Tag: சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்

  • Karma and Reincarnation: Shaping Human Destiny

    Karma and Reincarnation: Shaping Human Destiny


    TaHiEnFrEs

    பெத்த உயிர்கள் தத்தம் இருவினைக்கேற்ப இறத்தல் பிறத்தல்களைப் புரியும் .

    ஓர் உயிர் பிறப்பெடுத்துள்ள உடலை விட்டு நீங்கியதும் சூக்கும தேகத்தில் ஒடுங்கும். அச்சூக்கும தேகத்தினின்று மீளவும் ஓர் தூல தேகம் தோன்றும்.

    சூக்கும தேகம் ஒன்றேயாயிருந்தாலும் , அதனினின்று தோன்றும் தூல தேகம் பிறவிதோறும் வெவ்வேறே . அன்றியும் ஓர் உயிர் பொருந்தியுள்ள தேகமும் மற்றோருயிர் பொருந்தியுள்ள தேகமும் வெவ்வேறாகவே காணப்ப டும் . ஓர் உயிர் மனித தேகத்தையும் மற்றோருயிர் விலங்கு முதலிய தேகத்தையும் , ஓர் உயிர் பலமான தேகத்தையும் மற்றோருயிர் பலஹீனமான தேகத்தையும் , ஓர் உயிர் சுகதேகத்தையும் மற்றோருயிர் துக்கதேகத்தையும் இவ்வாறு பல விதமாய்ப் பேதப்பட்ட சரீரங்கள் உயிர்கட்கிருக்கவும் காண் கிறோம் . இதுவுமன்றி ஒரு தேகம் அனேக வருஷ காலம் அழியாதிருக்கவும் மற்றொன்று சிலநாட்களிலும் சில கணங்களிலும் அழியவும் காண்கிறோம் . இத்தேகங்களை இவ்வாறு பேதப்படத் தோற்றுவிப்பவன் ஏனையுலகப்பொருள்களைத் தோற்றுவிக்கும் முதல்வனே . இம்முதல்வன் இத்தேகங்களை யாதும் நியதியின்றித் தன்னிஷ்டம்போல இவ்வாறு பேதப்படத் தோற்றுவிப்பானா? அன்றி யாதானும் நியதிப் படி தோற்றுவிப்பானா? அந்நியதிதான் யாது ? என்பதை ஆராய்வாம் .

    முதல்வன் தன்னிஷ்டம்போல் உயிர்கட்குப் பேதப்பட்ட சரீரங்களைத் தோற்றுவிப்பானென்பது பொருந்தாது . எல்லாவுயிர்களையும் ஒன்றுபோல நடத்தும் முதல்வன் அவ்வுயிர்கள் பால்யாதுங் காரணமின்றிப் பேதம் செய்யான் . ஆகவே இத்தேகங்களை நியதிப்படுத்துதற்கு ஏதுவான காரணமொன்றிருத்தல் வேண்டும் . இந்நியத காரணமே வினையெனப்படும் .

    வினை என்பதற்குச் செயல் என்பது பொருள் . ஒவ் வோருயிரும் தூலதேகத்தோடு கூடியுள்ள போது பலவித செயல்களைச் செய்யும் . இச்செயல்களை விருப்பு வெறுப்போடும் செய்யும் ; விருப்பு வெறுப்பின்றியும் செய்யும் . விருப்பு வெறுப்பின்றிச் செய்யப்படும் செயல்கள் தூலதேகத்தை மாத்திரம் தாக்குவனவாதலால் , சித்துப்பொருளாகிய உயிரி னைத்தாக்கா . விருப்பு வெறுப்போடு செய்யப்படும் செயல் களோ அறிவினையும் தாக்குவனவாதலால் , உயிர்களையும் பந்தித்து அவ்வுயிர்கள் இறக்குங்காலத்து அவற்றின் சூக்கும தேகங்களில் தங்கிநின்று அவ்வுயிர்கட்குச் சுகதுக்கங்களாகிய பலன்களை நியதியிட்டுக் கொடுக்கும் . இவ்வாறு பலன்களைத் தந்தவை போக எஞ்சியவினையே அச்சூக்கும தேகக் களினின்று

