Tag: शुद्धाद्वैत_शैवसिद्धांत

  • The Mahātmya of Tiruvānaikkā: A Saiva Siddhānta Perspective

    The Mahātmya of Tiruvānaikkā: A Saiva Siddhānta Perspective


    TaHiEnFrEs

    திருவானைக்கா திருத்தலப்பயன்:

    இத்தலம் அடைந்தவர்க்குத் தானம், தருமம், வேள்விபுரிதல் ஞானம், செபம், கல்வி, நன்மை, யோகம். மோனம், தீர்த்த மாடல், முத்திசாதனை முதலியன வேண்டா. இப் பதியை அடைவதே எல்லாப் பயனும் நல்கும் என்பர் தந்திவனப்புராண( திருவானைக்கா தலபுராண நூல்களில் ஒன்று) ஆசிரியரான கமலை ஸ்ரீ ஞானப்பிரகாசர்.

    “தானம்ஏன் தவம்ஏன் மிக்க தருமம்ஏன் வேள்வி தான்ஏன் ஞானம்ஏன் செபம்ஏன் கல்வி தன்மைஏன் யோகந் தான்ஏன் மோனம்ஏன் தீர்த்தந் தான்ஏன் முத்திசா தனைஏன் சுத்த ஞானமேன் மையினால் ஓங்கும் அப்பதி அடைந்து ளார்க்கே”
    (தலமகிமைச் சருக்கம் பா. 96)

    இத்தல புராணத்தினிடையே பல புராண வரலாறுகளையும் இணைத்துக் கூறுகிறார். திருஞானசம்பந்தப் பெருமான் சமணர் வரலாறு (200), சிவபெருமான் இந்திரன் வடிவில் வந்தது (287), திரிபுரம் எரித்தது (291), அமுதம் கடைந்தது (392) போன்ற பல செய்திகள் அமைந்துள்ளன.

  • The Role of Īśvara in the Universe: A Saiva Siddhānta Perspective

    The Role of Īśvara in the Universe: A Saiva Siddhānta Perspective


    TaHiEnFrEs

    முதல்வனாகிய சிவபெருமான் தொழில் புரிதலின் உருவுடையனாதல் வேண்டும். உடம்பின்றி வினைசெய்தல் கூடாது ஆதலினால்; என்பது பூருவ பக்கம்.

    அதற்கு விடை : தன் உடம்பை உயிர் உருவம் இன்றியே இயக்குகிறது; இறைவனும் அவ்வாறு உருவின்றி நின்றே தன் உருவமாகிய உலகைத் தொழிற்படுத்துதல் அமையும் என்பது. உலகமே இறைவனது உடம்பு. உலகத்தில் உள்ள சராசரங்கள் இறைவனுக்கு
    மெய் வாய் கண் போன்ற உறுப்புக்கள். உடம்புதோறும் உள்ள உயிர்கள் அறிவுப்பொறி போல்வன. முதல்வனது விழைவு, அறிவு, செயல் ஆற்றல்கள், மனம், புத்தி, ஆங்காரம் என்னும் அகக்கரணங்கள் போல்வன. இங்ஙனம் நின்று உயிர்களாகிய பொறிகளுக்கு முதல்வன் அறிவை விளக்கி அவற்றைச் செயற்படுத்துவன். இவ்வாறு முதல்வன் செய்துவரும் செயலுக்கு நுண்ணிய ஐந்தொழில் என்பது பெயர்.

    இதனைப் பின்வரும் சித்தியார் செய்யுள் எடுத்துக் கூறுகிறது:

    “உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக
    அலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக
    அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி ஐந்து
    நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன் நாதன் “

    இனிச் சிலர் பின்வருமாறு வினாவை எழுப்புவர்: குடத்தையும் அதனை வனையும் குயவனையும் ஓரிடத்து முன்கண்டவன் வேறிடத்தில் குடத்தை மட்டும் காண்பனாயின், இக்குடத்தை வனைவதற்கு ஒரு வினைமுதல் இருத்தல் வேண்டும் எனக் கருதி உணர்வன். ஆனால் உலகத்தையும் உலகத்தைப் படைத்த இறைவனையும் ஒருவன் முன்னர் எப்பொழுதும் ஒருங்கே கண்டதில்லை. ஆதலினால், உலகத்தை மட்டும் கண்டு, அதனை ஆக்கியோன் ஒருவன் உளன் என்பது எவ்வாறு கருதல் அளவையாகும்? என்பது பூருவ பக்கம்.

    அதற்கு விடை : சமையலறையில் புகையினையும் அதன் காரணமான தீயினையும் ஒருங்கே கண்டவன் மற்றொரு சமையலறையில் புகை மாத்திரம் காணும்போது அங்குத் தீயும் உண்டென மனத்துத் துணிதல் கூடும். மலைமேல் புகையைமட்டுங் கண்டு அங்குத் தீ உண்டு என்பதைச் சமையல் அறையில் கண்ட புகையை எடுத்துக்காட்டித்
    துணிதல் கூடுமா? எனின், கூடாது எனல் வேண்டும். ஏனென்றால் சிறிதாகிய சமையற் புகைக்குப் பெரிதாகிய மலையிற் புகை வேறு பாடுடையது. ஆனால் மலையிற் புகையைக் கண்டு அங்குத் தீ உண்டு என்னும் துணிபு நிகழும் என்பதே தலையாய அறிவினார் கொள்கை. ஆண்டுத் துணிபு நிகழாது என்போன் அனுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டோன் அல்லன். இரண்டு புகைகளுக்கும் வேறுபாடு உண்டேனும், புகை என்னும் பொதுமைபற்றி அங்கே துணிவு நிகழும் என்பது கருத்தாயின், உலகத்தினிடத்தும் அது பொருந்தும். எவ்வாறெனின், செயப்படு பொருளையும், செயலையும், செய்வோனையும் ஒருங்குடன் கண்டு வந்தவன், பிறிதோரிடத்துச் செயப்படுபொருளை மாத்திரம் காண்பானாயின், காரியமாதற் பொதுமைபற்றி, அதுவும் செய்வோனை உடைத்து என்று துணிதல் பொருத்தமே ஆகும்.

