகத்தில் “நங்குமா ரன் உனது சுவரூபத்தையும், எனது சுவரூபத்தையுங் கொண்டவன். ஆகலின் அறுமுகனாயினன்” எனக் கிரிகுமாரிக்குக் கிரிவில்லி கிளத்தியதாக வருவதூஉம், திருச்செந்தூர்க் கந்தர்கலிவெண்பாவில் “வெந்தகுவர்க் காற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி -யைந்து முகத்தோ டதோமுகமுந் – தந்து திருமுகங்க ளாறாகிச் செந் தழற்க ணாறும் -ஒருமுகமாய்த் தீப்பொறியா றுய்ப்ப” எனக் குமரகுருபர சுவாமிகள் குயின்றதாக வருவதூஉ மாம். சண்முகங்களுள், சாற்றிய கலிவெண்பாக் கூறுமாறு சூரனைத்தடிந்து பகைவருயிர் சிந்திய முகம்,உயிர்களின் ஊழ்வினையை மாற்றிப் பேரின்ப சுகந்தரு முகம், வேதங்களையு மாகமங்களையு முடிக்கு முகம் , பாசவிருளை நீக்கிச் சோதிமயமாய் விளங்கு

    முகம் , தேவசேனைக்கும் வள்ளியம்மைக்கு மோக

    முதவு முகம் , தன்னடி சேர்வார்க்கு வரமளித்தருளுமுகம்  எனவுஞ் சிலர் கூறுப.

    கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மேல், கீழ்

    என்னும் ஆறு முகத்துஞ் சிதாகாசமாக நிறைந்திருக்கும் பரமான்மா ஷண்முகனெனவாம். 

    ஷட் + முகம் = ஷண்முகம். ஷட் = ஆறு.

    அத்தியாச்சிரம சுத்தாத்துவைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச்செய்த ஶ்ரீ சுப்பிரமணிய வியாச(1893 – முதற்பதிப்பு)த்தில் இருந்து.

  • Śivaprakāśaḥ – Śiva’s Grace and the Soul’s Liberation

    Śivaprakāśaḥ – Śiva’s Grace and the Soul’s Liberation


    TaHiEnFrEs

    ஆன்மாக்களோ எண்ணில அவற்றின் தராதரங்களும் கணக்கில. தத்துவக்கூட்டங்களும் அப்படிப் பட்டவையே. இவற்றையெல்லாம் எப்படி அறிந்து தவறில்லாமல் கூட்டியும் பிரித்தும் சிவபெருமானால் செயல்புரியமுடியும் என்று நாம் எண்ணக்கூடும். சிவபெருமான் நிறைந்த ஞானமயன். அவனால் அறியப்படாதது எதுவும் இலது. அங்ஙனம் அறிந்து செயல் புரிவதனால் சிவபெருமானுக்கு அறிவுக்குறை நேரிடுவதில்லை. வாயுமண்டலத்துட்பட்டுள்ள உயிர்கள் சுவாசிப்பதனால் வாயுமண்டலம் வற்றிப்போவது இல்லை. நிறைந்த ஞானநிலபத்துட்பட்டிருக்கும் உயிர்கட்கு உதவிபுரிவதனால் சிவபெருமானுக்கு ஏதும் குறைவோ மாறுபாடோ ஒருபோதும் உண்டாவதில்லை, நிறைந்த ஞானம் குறைவுபடுவதில்லை என்பதை ‘பொங்கு ஒளி ஞானம்’ என்ற சிவப்பிரகாசம் தொடர்காட்டும். அத்தகைய ஞானப் பொருள் என்றும் நீக்கமற நிற்பது. 

