Tag: शुद्धाद्वैत_शैवसिद्धांत

  • Thodum Kuzhaiyum

    Thodum Kuzhaiyum


    சிவபெருமானது தோடும்‌ குழையும்‌

    TaHiEnFrEs

    வலக்காதில்‌ குழையும்‌, இடக்காதில்‌ தோடும்‌ கூத்தப்பெருமான்‌ அணிந்திருக்கிறார்‌. அதன்‌ குறிப்பு ஆணொடு பெண்ணாய்‌ அமைந்த இவ்வுலகம்‌ தன்னுரு என்பதையும்‌, வையகம்‌ முழுவதும்‌ தன்‌ வடிவு எனப்படுமே என்பதையும்‌ உணர்த்தும்‌ திருக்குறிப்பாம்‌. வலக்காது துடியோசையாகிய ஒலியுலகப்‌ படைப்புக்கு இடம்‌ தந்து நிற்பதையும்‌, இடக்காது அழிவாற்றலை அடக்கியாளுவதாகிய அருளாற்றலையும்‌ அறிவிப்பதே சிவசக்திகளின்‌ தனித்தன்மை என்பதை விளக்குவதாம்‌.

    நீலகண்டம்‌

    இது இறைவனுடைய அருளாற்றலை விளக்குவது என்ற

    குறிப்பை,

    “ கோலால மாகிக்‌ குரைகடல்வாய்‌ அன்றெழுந்த ஆலாலம்‌ உண்டான்‌ அவன்சதுர்தான்‌ என்னேடீ
    ஆலாலம்‌ உண்டிலனேல்‌ அன்றயன்மால்‌ உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம்‌ வீடுவர்காண்‌ சாழலோ ”

    என்று மாணிக்கவாசகர்‌ கூறும்‌ திருச்சாழல்‌ பகுதியால்‌ அறியலாம்‌. அன்றியும்‌, அமரர்‌ சாகும்‌ நஞ்சை உண்டும்‌ தான்‌ சாவாமையால்‌ அவருடைய நித்தியத்தன்மையை விளக்குவதும்‌ ஆம்‌.

    திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியீடான ஆடல்வல்லான் என்னும் நூலில் இருந்து…

  • Mahavidwan Meenakshi Sundaram Pillai

    Mahavidwan Meenakshi Sundaram Pillai


    TaHiEnFrEs

    திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன மஹாவித்துவான் சைவத்திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று

    ஒவ்வொரு தலபுராண ஆசிரியரும் ஒவ்வொரு வகையில் அவையடக்கப் பாடல்களைப் பாடிச் சிறப்பித்திருக்கக் காணலாம். எடுத்துக்காட்டாக,

    திருவம்பர்த் தலபுராணத்தில் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கூறும் அவையடக்கப் பாடல்கள் அவர்தம் பெரும் புலமையைச் சுட்டுவன. இவர்தம் ஆறு பாடல்களும் சுவைபட அமைந்துள்ளன.

    இறையருளே துணை

    பிரமதேவர் வழிபட்ட திருவம்பர்ப் பிரமபுரேசரின் புராணம் பாடுவதற்கு உனக்குத் தகுதியில்லை என்று சிலர் கூறக்கூடும், ஒரு காலத்தில் திருமால் முதலிய தேவர்களும் கூடத் தன்னை அசைக்க முடியாதபடி நிலை பெற்று நின்று, ஒரு துரும்பும் கூட வெற்றி பெற்றது என்னும் வரலாற்றைக் கேனோபநிடதம் கூறுகின்றது. ஆதலின் இறையருள் பெற்றால். இறையருளைத் துணையாகப் பற்றினால், எளியவன் ஆகிய யானும் இந்நூலைப் பாடுதல் இயலும்.

    “பிரமனார் பூசை கொண்டு பெருந்திருக் கோயில் மேய பரமனார் புராணம் பாடும் பண்புனக் கில்லை என்னில் உரமனார் அணங்கி னோர்முன் னோரைவெல் துரும்பு போலத் திரமனார் அருள்இ லேசம் சேர்தரின் உண்டாம் அன்றே.

    திரிசிரபுரம் மஹாவித்வான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய புராணங்கள் எழுபதிற்கும் மேற்பட்டன. பதிகம், பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, யமகவந்தாதி, திரிபந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, மாலை, தூது என்று பல பிரபந்தங்களும் இயற்றியுள்ளார். அவைகளில் 44 பிரபந்தங்களை திரு உ.வே.சா ஐயரவர்கள் பதிப்பித்துள்ள பிள்ளையவர்களின் பிரபந்தத் திரட்டிற் காணலாம்.

  • Dhaksha Kaandam

    Dhaksha Kaandam


    புஷ்பேஷு கந்தவஜ் ஜ்ஞேயஸ் திலேஷ்வபிச தைலவத் |
    கண்டாயாம் த்வநிவத் த்வக்நௌ ப்ரபாவத் பரமேஸ்வர: |
    ஸர்வத்ர ஸர்வதா தேவஸ் ஸர்வேஷ்வபிச ஸம்ஸ்தித: ||

    • தக்ஷ காண்டம்

    “மலரில் மணம் போன்றும், எள்ளில் எண்ணெய் போன்றும், மணியில் நாதம் போன்றும், அக்கினியிற் பிரகாசம் போன்றும் எவ்விடங்களிலும் எக்காலங்களிலும் எப்பொருள்களிலும் சிவபெருமான் வியாபித்துள்ளார் ‘