    சிவஞானபாடியத் திறவு (1977) என்னும் நூலில் சைவத்திரு க. வச்சிரவேல் முதலியார் அவர்கள்.

  • An Examination of the Padana and Bheda Schools of Saivam

    An Examination of the Padana and Bheda Schools of Saivam


    TaHiEnFrEs

    ஆணவந்தான் அநாதிஅந்த மடையா தாகும்
    அடையின்அந்த ஆன்மாவும் அழியுமெனிற் செம்பிற்
    காணலுறுங் களிம்பிரத குளிகைபரி சிக்கக்
    கழியுஞ்செம் புருநிற்கக் கண்டோ மன்றே
    தாணுவின்தன் கழலணையத் தவிரும்மலந் தவிர்ந்தால்
    தான்சுத்த னாயிருக்கை முத்திஅரன் தாளைப்
    பூணவேண் டுவதொன்று மில்லையெனின் அருக்கன்
    புகுதஇருள் போம்அடியிற் பொருந்தமலம் போமே

    சிவஞான சித்தியார்.

    (கொ-டு) இரத குளிகை பரிசிக்கச் செம்பில் காணலுறு களிம்பு கழியும் எனவும், மலம் தவிரும் எனவும், பொருந்தவே மலம் போம் எனவுங் கூட்டுக.

    (பொ-ரை.) முற்கூறிய ஆணவமலம் அநாதி நித்தமாதலால், முத்தியில் அது அழிவதில்லை. அழியுமாயின், அநாதி
    நித்தமாகிய ஆன்மாவும் அழியுமெனப்பட்டு இரு பொருளும் நித்தமென்பது இழுக்காய் முடியும். ஆதலின், முத்தி நிலையினும் சகசமாகிய ஆணவமலம் நீங்குமாறில்லை என்பர் பாடாணவாதசைவர்.

    மலத்தோடு கூடி அறியாமையாய் அடங்கியிருத்தலின் பாடாணவாதியெனப் பட்டார். பாடாணம் என்பது கல். அநாதியாகிய செம்பினிடத்து அநாதியாயுள்ள களிம்பு இரதகுளிகை பரிசித்த மாத்திரத்தில் நீங்கி அச் செம்பு பொன்னுருவாய் நிற்கக் காண்பது போல், இறைவன்றிருவடியாகிய மெய்ஞ்ஞானஞ் சார்ந்த மாத்திரையே உயிரோடு சகசமாய் நின்ற ஆணவமலம் நசிக்கும்; நசிக்கவே உயிர் ஆணவமலத்தின் வேறாய்ச் சிவமாய் நிற்றற்கு இழுக்கில்லையாதலின் அப்பாடாணவாத சைவர் மதம் பொருந்தாது.

    இனி மலம் நீங்கப் பெற்ற மாத்திரையே மெய்ஞ்ஞானம் சாரும். அதுவேமுத்தி; மலம் நீங்கியதன் மேலும் திருவடியடைதல் வேண்டா மென்பர் பேதவாத சைவர். இவர் சிவனோடு கலவாமையின் பேதவாதி எனப்பட்டார். இருள் நீங்கிச் சூரியனொளி பிரகாசித்த விடத்தும் சூரியனொளியோடு கண்ணொளி கலந்தால் இருள் நீங்கும். கலவாது இமைகளால் மூடப் பெற்றிருப்பின் கண்ணுக்கு இருள் நீங்காதவாறு போல, ஆன்மாவின் அறிவுக்கு மெய்ஞ்ஞானம் பிரகாசித்து ஆன்மா இறைவனுடன் கலந்தால் மலம் பற்றறக் கழியும். இன்றேல் ஆன்மாவினிடத்து மலம்‌ பற்றறக்‌ கழியாது: ஆதலால்‌, அப்‌ பேதவாத சைவர்‌ மதமும்‌ பொருந்தாது. (எ-று)

    சிவஶ்ரீ அருணந்தி சிவாசாரியர் அருளிச்செய்த சிவஞானசித்தியார் சுபக்கம் மூலமும்,உரையும்(1926) என்னும் நூலில் இருந்து…

    (இதற்கு திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞானயோகிகள் அருளிய உரையைத் தழுவி, திருவாவடுதுறை ஆதீன சைவப் பிரசாரகரும் தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கத்துச் சித்தாந்த சாத்திர போதகருமாகிய,தூத்துக்குடி பொ.முத்தைய பிள்ளை எழுதிய பொழிப்புரை)

  • Saiva Samaya Veda Nirūpaṇam: An Exposition of Vedic Legacy in Saivam

    Saiva Samaya Veda Nirūpaṇam: An Exposition of Vedic Legacy in Saivam


    TaHiEnFrEs

    தேவாரத்‌ திருமுறைகளில்‌ பாடப்பட்டுள்ள வேதங்கள்‌ இருக்காதி வேதங்களே என்பதை எடுத்துக்கூறி நிரூபணம்‌ செய்யும்‌ வகையில்‌ திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை சார்ந்த சைவப்பெரியோர்‌ மா. சாம்பசிவம்‌ பிள்ளை அவர்கள்‌ தமது தள்ளாத 80 வயதில்‌ சைவமரபின்‌ மீதுகொண்ட அதீதப்பற்றின்‌ காரணமாக 1926-ஆம்‌ ஆண்டு “திருநான்மறை விளக்க ஆராய்ச்சி” என்ற நூலை எழுதி வெளியிட்டார்கள்‌.

    இந்நூலுக்காக அக்காலத்தில்‌ தமிழகத்திலும்‌ ஈழத்திலும்‌ இருபத்தியேழு சைவப்பெரியோர்களிடம்‌ வித்வத்‌ அபிப்ராயம்‌ பெற்று முகவுரையாக வெளியிட்டார்கள்‌. இவை அனைத்தும்‌ ஒரு தனிநூலாக வரும்‌ அளவிற்கு உயர்‌ சிந்தனை கொண்டவை.