    மேற்கூறப்பட்டபடி, பேரறிவுப்பொருள் உதவி புரிதலால் என்னபயன் ஆன்மாவுக்கு ஏற்படும் என நாம் கருதக்கூடும். சிவம் இங்ஙனம் துணைபுரிவதனால் ஆன்மாவுக்குள்ள மலமறைப்பு அகலலுறும். இதன் பயனாகப் பாசஞான பசுஞானங்கள் விலகலுறும். முற்றறிவு எனப்படும் சிவஞானம் விளைதலுறும். இவ்வாறான சிவஞானவிளைவினால், ஆன்மா, தன்னை – தன் இயல்பினை – அறியலுறும். இதனை ஆன்மதரிசனம் என்பர். இதனால் ஆன்மா மலநீக்கம்பெற்றுத் தூய்மை உறும். இதனை ஆன்மசுத்தி என்பர். இவற்றின்பயனாக ஆன்மா, உண்மைமுத்தி வாய்ப்புக்கான சீவன்முத்தித்திறம் இம்மையிலே வாய்க்கப்பெற்றிடும். இதனை ஆன்மலாபம் என்பர். இங்ஙனம் இம்மூன்று நலங்களைையும் நண்ணப்பெறுதலே இங்கு அதன்பயன் எனக்குறிக்கப்பட்டது.

    திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியீடான சிவப்பிரகாசம் சீர்மைக்கட்டுரை [மூன்றாஞ் சூத்திரம் – ஆன்ம இலக்கணம்](1966) என்னும் நூலில் இருந்து.

  • Guru Tattvasya Mahatvam – The Significance of Guru Worship in Śaiva Siddhānta

    Guru Tattvasya Mahatvam – The Significance of Guru Worship in Śaiva Siddhānta


    TaHiEnFrEs

    தீவினையாளர் சம்பந்தத்தானே ஒருவன் எங்கனம் பதிதனாகின்றானோ அங்ஙனமே குருவின் சேர்க்கையால் புண்ணிய பலன்களை அடைகின்றான்.

    தீயின் சேர்க்கையானே பொன்னானது களிம்பைப் போக்கிக் கொள்வதேய்ப்ப, குருவழிபாட்டானே மனிதர்கள் பாவங்களைக் கழிக்கின்றார்கள். நெருப்பின் அண்மையிலுள்ள நெய்க்குடம் எங்ஙனம் இலயமடைகின்றதோ, அங்ஙனமே குருவின் அண்மையிலிருப்பவன் தன் பாவங்கள் யாவும் இலயமடையப்பெறுவான். கொழுந்துவிட்டெரியும் நெருப்பானது உலர்ந்த விறகுகளை எங்ஙனம் எரிக்குமோ, அங்ஙனமே மேலாம் உவகைப்பாட்டி கையுடைய இந்தக் குரவனும் சீடன்றன் பாவங்களைக் கணப்போதிலே தகிக்கின்றான். 

    மனம், வாக்கு, காயம் என்ற மூவகைக் கரணங்களாலும் குருவைப் பிழைத்தலாகாது. அவருடைய சினத்தானே ஆயுளும், வெறுக்கையும், மெய்யுணர்வும், நற்றொழில் எனப்படூஉம் புண்ணியங்களுஞ் சுடப்படுகின்றன என்று உரைத்தலானே, ஆயுள், செல்வம், தத்துவ உணர்ச்சி, புண்ணியங்கள் என்னும் இவைகள் மேன்மேலும் வளருமாறும், மலவிருள் தேயுமாறும் நன்னெறி காட்டி உய்வித்த குருசெய்த நன்றியை எஞ்ஞான்றும் மறவாது, மனம் வாக்குகள் ஒருமைப்படக் காயத்தினால் அவரை வணங்குதலும் இன்றி அமையாது வேண்டப்படுமாதலானும்,

    यं यं लोकं मनसा संविभाति विशुद्धसत्त्वः ।

    कामयते याञ्च कामान् तन्तं लोकं जयते ।

    ताञ्च कामान् तस्मादात्मज्ञं ह्यर्चयेत् भूतिकामः ।।

    யம் யம் லோகம் மனஸா ஸம்விபா⁴தி விஶுத்³த⁴ஸத்த்வ꞉ |

    காமயதே யாஞ்ச காமான் தந்தம் லோகம் ஜயதே |

    தாஞ்ச காமான் தஸ்மாதா³த்மஜ்ஞம் ஹ்யர்சயேத் பூ⁴திகாம꞉ ||

    எவன் எவ்வெவ்வுலகினை மெய்யுணர்வானே எண்ணி

    விசுத்த சத்துவமுடையனாகி, எவ்வெப்பயனை விழைகின்றானோ அவன் அவ்வவ்வுலகங்களை அடைந்து அவ்வப்பயன்களைப் பெறுகின்றான் ஆகலின், பரசிவனை உள்ளவாறு உணர்ந்த அத்தன்மையனாகிய சிவஞானியைத் திருவருட்செல்வம் விழைவுறூஉம் ஒவ்வொருவரும் பணிவாராக என வேதமகா வசனங்கள் முழங்குதலானும், அங்ஙனமே சிவாகமங்களாகிய பரவித்தைகளும் முழங்கலானும் குரவனே தெய்வமெனக்கொண்டு வணங்கியதெனக் கடைப்பிடிக்க.

    திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியீடான சிவஞானபோத மாபாடியத்திரட்டு(1977) என்னும் நூலில் இருந்து…

  • Puṣpadevatā: A Study of Flowers and their Presiding Deities

    Puṣpadevatā: A Study of Flowers and their Presiding Deities


    TaHiEnFrEs

    ஒவ்வொரு பூவுக்கும் அதிதெய்வம் உண்டு.

    • நந்தியாவர்த்தம் – நந்தி
    • எருக்கம் பூ – சூரியன்
    • சண்பகம், கடம்பம், குரா – முருகப்பெருமான்
    • மகிழம் பூ – கலைமகள் .
    • தாமரைப்பூ – சிவபெருமான்.
    • அறுகு – விநாயகர்
    • அலரிப் பூ – பிரம்மா .
    • கொக்கிரகம்பூ – திருமால்
    • வில்வத் தளிர் – திருமகள்
    • மல்லிகை, முல்லை, நீலோற்பலம் – உமையம்பிகை.

    ‘சிவாகமங்கள் ஓர் அறிமுகம்’ என்னும் நூலில் சிவஸ்ரீ சபாரத்தினம் சிவாச்சாரியார் அவர்கள்.

    प्रत्येक फूल का अपना अधिदेवता होता है। कुछ उदाहरण हैं:

    • नंदियावर्तम / नंदी एरुक्कम फूल – सूर्य (सूर्य देवता)
    • चण्पकम, कटम्बम, कुरा – मुरुकप्पेरुमान (भगवान मुरुगन)
    • मकिलम फूल – कलाइमगल (सरस्वती माता)
    • तामरई पूपू (कमल) – शिवपेरुमान (भगवान शिव)
    • अरुकु (दूर्वा घास) – विनायक (भगवान गणेश)
    • अलरी पूपू – ब्रह्मा (सृष्टिकर्ता)
    • कोक्किरकम पूपू – तिरुमाल (भगवान विष्णु)
    • विल्व पत्र – तिरुमगल (लक्ष्मी माता)
    • मल्लिकाई, मुल्लई, नीलोत्पलम – उमैयम््मिकाई (पार्वती माता)

    ये संबंध “शिवागमंगल ओर अरिमुकम” पुस्तक में शिवाचार्य शिवश्री सबारत्तिनम द्वारा उल्लिखित हैं।

    Each flower has its own presiding deity. Here are some examples:

    • Nandiyāvartam / Nandi Erukkam flower – Sūrya (Sun God)
    • Caṇpakam, Kaṭambam, Kurā – Murukapperumāṇ (Lord Murugan)
    • Makilam flower – Kalāmakal (Goddess of Learning, Saraswati)
    • Tāmaraip Pū (Lotus) – Śivaperumāṇ (Lord Shiva)
    • Aruku (Durva grass) – Viṉāyakar (Lord Ganesha)
    • Alari Pū – Brahmā (Creator God)
    • Kokkirakam Pū – Tirumāl (Lord Vishnu)
    • Vilva leaves – Tirumakal (Goddess Lakshmi)
    • Mallikai, Mullai, Nīlōṭpalam – Umaiyam’mikai (Goddess Parvati)

    These associations are mentioned in the book “Śivāgamaṅgal Oru Aṟimukam” by Śivāccāriyār Śivāśrī Capārattinam.

