Categories
sivagnanabotham Es

Sivagnanabotham Sutra en Tamil

1. அவன் அவள் அதுவெனும் அவை மூவினை மையின்,
தோற்றிய திதியே யொடுங்கி மலத்துளதாம்,
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

2. அவையே தானே யாயிரு வினையின்
போக்குவரவுபுரிய ஆணையின்
நீக்கமின்றி நிற்குமன்றே.

3. உளது, இலதென்றலின், எனதுடலென்றலின்
ஐம்புலன், ஒடுக்கம் அறிதலின், கண்படில்
உண்டிவினையின்மையின், உண்ர்த்த உணர்தலின்,
மாயாவியந்திரனுவினுள் ஆன்மா.

4. அந்தக்கரணம் அவற்றின் ஒன்றன்று,
சந்தித்தது ஆன்மா, சகசமலத்துணராது
அமைச்சு அரசு ஏய்ப்பநின்று அஞ்சவத்தைத்தே.

5. விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண் மூக்கு
அளந்தளந்தறியா ஆங்கவைபோலத்
தாம்தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத்தவையே.

6. உணர் உரு அசத்தெனின், உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத்தாமென
இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே.

7. யாவையும் சூனியம் சத்தெதிராதலின்,
சத்தேயறியாது, அசத்திலது அறியாது
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா.

8. ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்டு
அந்நிய மின்மையின் அரன் கழல் செலுமே.

9. ஊனக்கண்பாசம் உண்ராப்பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
யுராத் துனைத்தேர்த்தனப் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதி விதி
எண்ணும் அஞ்செழுத்தே.

10. அவனே தானே யாகிய அந்நெறி
யேகனாகி யிறைபணி நிற்க,
மலமாயை தன்னொடும் வல்வினையின்றே.

11. காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காணவுளத்தைக்கண்டு காட்டலின்,
அயரா அன்பின் அரன் கழல்செலுமே.

12. செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா
அம்மலங்கழிஇயன் பரொடுமரீ இ,
மாலறநேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரனெனத்தொழுமே.