    அவ்வாறு பெற்ற வித்வத்‌ அபிப்ராயத்தில்‌ யாழ்ப்பாணம்‌ ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத பண்டிதர்‌ அவர்கள்‌ கட்டுரையும்‌ ஒன்று. இக்கட்டுரையே குருவருள்‌ திருவருள்‌ துணைக்கொண்டு இப்பொழுது ‘சைவசமய வேதநிரூபணம்’ நூலாக வெளிவருகின்றது.

    ஸ்ரீசுவாமிநாத பண்டிதர்‌ அவர்களின்‌ இக்கட்டுரை சைவசமயத்தவர்‌ அனைவரும்‌ படித்து பயன்பெற வேண்டிய ஒன்றாகும்‌.

    மூலநூலாகிய சிவத்திரு மா. சாம்பசிவம்‌ பிள்ளை இயற்றிய திருநான்மறை விளக்க ஆராய்ச்சி புத்தகம்‌ சைவசமயத்திற்கு ஓர்‌ உன்னத வரப்பிரசாதமாகும்‌. இந்நூல்‌ சைவசமயத்திற்கு ஒரு கவசமாக திகழ்ந்தது என்றால்‌ அது மிகையல்ல. உத்தமோத்தமர்‌ மா. சாம்பசிவம்‌ பிள்ளை அவர்களை என்றென்றும்‌ நினைவில்‌ நிறுத்தி போற்றவேண்டியது சைவசமயத்தவரின்‌ தலையாய கடமையாகும்‌.

    சைவசமய வேதநிரூபணம் என்னும் பெயரில் வெளிவந்த இந்நூலானது
    திருச்சிராப்பள்ளி
    ஶ்ரீ மா. சாம்பசிவம் பிள்ளையவர்கள்
    இயற்றிய
    ‘திருநான்மறைவிளக்க ஆராய்ச்சி’ நூலின்
    வித்துவப் பெரியார் அபிப்ப்ராயம்
    பகுதியிலிருந்து எடுத்தாளப்பட்டது,

    வழங்கியோர் – யாழ்ப்பாணம்
    ஶ்ரீலஶ்ரீ சுவாமிநாத பண்டிதரவர்கள்,

    மறுபதிப்பும் – வெளியீடும்:
    ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம்,
    கள்ளகுறிச்சி – 606202.

    देवारा तिरुमुरैगाल में वर्णित वेद ऋग्वेद आदि वेद ही हैं, इसे स्पष्ट करने और प्रमाणित करने के लिए तिरुचिरापल्ली मलाईकोट्टई से संबद्ध शैव प्रमुख मा. साम्बासिवम पिल्लै जी ने अपनी 80 वर्ष की आयु में शैव परंपरा के प्रति अपनी अत्यधिक भक्ति के कारण 1926 में “तिरुनान्मरै विलक्का आराय्च्चि” नामक पुस्तक लिखी और प्रकाशित की।

    इस पुस्तक के लिए उस समय तमिलनाडु और ईलम में 27 शैव प्रमुखों से विद्वानों की राय प्राप्त की गई और उन्हें प्रस्तावना के रूप में प्रकाशित किया गया। ये सभी उच्च विचारों से भरे हुए हैं और एक अलग पुस्तक के रूप में आने के योग्य हैं।

    ऐसी ही एक विद्वानों की राय याल्पपानम श्रीलश्री स्वामीनाथ पंडित जी की है, जो इस पुस्तक “सैवसमय वेदनिरूपणम” के रूप में अब प्रकाशित हो रही है।

    श्री स्वामीनाथ पंडित जी का यह लेख सभी शैव समुदाय के लोगों के लिए पढ़ने और लाभ उठाने के लिए अत्यंत महत्वपूर्ण है।

    मूल पुस्तक “तिरुनान्मरै विलक्का आराय्च्चि” शैव समुदाय के लिए एक महान वरदान है। यह पुस्तक शैव समुदाय के लिए एक कवच के रूप में कार्य करती है, और यह कहना अतिशयोक्ति नहीं होगी। उत्तमोत्तम मा. साम्बासिवम पिल्लै जी को हमेशा याद रखना और उनकी पूजा करना शैव समुदाय की प्रमुख जिम्मेदारी है।

    “सैवसमय वेदनिरूपणम” नामक यह पुस्तक तिरुचिरापल्ली श्री मा. साम्बासिवम पिल्लै जी द्वारा रचित “तिरुनान्मरै विलक्का आराय्च्चि” पुस्तक के विद्वान पंडितों की राय वाले भाग से ली गई है। इसे प्रदान करने वाले याल्पपानम श्रीलश्री स्वामीनाथ पंडित जी हैं। पुनर्मुद्रण और प्रकाशन: आदिसैवर नलवाझ्वु मैयम, कल्लाकुरिची – 606202।

    The Vedas mentioned in the Dēvāra Tirumurugai are indeed the R̥gveda and other Vedas. To clarify and prove this, Śrī Mā. Cāmpacivam Piḷḷai, a prominent Śaivite from Tiruccirāppaḷḷi Malaikōṭṭai, wrote and published the book “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” in 1926 at the age of 80, driven by his deep devotion to the Śaivite tradition.

    This book features endorsements from 27 Śaivite scholars from Tamil Nadu and Eelam, which were obtained and published as a preface. These endorsements are filled with high thoughts and are worthy of being published as a separate book.

    One such scholarly endorsement is from Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar, which is now being published as the book “Saiva Samaya Veda Nirūpaṇam”. Śrī Svāminātha Paṇḍitar’s article is extremely important for all Śaivites to read and benefit from.

    The original book “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” is a great boon to the Śaivite community. It serves as a shield for the community, and it’s not an exaggeration to say so.

    Remembering and honouring the great Śrī Mā. Cāmpacivam Piḷḷai is a primary responsibility of the Śaivite community.