    Chaque fleur a sa propre divinité tutélaire. Voici quelques exemples:

    • Nandiyāvartam / Nandi Erukkam – Sūrya (Dieu du Soleil)
    • Caṇpakam, Kaṭambam, Kurā – Murukapperumāṇ (Dieu Murugan)
    • Makilam – Kalāmakal (Déesse de l’apprentissage, Saraswati)
    • Tāmaraip Pū (Lotus) – Śivaperumāṇ (Dieu Shiva)
    • Aruku (herbe Durva) – Viṉāyakar (Dieu Ganesha)
    • Alari Pū – Brahmā (Dieu créateur)
    • Kokkirakam Pū – Tirumāl (Dieu Vishnu)
    • Feuilles de Vilva – Tirumakal (Déesse Lakshmi)
    • Mallikai, Mullai, Nīlōṭpalam – Umaiyam’mikai (Déesse Parvati)

    Ces associations sont mentionnées dans le livre “Śivāgamaṅgal Oru Aṟimukam” de Śivāccāriyār Śivāśrī Capārattinam.

    Cada flor tiene su propia divinidad tutelar. Aquí hay algunos ejemplos:

    • Nandiyāvartam / Nandi Erukkam – Sūrya (Dios del Sol)
    • Caṇpakam, Kaṭambam, Kurā – Murukapperumāṇ (Dios Murugan)
    • Makilam – Kalāmakal (Diosa del aprendizaje, Saraswati)
    • Tāmaraip Pū (Loto) – Śivaperumāṇ (Dios Shiva)
    • Aruku (hierba Durva) – Viṉāyakar (Dios Ganesha)
    • Alari Pū – Brahmā (Dios creador)
    • Kokkirakam Pū – Tirumāl (Dios Vishnu)
    • Hojas de Vilva – Tirumakal (Diosa Lakshmi)
    • Mallikai, Mullai, Nīlōṭpalam – Umaiyam’mikai (Diosa Parvati)

    Estas asociaciones se mencionan en el libro “Śivāgamaṅgal Oru Aṟimukam” de Śivāccāriyār Śivāśrī Capārattinam.

  • Tiruvaiyāru: The Southern Kailasa, a Sacred Site of Liberation

    Tiruvaiyāru: The Southern Kailasa, a Sacred Site of Liberation


    TaHiEnFrEs

    திருவையாற்றில் அப்பர் பெருமான் கண்ட திருக்கயிலாயக் காட்சி

    திருநாவுக்கரசு சுவாமிகள் தொண்டில் பழுத்த சைவர்…தன்னுடைய இறுதிக் காலத்தில், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் காண, ஆவல் வந்து விட்டது! கிளம்பி விட்டார் வடநாட்டுக்கு! சென்னையில் திருமயிலை, திருவான்மியூர், திருக்காளத்தி, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) எல்லாம் கடந்து ஒரேயடியாக, வடக்கே காசி வரை வந்து விட்டார்! கூட வந்தவர்களால் முடியவில்லை! அப்பரின் மனமோ ஒடியவில்லை! அனைவருக்கும் விடைகொடுத்து விட்டு, தான் மட்டும் தனியாகக் கயிலை யாத்திரைக்கு நடக்கத் தொடங்கி விட்டார்!

    “பங்கயம் புரை தாள் பரட்டளவும், பசைத் தசை தேயவும் கைகளும் மணி பந்து அசைந்துறவே, கரைந்து சிதைந்து அருகவும், மார்பமும் தசை நைந்து, சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும், உடம்பு அடங்கவும், ஊன் கெடவும், சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும்…”என்று ஓடாய்த் தேய்ந்தார் நாவுக்கரசர்!.கால்களால் நடக்க முடியாது, கைகளால் தவழ்ந்தார்! அதுவும் முடியாது, தலையால், உடலால் ஊர்ந்தார்! அதுவும் முடியாது, என்ன செய்வதென்றே தெரியவில்லை! கயிலை நாதனே முனிவராய் அப்பரை ஆற்றுப்படுத்த வந்து விட்டார்!