    தனித்தனி தோன்றும் தூல தேகங்களையும் அத்தூல தேகங்களோடு கூடிய காலத்து அனுபவிக்கும் இன்பதுன்பங்களையும் நியதிப்படுத்தும் . இவ்வினை இருதிறப் படும் . அவை நல்வினை தீவினை யென்பன . இவ்விருவினைகளும் பிறவிதோறும் உயிர்களால் ஈட்டப்பட்டுவரும் . இவ் வினைகள் பொருளல்லவாயினும் , உயிர்களை இவ்வினைகளியற் றும்படி செய்வதான காரணப்பொருள் ஒன்றுண்டு . இக்காரணந்தான் மூலகன்மம் என்று சொல்லப்படும் . இம்மூலகன்மமும் வியாபகமாயுள்ள சூக்கும ஜடப்பொருள் . இதுவும் அநாதியேயுள்ளது . இது தன்னுள் இருவேறு கூறாயிருப் பதால் இதனால் இயற்றப்படும் வினைகளும் இருவகைப்படும் . இவ்வினைகட்கு ஏற்பவே ஒவ்வோருயிரும் தேகத்தினை யெடுப்பதும் விடுப்பதுமாம் . அதாவது உயிர்களின் பிறப்புக்களை நியதிப்படுத்துவது அவ்வவ்வுயிரின் வினையே . அவற்றின் இறப்புக்களை நியதிப்படுத்துவதும் அதுவே . இவ்விறத்தல் பிறத்தல்களுக்கு நடுவே உயிர்கட்குவரும் சுகதுக்கங் கட்கு நியதகாரணமும் அதுவேயாம் . இக்கருத்துக்களை யெல்லாம் உணர்த்தவே சிவஞானபோதம் ‘போக்குவரவுபுரிய’ என்று மட்டும் ஓதாது ‘இருவினையிற் போக்குவரவுபுரிய என் றோதியது .

    சிவஞான போத உபந்நியாச பாடம் என்னும் நூலில் சைவத்திரு வி.பி காந்திமதிநாத பிள்ளை அவர்கள்.


    English IAST Transliteration

    Petta uyirkal tat tam iru vṉaikkēṟṟup piṟattal piṟattal kaḷai puriyum.

    Ōr uyir piṟapp eṭuttuḷḷa uṭalai viṭṭu nīṅgiyatum cūkku ma tēkattil oṭuṅkum. Ac cūkku ma tēkattiṉiṉṟu mīḷavum ōr tūla tēkam tōṉṟum. Cūkku ma tēkam oṉṟeyāyiruntalum, ataṉiṉiṉṟu tōṉṟum tūla tēkam piṟavitōṟum vevvēṟē.

    Aṉṟiyum ōr uyir poruntiyuḷḷa tēkamum maṟṟōruyir poruntiyuḷḷa tēkamum vevvēṟākāvaṉ kaṇappaṭum. Ōr uyir maṉita tēkattaiyum maṟṟōruyir vilaṅku mutaliya tēkattaiyum, ōr uyir palamāṉa tēkattaiyum maṟṟōruyir palahīṉamāṉa tēkattaiyum, ōr uyir cukatēkattaiyum maṟṟōruyir tukkatēkattaiyum ivvāṟṟu pala vitamāyp pētappaṭṭa carīraṅ kaḷ uyirk aṭkirukkavum kaṇkiṟōm.

    Ituvumaṉṟi ōr tēkam aṉēka varuṣa kālam aḻiyātirukkavum maṟṟoṉṟu cila nā ṭkaḷilum cila kaṇaṅ kaḷilum aḻiyavum kaṇkiṟōm. Ittēkaṅ kaḷai ivvāṟṟu pētappaṭa tōṟṟuvippavṉ ēṉaiyu lakappōruḷ kaḷait tōṟṟuvikum mutaḷvaṉē. Immutaḷvaṉ ittēkaṅ kaḷai yātum niyativinṟit taṉniṣṭampōla ivvāṟṟu pētappaṭa tōṟṟuvippāṉā? Aṉṟi yātāṉum niyatip paṭi tōṟṟuvippāṉā? Aṉ niyatitāṉ yātu? Eṉpat ai ārāyavām.