    The book “Saiva Samaya Veda Nirūpaṇam” is extracted from the scholarly endorsements section of Śrī Mā. Cāmpacivam Piḷḷai’s book “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi”. It was provided by Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar.

    Republished and distributed by: Ādisaivara Nalavāzhvu Maiyam, Kallakurichi – 606202.

    Les Védas mentionnés dans les Dēvāra Tirumurugai sont bien le R̥gveda et les autres Védas. Pour clarifier et prouver cela, Śrī Mā. Cāmpacivam Piḷḷai, un éminent Śaivite de Tiruccirāppaḷḷi Malaikōṭṭai, a écrit et publié le livre “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” en 1926 à l’âge de 80 ans, poussé par sa profonde dévotion à la tradition Śaivite.

    Ce livre présente des approbations de 27 érudits Śaivites du Tamil Nadu et de l’Eelam, qui ont été obtenues et publiées en préface. Ces approbations sont remplies de pensées élevées et valent la peine d’être publiées dans un livre séparé.

    L’une de ces approbations savantes est celle de Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar, qui est maintenant publiée sous le titre “Saiva Samaya Veda Nirūpaṇam”. L’article de Śrī Svāminātha Paṇḍitar est extrêmement important pour tous les Śaivites à lire et à en tirer profit.

    Le livre original “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” est un grand bienfait pour la communauté Śaivite. Il sert de bouclier pour la communauté, et ce n’est pas une exagération de le dire.

    Se souvenir et honorer le grand Śrī Mā. Cāmpacivam Piḷḷai est une responsabilité première de la communauté Śaivite.

    Le livre “Saiva Samaya Veda Nirūpaṇam” est extrait de la section des approbations savantes du livre “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” de Śrī Mā. Cāmpacivam Piḷḷai. Il a été fourni par Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar.

    Réédité et distribué par : Ādisaivara Nalavāzhvu Maiyam, Kallakurichi – 606202.

    Los Vedas mencionados en los Dēvāra Tirumurugai son efectivamente el R̥gveda y otros Vedas. Para aclarar y demostrar esto, Śrī Mā. Cāmpacivam Piḷḷai, un destacado Śaivita de Tiruccirāppaḷḷi Malaikōṭṭai, escribió y publicó el libro “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” en 1926 a la edad de 80 años, impulsado por su profunda devoción a la tradición Śaivita.

    Este libro presenta aprobaciones de 27 eruditos Śaivitas de Tamil Nadu y Eelam, que se obtuvieron y publicaron como prefacio. Estas aprobaciones están llenas de pensamientos elevados y merecen ser publicadas en un libro separado.

    Una de estas aprobaciones eruditas es la de Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar, que ahora se publica bajo el título “Saiva Samaya Veda Nirūpaṇam”. El artículo de Śrī Svāminātha Paṇḍitar es extremadamente importante para que todos los Śaivitas lo lean y se beneficien.

    El libro original “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” es un gran beneficio para la comunidad Śaivita. Sirve como un escudo para la comunidad, y no es una exageración decirlo.

    Recordar y honrar al gran Śrī Mā. Cāmpacivam Piḷḷai es una responsabilidad principal de la comunidad Śaivita.

    El libro “Saiva Samaya Veda Nirūpaṇam” se extrae de la sección de aprobaciones eruditas del libro “Tirunāṉmarai Vilakkā Ārāyccchi” de Śrī Mā. Cāmpacivam Piḷḷai. Fue proporcionado por Yāḷppāṇam Śrīlaśrī Svāminātha Paṇḍitar.

    Reeditado y distribuido por: Ādisaivara Nalavāzhvu Maiyam, Kallakurichi – 606202.

    Reading : https://archive.org/details/saiva-samaya-vedanirupanam

  • The Supremacy of Śiva: An Exposition of Śuddha Advaita Śaiva Siddhānta

    The Supremacy of Śiva: An Exposition of Śuddha Advaita Śaiva Siddhānta


    TaHiEnFrEs

    ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னுமாறும் பகம் எனப்படுதலின்,இவை சிவபிரானுக்கே யுண்மையின் அவரே பகவான் எனப்படுவர்.

    அற்றேல், இவை யாறுஞ் சிவபிரானுக்குள்ளன என்பதற்குப் பிரமாண மென்னையெனின்; அவர்க்கு ஐசுவரிய முண்மைக்கு ஈசுர பதச்சுருதியும், வீரியமுண்மைக்கு உக்கிரபதச் சுருதியும், புகழுண்மைக்குச் சிவபதச்சுருதியும், திருவுண்மைக்கு இருக்குவேதமும், ஞானமுண்மைக்குச் சருவஞ்ஞ சுருதியும், வைராக்கியமுண்மைக்குக் காமரிபுபதச்சுருதியும் பிரமாணமாம் என்க.

    “திருவினாற்சிரேட்டர்” என்றும், “திருவையெய்தும் பொருட்டுச் சிவபிரானது விசித்திரரூபமாகிய லிங்கந் தேவராற் பூசிக்கப்பட்டது” என்றும் இருக்கு வேதங்கூறலின், ஈண்டுத் திருவெனப்பட்டது பொருட்டிரு அன்றென்க.

    வாய்மை, பொறை, தைரியம், அதிட்டித்தல், ஆன்மபோதம், சிருட்டித்தல், ஆசையின்மை, தவம், புத்தி, ஈசுரத்துவம் என்னுந் தசகுணங்களும் தருமமுஞ் சிவபிரானுக்கே இயைவன.

    இனி ஐசுவரியமுடையார், பெரும் புகழுடையார், வீரர், செல்வர், அரசர், சக்கிரவர்த்திகள் என்னுமிவரையும் இன்னோன்ன இயல்புடைய பிறரையும் பகவப்பெயரான் வழங்கார். மெய்யுணர்நத அவாவறுத்தார்கட் சிவம் பிரகாசித்தல் உண்மையின், அவரைப் பகவப்பெயரான் வழங்குப.