    “மானிடர்கள் உடலோடு திருக்கயிலாயம் சென்று ஈசனைக் காண்பது மிகவும் அரிது அப்பரே! உங்கள் தொண்டே போதும்! யாத்திரையைக் கைவிட்டு விடுங்கள்! – நாவுக்கு அரசர்! இப்போது செவிக்கும் அரசர் ஆகி விட்டார் போலும்! செவி மடுத்தாரில்லை! “அப்பரே, இப்படி ஒரு உறுதியா? கயிலை அடிவாரத்தில் வாழும் முனிவன் நான்! எனக்கே ஈசன் தரிசனம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை!”
    “அப்பரே, நான் திரிகால ஞானி! ஈசனே எம்மை உம்மிடம் அனுப்பி வைத்தார்! இதோ சூல-ரிஷப முத்திரை! இப்போதாவது நான் சொல்வதைக் கேட்பீர்களா? இதோ, இந்தத் தூய ஏரியில் மூழ்குங்கள்! பஞ்ச நதி க்ஷேத்திரம் என்னும் திரு-ஐ-ஆற்றில் (திருவையாறு) எழுவீர்கள்! அது தட்சிண கைலாசம்! அங்கு இறைவனைத் திருச்சபை சூழக் காண்பீர்கள்”..அப்பர் மானசரோவரத்தில் மூழ்கினார்! ஊன உடற் புண்கள் எல்லாம் மறைந்தன!

    உடல் சிவ மங்களமாய் மின்னியது! வட மலையில் மூழ்கியவர், தென் வயலில் எழுந்தார்! காயங்கள் உடலில் ஆறின! கானங்கள் வாயில் ஊறின! “மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்! யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்! கண்டேன் அவர் திருப்பாதம்! கண்டறியாதன கண்டேன்!!” மும்மூர்த்திகளும் சூழ்ந்திருக்க, தேவரும், ஏவரும் துதிக்க, நடன மாதர் நடங்கள் புரிய, கங்கை முதலான ஆறுகள் வணங்க, நந்தி தேவர் திருக்கடைக்காப்பில் நிற்க, மின்னிடும் வெள்ளிப் பனி மலையாய் அம்மையும் அப்பனும்…அப்பருக்குத் திருக்கைலாயம் காட்சி ஆகிறது!

    பிரம்மா முதலிய தேவர்கள் வணங்கி நிற்கவும், திருமறைகள் முழங்கவும், எண்ணிறந்த சிவகணங்கள் போற்றவும், முனிவர், சித்தர், முத்தர் முதலானோர் நெருங்கி இருக்கவும், கங்கை முதலான நதிகள் துதிக்கவும், நந்தி தேவர் காவல் புரியவும், பவள மாமலை மேல் இறைவனும் அம்பிகையும் இனிது வீற்றிருந்து அருள் புரியும் பேரானந்தக் காட்சியைக் கண்டார். காணாததைக் கண்டார்.

    அப்பர் அடிகள் பேரின்ப நிலையில் ஆடினார்; பாடினார்; அழுதார்; தொழுதார்; ‘மாதர் பிறைக் கண்ணியானை’ என்னும் தீந்தமிழ்ப் பதிகம் பாடித் துதித்தார். இன்றும் திருவையாற்றுத் தலத்தில், ஆண்டு தோறும் ஆடி அமாவாசை அன்று ‘அப்பர் அடிகள் கயிலைத் தரிசனம் காணும் உற்சவம்’ நிகழ்த்தப் படுகிறது. இப்புனித நிகழ்வைத் தரிசிப்பது கயிலை மலையைத் தரிசித்த புண்ணியப் பலனை நல்கும்.

    திருவையாறில் கயிலைக் காட்சி கண்டு, பேரின்ப நிலையில் அப்பர் பெருமான் பாடியருளிய பதிகத்தின் முதல் பாடல்:

    மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
    போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்
    யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
    காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.
    கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!!!

    புகுவார் பின் புகுந்தால், அடியார் பின் புகுந்தால், அன்பினால் புகுந்தால், அந்த அன்பே சிவமாகும்! அன்பர் கூடுமிடம் கயிலையாகும்!….அப்பர் திருவையாறில் கண்ட திருக்கைலாயம் தரிசனம் நாம் காண ஆடி அமாவாசை அன்று திருவையாறு சென்று வாருங்கள் ….

    “யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது” என்ற அப்பரின் திருவாக்கின்படி நாமும் இந்நாளில் திருவையாறில் திருக்கயிலைக் காட்சியைக் காண்போம். ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத அருள்மிகு ஸ்ரீ ஐயாறப்பர் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளும் அந்த பக்திப்பரவசமான காட்சியை காணக் கண்கோடி வேண்டும்.