    Mutaḷvaṉ taṉniṣṭampōla uyirk aḷkup pētappaṭṭa carīraṅ kaḷait tōṟṟuvippāṉ eṉpatu poruntātu. Ella vuyir kaḷaiyum oṉṟupōla naṭakkuṅ mutaḷvaṉ avvu yirkaḷ pālyātuṅ kāraṇamiṉṟip pētam ceyyāṉ. Ākavē ittēkaṅ kaḷai niyatippaṭuttutṟak ḷētuvāṉa kāraṇamoṉṟiruttal vēṇṭum. In niyata kāraṇamē viṉaiyeṉappṭum. Viṉai eṉpatṟakku ceyal eṉpatu poruḷ.

    Ovvōruyirum tūla tēkattōṭu kūṭiyuḷḷa pōtu palavita ceyal kaḷai ceyyum. Ic ceyal kaḷai viruppu veṟuppōṭum ceyyum; viruppu veṟuppinṟiyum ceyyum. Viruppu veṟuppinṟic ceyyappaṭum ceyal kaḷ tūla tēkattai māttṛum tākkum vaṉavātalāl, cittuppōruḷākiya uyiri ṉaittākkā. Viruppu veṟuppōṭu ceyyappaṭum ceyal kaḷō aṟiviṉaiyum tākkum vaṉavātalāl, uyirk aḷaiyum pantittu avvu yirkaḷ iṟaṅkuṅ kāltu ac cūkku ma tēkaṅ kaḷil taṅkininṟu avvu yirk aḷ sukatuk kaṅ kaḷākiya palaṅ kaḷai niyatit tuṅkoṭukkum.

    Ivvāṟṟu palaṅ kaḷait t antavai pōka eñcaiya viṉaiyē ac cūkku ma tēkak kaḷiṉiṉṟu taṉit taṉi tōṉṟum tūla tēkaṅ kaḷaiyum at tūla tēkaṅ ka ḷōṭu kūṭiya kālattu aṉupvikkuṅ iṉpatuṉpaṅ kaḷaiyum niyatippaṭut tum. Ivviṉai irutiṟa ppaṭum. Avai nalviṉai tīviṉai yeṉpaṉa. Ivv iruviṉaik kaḷum piṟavitōṟum uyirk aḷāl ēṭṭappattu varum. Iv viṉaik kaḷ pōruḷallavāyiṉum, uyirk aḷai iv viṉaik kaḷiyṟṟum paṭi ceyvait tāṉa kāraṇappōruḷ oṉṟuṇṭu.

    Ik kāraṇantāṉ mūlakarmaṉ eṉṟu collappaṭum. Immūlakarmaṉum vyāpakamāy uḷḷa cūkku ma jaṭappōruḷ. Ituvum anādiyē yuḷḷatu. Ituvum taṉṉul iruvēṟu kūṟāyirup patāl itaṉāl iyṟṟappaṭum viṉaik kaḷum iru vakai ppaṭum. Ivviṉaik kaṭku ēṟavē ovvōruyirum tēkattinai eṭuppattum viṭuppattumā m. Atāvatu uyirk aḷiṉ piṟappuk kaḷai niyatippaṭutuvatu avv avvu yiriṉ viṉaiyē. Avaṟṟiṉ iṟappuk kaḷai niyatippaṭutuvatum atuvē. Ivv iṟattal piṟattal kaḷukku naṭuvē uyirk aḷvarum cukatuk kaṅ kaṭku niyata kāraṇamum atuvēyām.

    Ikkarut tukaḷai yeḷlām uṇarttavē civagñānapōtam ‘pōkkuvaravupuriya’ eṉṟu maṭṭum ōtātu ‘iruvṉaiyiṟ pōkkuvaravupuriya’ eṉ ṟōtiyaṉatu.

    Civagñāna pōta upannyāca pāṭam eṉṅum nūlil caivattiru vi. Pi kāntimatināta piḷḷai avarkaḷ.

  • The Offering of Flowers and Water to Śiva : Various Śiva Pūjā examples

    The Offering of Flowers and Water to Śiva : Various Śiva Pūjā examples


    TaHiEnFrEs

    இந்த உடம்பும்‌ வாக்கும்‌ நமக்குத்‌ தந்தவன்‌ இறைவன்‌. இவைகள்‌ தாமே வந்து அமைவதில்லை. நாமேயும்‌ எடுத்துக்‌ கொள்வதில்லை.