    அற்றேலஃதாக; பகவப்பெயர் சிவபிரானுக்குரியது என்பதற்கு எடுத்தோத் துண்டோவெனின்;- அதர்வண வேதமுடையார் சிவ நாமங்களுட் பகவ நாமங் கூறுதலானும், சுவேதாச்சுவதரோப நிடதஞ் சிவபிரானையே “மகேசன்” எனக் கூறுதலானும், எடுத் தோத்துண்டென்க.

     நிகண்டுநூலுடையார் பூசிக்கப்படுங் குணம் உடையரினையே பகவன் என்ப.

    இனி மனாதித்திரயங்களானுஞ் செயப்படும் பூசை சிவபிரா னுடையதே, திரு உருத்திரத்தில் “அவனைத்துதி” என்னும் மந்திரத்தான் விதிக்கப்பட்டமையின், அன்றியும், உபநிடதங்க ளெல்லாஞ் சிவோபாசனை செயற்பாற்று என முறையிடுகின்றன.

    ஶ்ரீ ஹரதத்தாசாரிய சுவாமிகளின் சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்.

    தமிழில் மொழிபெயர்த்து இயற்றியது யாழ்ப்பாணத்து வடகோவை வித்துவான் திரு சபாபதி நாவலர் அவர்கள்.

    மறுபதிப்பும் (2019) – வெளியீடும் ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம், கள்ளக்குறிச்சி – 606202

  • The Removal of Pāśa: The Fruit of Spiritual Knowledge

    The Removal of Pāśa: The Fruit of Spiritual Knowledge


    TaHiEnFrEs

    அவனே தானே யாகிய அந்நெறி
    ஏக னாகி இறைபணி நிற்க
    மலமாயை தன்னொடு வல்வினை யின்றே.

    -சிவஞானபோதம் –
    பத்தாம் சூத்திரம் –
    உண்மை அதிகாரம் – பயனியல்.

    ஒன்பதாம் சூத்திரத்தால் சாதனஞ்செய்யும் முறை கூறி இனி அச்சாதனத்தால் உண்டாகும் பயன், பாசத்தை விடுதலும் சிவனை அடைதலும் சிவனை அடைந்த பின்னர்த் தேகம் இருக்குமளவும் பிராரத்துவ வாசனை தாக்காதிருத்தலும் ஆதலால், அம்மூன்றனையும் மூன்று சூத்திரத்தால் பயனியல் என வைத்துக் கூறத்தொடங்கி, முதலாவது இப்பத்தாஞ் சூத்திரத்தால் பாச நீக்கமாகிய பயனை வகுத்துக் கூறுகிறார்.

    இச்சூத்திரத்தின் கருத்து யாதெனில், பாசக்ஷயம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று. நுதலல் – கருதல்.

    இக்கருத்துரையின் பொருளாவது, ஏழாம் சூத்திரத்தில் சாதிக்கும் பொருளாகிய உயிரினுடைய இயல்பையும், எட்டாம் சூத்திரத்தில் சாதித்துப் பெறப்படும் பொருளாகிய பயனியல்பையும், ஒன்பதாம் சூத்திரத்தில் சாதிக்கும் முறையையும் உணர்த்தி, இனி அந்தச் சாதனத்தால் ஆகிய பயனியல்பை வகுத்துக் கூறத் தொடங்கினார். ஆதலால் இவ்வியல் பயனியல் என்னும் பெயரினை உடையதாயிற்று.

    அப்பயனாவது பாசநீக்கமும் சிவப்பேறும் என இருவகைப்படும். அவ்விரண்டினுள் சுட்டுணர்வாலாகிய ஏகதேச நோக்கத்தைத் திருவைந்தெழுத்தினை உச்சரித்தலால் அறவே நீக்கிய பொழுது பெறப்படுவது ஆன்மசுத்தியின் பயனாகிய பாச நீக்கமாகும். அப்பாச நீக்கத்தைச் செய்து கொள்ளுகின்ற தன்மையை முற்சூத்திரத்தில் சிந்தித்த பொருளைத் தெளியும்முறையை உணர்த்தும் முகத்தால் உணர்த்துதல் என்பதாம்.

    ஒன்பதாம் சூத்திரத்தில் ஆன்ம சுத்தியையும் பத்தாம் சூத்திரத்தில் ஆன்ம லாபத்தையும் கூறுதலால் இந்த இருசூத்திரங்களும் சம்பந்தம் உடையனவாகும்.

    இச்சூத்திரத்தின் பொருளாவது: ஞானக்கண்ணினால் காணப்பட்ட முதல்வன் பெத்தநிலையில் உயிரினோடு உடனாய் நின்று அறியவும் அவ்வுயிருக்கு வேறாகக் காணப்படாமல் அவ்வுயிர் தானே அறிந்தேன் என்று சொல்லும்படி உயிரேயாய் ஒற்றுமைப்பட்டு அவ்வுயிரின் வழி நிற்பன்; அதுபோல முத்தி நிலையில் உயிர் முதல்வனோடு உடனாய் நின்று அறியவும் தான் (உயிர்) என அம்முதல்வனுக்கு வேறாகக் காணப்படாமல் அம்முதல்வனோடு ஒற்றுமைப்பட்டு அந்த இறைபணியின் வழுவாது நிற்பின் மலம் மாயை என்னும் இவ்விரண்டு மலங்களுடன் வலிமை பொருந்திய கன்மமலமும் இல்லையாய் ஒழியும் என்பதாம்.

    திரு த.ச.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அவர்கள் இயற்றிய சிவஞானபோதம் உரைநடை – பயனியல் (1978) என்னும் நூலில் இருந்து…

    இது திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் இருபத்திரண்டாவது குருமகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி வெளியிடப்பெற்றது.

  • A list of Saiva Siddhantha Acaryas

    A list of Saiva Siddhantha Acaryas


    1. Sadyojyoti
    2. ⁠Bhațța-Nārāyaņakaņțha
    3. ⁠Bhațța-Rāmakaņțha
    4. ⁠Śrīkaņțhasūri (author of Ratnatrayaparīkșā)
    5. Somaśambhū
    6. Vāgīśa-Munivar (author of Jñānāmrtam, TN)
    7. Sarvātmaśambhū
    8. Aghoraśiva Deśika
    9. Trilocanaśiva
    10. Hrdayaśiva
    11. Anantaśambhū
    12. Vaktraśambhū
    13. ⁠Tryambakaśambhū
    14. ⁠Uttuńgaśiva (Paddhatikāra)
    15. ⁠Varuņaśiva (Paddhatikāra)
    16. ⁠Rāmanātha (Paddhatikāra)
    17. ⁠Nigamajñāna Sambandha Śivācārya (Uncle)—Ādiśaiva
    18. ⁠Nigamajñāna Sambandha Śivācārya (Nephew)
    19. ⁠Kacchapeśvara Śivācārya (commentator on AghoraśIva’s Kriyākramadyotikā)
    20. ⁠Nirmalamaņideśika – Writer of the Prabhā commentary on AghoraśIva’s KKD
    21. ⁠Pañcākșarayogī (author of Śaivabhūșaņam)
    22. ⁠Śivāgrayogin
    23. ⁠Sūryabhațța (author of Śaivaparibhāșā & successor of Śivāgrayogin)
    24. ⁠Ārumukha Nāvalar (Jaffna)
    25. ⁠Kumārasvāmī Śivācārya (Jaffna)
    26. ⁠Jñānaprakāśa
  • The Nature of Śiva from Siddhānta Jñānarathinavallī

    The Nature of Śiva from Siddhānta Jñānarathinavallī


    TaHiEnFrEs

    அக்கினிமயமாகிய ஈசன் எங்கும் வியாபித்திருத்தலால் இவ்வுலகம் அக்கினிமயமென்று புராணங்கள் கூறுகின்றன.

    சிறியாநங்கை வேரைக்கண்டாற் பெரிய சர்ப்பமும் தலைமடங்கும். அதுபோல ஈசனது திருவருள் கிட்டினாற் பெரிய வினை மலையும் அழியும்.

    அசேதனப்பொருள்களாகிய சிந்தாமணி, கற்பகம் வேண்டினோர் வேண்டியாங்கு அளிக்குமாகில் சர்வஞானமுள்ள ஈசன் அன்பர்கள் வேண்டியாங்கு உபகரிப்பானென்பதற்கு யாதொரு தடையுமில்லையாம்.

    இறைவன் பெண்ணுமல்லன், ஆணுமல்லன், அலியுமல்லன் ஆனால் இவைகளினுள் வியாபித்து அப்பாலும் நிற்பன்.

    இறைவனுக்குச் சொரூப இலக்கணம் தடத்த இலக்கணம் என்று இரண்டு லக்ஷணங்கள் உள்ளன. சொரூபலக்ஷணம் உண்மைநிலை. தடத்தலக்ஷணம் உருவெடுத்து ஆன்மாவிற்கு உபகரிக்கும் நிலை.

    அவன் காலம்போல அரூபியாய் நின்று சடசித்துக்களை இயக்குவான்.

    சூரியனைப்போலும் சிவம்; அவன் கிரணத்தைப்போலும் சத்தி; அதில் கலக்கும் கண்ணொளி போலும் ஆன்மா.

    ஆகாயத்தைப் பிரியாது நின்ற காற்றுக்குரிய, கந்தம்,வெம்மை, தட்பம், முதலியன அவ்வாகாயத்திற்கு இன்றாதலின், இறைவனது வியாபகத்திற் சஞ்சரிக்கும், ஆன்மாவுக்குரிய ஆணவம் அவ்விறைவனுக்கு இல்லையாகும்.

    இறைவன் உயிர்களுக்குத் தன்மை, முன்னிலை, படர்க்கையாய் நின்று உணர்த்துவன். தன்மை, ஆணவத்தைநீக்கித் தன்னை உள்ளபடி தோற்றுவித்தல். முன்னிலை, நன்மை தீமைகளைக் குருவாய்த் தோன்றித் துரத்துதல்.படர்க்கை, நூலினால் காணவைத்திடுதல்.

    திரு பால்வண்ண முதலியார் அவர்கள் இயற்றிய சித்தாந்த ஞானரத்தினாவளி(1906) என்னும் நூலில் இருந்து…

    ग्निमयमय ईश्वर सर्वत्र व्याप्त होने के कारण, पुराणों में कहा गया है कि यह जगत अग्निमय है।

    जैसे छोटी सी अनंतमूल की जड़ बड़े से बड़े सर्प को भी शांत कर सकती है, वैसे ही ईश्वर की कृपा से बड़े से बड़े कर्मों का नाश हो सकता है।

    यदि जड़ वस्तुएँ जैसे चिन्तामणि और कल्पवृक्ष इच्छुकों की इच्छा पूरी कर सकते हैं, तो सर्वज्ञ ईश्वर अपने भक्तों की इच्छा पूरी करने में कोई बाधा नहीं है।

    ईश्वर न तो स्त्री है, न पुरुष है, और न ही नपुंसक है। वह इन सभी रूपों में व्याप्त है और फिर भी इनसे परे है। ईश्वर के दो लक्षण हैं: स्वरूप लक्षण और तदत्त लक्षण। स्वरूप लक्षण उसका वास्तविक स्वरूप है, जबकि तदत्त लक्षण जीव के लिए उपकारक रूप है।

    ईश्वर सूर्य की तरह है; उसकी शक्ति सूर्य की किरणों की तरह है; और आत्मा नेत्र में प्रवेश करने वाले प्रकाश की तरह है। जैसे आकाश से अलग न होने वाली वायु के गुण आकाश को प्रभावित नहीं करते, वैसे ही ईश्वर के स्वभाव को आत्मा के गुण प्रभावित नहीं करते।

    ईश्वर जीवों के लिए तीन रूपों में प्रकट होता है: प्रथम पुरुष (स्वयं को प्रकट करना), मध्यम पुरुष (शिक्षक के रूप में प्रकट होना), और अन्य पुरुष (ग्रंथों के माध्यम से ज्ञान देना)।

    यह अंश श्री पलवन्न मुटलियार द्वारा रचित “सिद्धांत ज्ञान रत्नावली” (1906) से लिया गया है।

    The Lord, being of the nature of fire (Agnimayamaya), pervades everything. 