    “வாழ்த்த வாயும்‌ நினைக்க மட நெஞ்சும்‌ தாழ்த்த சென்னியுந்‌ தந்த தலைவன்‌ ” என்கின்றார்‌ அப்பர்‌ பெருமான். எனவே, நினைக்க நெஞ்சையும்‌, வசனிக்க வாயையும்‌, இந்த இரண்டையும்‌ தாங்கி நின்று தொழிற்படுகின்ற உடம்‌பையும்‌ தந்த இறைவனை, நாம்‌ ஒவ்வொருவரும்‌ நன்றி மறவாமையின்‌ பொருட்டு; பூவும்‌ நீரும்‌ கொண்டு பூஜை செய்ய வேண்டும்‌.

    பூ – பூர்த்தி,

    ஜா – உண்டாக்குவது!

    மலமாயா கன்மங்‌களைப்‌ பூர்த்தி செய்து, சிவஞானத்தை யுண்டாக்கும்‌ புனிதமான செயல்‌ பூஜா எனப்படும்‌. பூஜா என்ற சொல்‌ பூஜை என வந்தது. பூஜைக்கு முக்கியமான சாதனங்கள்‌ பூவும்‌ நீருமாகும்‌.

    “புண்ணியஞ்‌ செய்வார்க்குப்‌ பூவுண்டு நீருண்டு அண்ணலு மதுகண்டு அருள்‌ செய்யா நிற்கும்‌”

    நல்ல மலர்களைக்‌ கொண்டு இறைவனை நாள்தோறும்‌ அர்ச்சனை செய்யவேண்டும்‌. அதுவே மெய்யும்‌ கையும்‌ பெற்‌றதற்குப்‌ பயனாகும்‌.

    உலகில்‌ செல்வமும்‌ சீரும்‌ படைத்துச்‌ சிறப்பாக வாழ்‌கின்ற ஒருவனைக்‌ கண்டபோது; “இவர்‌ முற்பிறப்பில்‌ நல்ல பூ வெடுத்துப்‌ பூசை செய்தவர்‌” என்று இன்றும்‌ கூறுவார்கள்‌.

    தண்ணீரையே சிவலிங்கமாகத்‌ திரட்டி அம்பிகை பூசித்த திருத்தலம்‌ திருவானைக்கா.

    விநாயகர்‌ சிவபூசை செய்த திருத்தலம்‌ திருச்செங்காட்‌ டங்குடி.அதனால்‌ அது கணபதீச்சுரம்‌ எனப்‌ பேர்பெற்றது.

    சூரசங்காரத்தின்‌ பொருட்டு, முருகவேள்‌ படைகள்‌ சூழப்‌ போகும்‌ வழியில்‌, மண்ணியாற்றங்கரையில்‌ சிவபூஜை செய்த இடம்‌ திருச்சேய்ஞ்ஞலூர்‌.

    சூரசங்காரம்‌ புரிந்து திரும்பியபோது, தென்‌ கடற்கரையில்‌ ஐந்து சிவலிங்கங்கள்‌ வைத்து முருகவேள்‌ பூசித்தனர்‌. அர்ச்சனை செய்யும்போது அமரர்‌ வேண்ட, கையில்‌ உள்ள மலருடன்‌ திரும்பிக்‌ காட்சி கொடுத்த கோலந்தான்‌ திருச்‌ செந்தூர்‌ முருகன்‌ திருவுருவம்‌. இன்றும்‌ செந்திலாண்டவன்‌ பின்புறம்‌ ஐந்து சிவலிங்கங்கள்‌ இருக்கின்றன. ஆராதனை செய்யும்போது பின்புறம்‌ கொண்டுபோய்‌ ஆராதிக்கின்றதை இன்றும்‌ திருச்செந்தூரில்‌ காணலாம்‌.

    இப்படி முருகன்‌ வழிபட்ட திருத்தலங்கள்‌ திருமுருகன்‌ பூண்டி, வயலூர்‌ முதலியன.