    The Puranas say that the universe is made of fire. Just as the root of the Ananga plant can subdue even the largest of serpents, the Lord’s grace (Īśvara prasāda) can destroy even the greatest of karmas.

    If inanimate objects like the Cintāmaṇi and the Kalpaka tree can grant wishes to those who desire them, then surely the all-knowing Lord (Sarvajña Īśvara) can fulfill the desires of His devotees without any obstacle.

    The Lord is not limited by gender; He is neither female (stri) nor male (pumān) nor neuter (napuṁsaka). He pervades all these forms and yet stands beyond them. The Lord has two characteristics (lakṣaṇe): Svarūpa Lakṣaṇa (essential nature) and Tad-atta Lakṣaṇa (manifested form).

    The Lord is like the sun (Sūrya), His energy (Śakti) is like the sun’s rays, and the soul (jīva) is like the light that enters the eye. Just as the qualities of the air do not affect the sky, the Lord’s nature is not affected by the soul’s qualities.

    The Lord manifests Himself to the souls in three ways: as the Self (Prathama Puruṣa), as the Guru (Madhyama Puruṣa) guiding through good and bad actions, and as the scriptures (Anya Puruṣa) revealing knowledge. 

    This is from the book Siddhānta Jñānarathinavalli (1906) written by Tiru Pālvaṇṇa Mūtaliyār.

    Le Seigneur, étant de la nature du feu (Agnimayamaya), pénètre tout.

    Les Puranas disent que l’univers est fait de feu. Tout comme la racine de la plante Ananga peut soumettre même les plus grands serpents, la grâce du Seigneur (Īśvara prasāda) peut détruire même les plus grands karmas.

    Si des objets inanimés comme le Cintāmaṇi et l’arbre Kalpaka peuvent exaucer les vœux de ceux qui les désirent, alors certainement le Seigneur omniscient (Sarvajña Īśvara) peut réaliser les désirs de ses dévots sans aucun obstacle.

    Le Seigneur n’est pas limité par le genre ; Il n’est ni féminin (stri) ni masculin (pumān) ni neutre (napuṁsaka). Il pénètre toutes ces formes et pourtant se tient au-delà d’elles. Le Seigneur a deux caractéristiques (lakṣaṇe) : Svarūpa Lakṣaṇa (nature essentielle) et Tad-atta Lakṣaṇa (forme manifestée).

    Le Seigneur est comme le soleil (Sūrya), Son énergie (Śakti) est comme les rayons du soleil, et l’âme (jīva) est comme la lumière qui entre dans l’œil. Tout comme les qualités de l’air n’affectent pas le ciel, la nature du Seigneur n’est pas affectée par les qualités de l’âme.

    Le Seigneur se manifeste aux âmes de trois manières : en tant que Soi (Prathama Puruṣa), en tant que Guru (Madhyama Puruṣa) guidant à travers les actions bonnes et mauvaises, et en tant qu’Écritures (Anya Puruṣa) révélant la connaissance.

    Ceci est tiré du livre Siddhānta Jñānarathinavalli (1906) écrit par Tiru Pālvaṇṇa Mūtaliyār.

    El Señor, siendo de la naturaleza del fuego (Agnimayamaya), penetra todo.

    Los Puranas dicen que el universo está hecho de fuego. Al igual que la raíz de la planta Ananga puede someter incluso a las serpientes más grandes, la gracia del Señor (Īśvara prasāda) puede destruir incluso los karmas más grandes.

    Si objetos inanimados como el Cintāmaṇi y el árbol Kalpaka pueden conceder deseos a aquellos que los desean, entonces seguramente el Señor omnisciente (Sarvajña Īśvara) puede cumplir los deseos de sus devotos sin ningún obstáculo.

    El Señor no está limitado por el género; No es ni femenino (stri) ni masculino (pumān) ni neutro (napuṁsaka). Él penetra todas estas formas y sin embargo se mantiene más allá de ellas. El Señor tiene dos características (lakṣaṇe): Svarūpa Lakṣaṇa (naturaleza esencial) y Tad-atta Lakṣaṇa (forma manifestada).

    El Señor es como el sol (Sūrya), Su energía (Śakti) es como los rayos del sol, y el alma (jīva) es como la luz que entra en el ojo. Al igual que las cualidades del aire no afectan al cielo, la naturaleza del Señor no se ve afectada por las cualidades del alma.

    El Señor se manifiesta a las almas de tres maneras: como el Yo (Prathama Puruṣa), como el Guru (Madhyama Puruṣa) guiando a través de acciones buenas y malas, y como las Escrituras (Anya Puruṣa) revelando conocimiento.

    Esto es del libro Siddhānta Jñānarathinavalli (1906) escrito por Tiru Pālvaṇṇa Mūtaliyār.

  • Śivajñāna Siddhiyār : Insights on Liberation

    Śivajñāna Siddhiyār : Insights on Liberation


    TaHiEnFrEs

    எல்லாம் சிவன் செயலென்றெண்ணும் இறைபணியில் நில்லாதார் செய்யும் கிரியா யோகங்களால் பிறப்பு அறாதெனக் கூறுகின்றது.

    நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
    நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும்
    நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும்
    நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின்
    ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
    எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை ஞானங்
    கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்
    குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர்.

    சிவஞான சித்தியார்

    Transliteration :

    Nāṭukaḷiṟ pukkuḻaṉṟum kāṭukaḷiṟ carittum 

    nākamuḻai pukkiruntum tākamutal tavirntum 

    nīṭupala kālaṅkaḷ nittarā yiruntum 

    niṉmalañā ṉattaiyillār nikaḻntiṭuvar piṟappiṉ 

    ēṭutaru malarkkuḻalār mulaittalaikkē iṭaikkē 

    eṟiviḻiyiṉ paṭukaṭaikkē kiṭantumiṟai ñāṉaṅ 

    kūṭumavar kūṭariya vīṭuṅ kūṭik 

    kuñcitta cēvaṭiyum kumpiṭṭē iruppar.

    (கொ-டு) நின்மல ஞானத்தை இல்லார் நாடுகளில் புக்கு உழன்றும் எனவும்,இறை ஞானம் கூடுமவர் ஏடுதரும் மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே எரிபடுவிழியின் கடைக்கே கிடந்தும் எனவுங் கூட்டுக.

    (பொ-ரை) மேற் கூறியவாறு இறைபணியாகிய நின்மல ஞானமில்லாதவர் புண்ணிய தேயங்களிற் சென்று புண்ணிய தீர்த்தங்களில் ஆடியும், புண்ணியதலத்தைத் தரிசித்தும், வனத்திற் சென்று கிழங்கு, பழம் முதலியவற்றைப் புசித்தும், மலையிலுள்ள குகையில் யோகத்திலிருந்தும், அந்த யோகப் பயிற்சி வலியினால் பசியினையும், நீர்வேட்கை முதலியவற்றையும் ஒழிந்தும், நெடுங்காலம் மரணமில்லாதிருந்தும், பிறப்பென்னுந் துன்பத்தினின்றும் நீங்கமாட்டார். அவ்விறை பணியில் நிற்போர் இதழ்பொருந்திய மாலையணிந்த கூந்தலையுடைய மங்கையர் கொங்கையிடம் தோயப்பெற்று இன்பம் அநுபவிக்கினும் பிறப்பினின்று நீங்கிப்பெறுதற் கரிய வீட்டினைப் பொருந்திச் சிவந்த குஞ்சிதபாதத்தின் கண் அடங்கி நிற்பர். ஆதலால், எத்துணை நன்மைகளும் இறைபணிக் கிணையாகா. எத்துணைத் தீமைகளும் இதன் பயனைக்கெடுக்க மாட்டாவாம்.(எ—று.)

    இதனாலே, இறைபணியில் நிற்பவரது ஆற்றல் கூறியவாறு. ஆற்றல்— எத்துணை நன்மைகளும் இறைபணிக்கியிணையாகாமையும், எத்துணைத் தீமைகளும் அதன் பயனைக் கெடுக்கமாட்டாமையுமாம்.

    சிவஶ்ரீ அருணந்தி சிவாசாரியர் அருளிச்செய்த சிவஞானசித்தியார் சுபக்கம் மூலமும்,உரையும்(1926) என்னும் நூலில் இருந்து…

    (இதற்கு திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞானயோகிகள் அருளிய உரையைத் தழுவி, திருவாவடுதுறை ஆதீன சைவப் பிரசாரகரும் தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கத்துச் சித்தாந்த சாத்திர போதகருமாகிய, தூத்துக்குடி பொ.முத்தைய பிள்ளை எழுதிய பொழிப்புரை)

  • Śuddha Advaita Śaiva Siddhānta Reflections: The Nature of the Divine

    Śuddha Advaita Śaiva Siddhānta Reflections: The Nature of the Divine


    TaHiEnFrEs

    ஒரு வீட்டினுள் கள்ளர் பதுங்கியிருப்பது போல ஆன்மாவினுள் ஈசன் மறைந்திருக்கிறான்.

    இறைவனுடைய ஞானத்தினாலேயே இறைவனை யறியவேண்டுமே தவிர மற்ற பசு பாச ஞானத்தால் அறிய முடியாது.

    நீர் நிழலானது நீரோடு விரவிநின்று புலப்படாததுபோல ஆன்ம அறிவோடு விரவிநிற்கும் சிவசைதன்னியம் அஞ்ஞானிகளுக்குப் புலப்படாமலிருக்கிறது.

    நாம் சிவபிரானை வணங்கினால் அவன் வானவர் நம்மைவந்து வணங்க வைப்பான்.

    மரத்தை அசைவித்தால் அதின் நிழலெல்லாம் அசையும் அதுபோல ஈசன் ஆட்டுவித்தால் இவ்வுலகெல்லாம் அவன் வழி யாடாநிற்கும்.

    மரத்தின் பொந்துகளில் தேன்கூடு இருப்பதுபோல நமது இருதயக்குகையில் ஈசனென்னும் ஆநந்தத்தேன் இருக்கிறது.

    சிறுநெருப்புப் பொறியும் பெரியஊரை அழிக்கும் அதுபோலக் கடவுளுடைய கடைக்கண் பார்வை மலைபோல நின்ற கன்மத்தை அழிக்கும்.

    ஒருவட்டத்திற்கு அந்த மாதி காணமுடியாது. அதுபோல ஈசனுக்கு ஆதியந்தமில்லை.

    ஈசனருள் இருந்தால் விரும்பியவெல்லாங் கைகூடும்.

    சிவபெருமான் திருமேனி செங்கனலையும் செவ்வானத்தையும் ஒத்துத்திகழும்.

    ஈசனறிவு சூரியப்பிரகாசம்போலவும், ஆன்மாவின் அறிவு, மின்மினியைப்போலவும், இருக்கின்றன.

    பஞ்சேந்திரியங்களுக்குள் கண்சிறந்திருப்பதுபோலப்பஞ்சகர்த்தாக்களுக்குள் சதாசிவம் முதல்வராயிருக்கிறார்.

    எருது நினைத்தபடி எருதாளன் பொதியேற்றமாட்டான். அதுபோல ஆன்மாநினைத்தபடி, ஈசன் வினைகூட்டமாட்டான்.

    நீரோட்டமானது இடையீடு இல்லாமற் செல்வது போல ஈசனுடைய கருணைவெள்ளமும் இடைவிடாமற் பாய்ந்தோடுகின்றது.

    சித்தாந்த ஞானரத்தினாவளி(1906)என்னும் நூலில் திரு பால்வண்ண முதலியார் அவர்கள்.