    சக்கரம்‌ பெறும்‌ பொருட்டுத்‌ திருமால்‌ நாள்தோறும்‌ ஆயிரந்‌ தாமரை மலர்களால்‌ அரனை அருச்சித்தனர்‌. அதுவே திருவீழிமிழலை. பிரமதேவர்‌ பூசித்த திருத்தலம்‌ பிரமபுரம். இந்திரன்‌ பூசித்த திருத்தலம்‌ கண்ணார்கோயில்‌.

    நண்டு பூசித்தது; சிலந்தி பூசித்தது; பாம்பு பூசித்தது;
    குரங்கு பூசித்தது; அணில்‌ பூசித்தது; காகம்‌ பூசித்தது குரங்கணிமுட்டம்‌)

    பெரிய உருவமுள்ளது யானை; சிறிய -உருவமுள்ளது எறும்பு. எறும்பு முதல்‌ யானை யீறாக என்று கூறுவர்‌. திருச்சிராப்பள்ளிக்கு அருகில்‌ உள்ள திருஎறும்பூர்‌ எறும்புபூசித்த திருத்தலம்‌; யானை பூசித்த திருத்தலம்‌ திருவானைக்கா.

    எறும்பும்‌ யானையும்‌ பூசித்த இந்தத்‌ தலங்களைக்‌ கண்‌ கூடாகக்‌ கண்டும்‌, மனிதர்கள்‌ இறைவனைப்‌ பூசிக்காமல்‌ உண்டு உடுத்து உலாவி வீணே காலங்‌ கழித்துக்‌ காலன்‌ வாய்ப்படுகின்றனர்‌.

    இவர்களைக்‌ கண்டு வருந்தி அதிவீரராமபாண்டியர்‌ பாடு கிறார்‌.

    “சிவகருமஞ்‌ செய்யார்‌ திருநீறு சாத்தார்‌ தவநிலையாஞ்‌ சைவநெறி சாரார்‌–அவனிதனில்‌ கான்பரந்த பச்சைக்‌ களாநிழலைக்‌ கைதொழார்‌ ஏன்பிறந்தார்‌ மானிடராய்‌ இன்று?”

    இறைவனைப்‌ பூசிக்காத புல்லர்களை மனிதர்கள்‌ என்று கூறக்கூடாது. அவன்‌ தந்த கையால்‌ அவனை வழிபட மறுத்‌தால்‌ நன்றிகொன்ற பாவம்‌ விடாதுதானே.

    “எறும்புகடை யானைதலை ஈசனைப்‌ பூசித்துப்‌ பெறுங்கதிகண்‌ டும்தேறார்‌ பேய்கள்‌ அறிந்த உலகத்தார்‌ உண்டென்ப தில்லென்பான்‌ வையத்‌ தலகையாய்‌ வைக்கப்‌ படும்‌”

    –முதுமொழிமேல்‌ வைப்பு

    கண்ணபிரான்‌ மகப்பேறு வேண்டி சிவபூஜை செய்‌ தனர்‌. அதனால்‌ பிறந்த மகனுக்கு சாம்பவான்‌ என்று பேரிட்டனர்‌.

    அர்ச்சுனன்‌ சதா சிவபூஜை செய்தனன்‌. சிலர்‌ கேட்‌கின்றார்கள்‌; எங்கள்‌ வீட்டில்‌ யாராவது இறந்துவிட்டால்‌ அப்போது பூஜை செய்யலாமா? என்பார்கள்‌. அர்ச்சுனன்‌ தன்‌ மகன்‌ அபிமன்யு மாண்ட அன்றிரவு சிவபூஜை செய்‌தான்‌ என்று மகாபாரதம்‌ பேசுகின்றது.

    திரு கிருபானந்தவாரியார் விரிவுரை விருந்து என்னும் நூலில் இருந்து…


    English IAST Transliteration

    Inta uṭambum vākkum namakku tanda vaṉ igai vaṉ. Ivai ṭā mvē vandu amaivilai. Nāmēyum eṭut tukuṉṟatu milai. “Vāḻtta vāyum niṉaikka maṭa neñcamum tāḻtta ceṉṉiyum tanda talaivaṉ” eṉkiṉṟār appar perumāṉ.

    Eṉvēr, niṉaikka neñ caiyum, vacanikka vāyaiyum, inta iṟaṇṭaiyum tāṅki niṉṟu toḻilpaṭukiṉṟa uṭambaiyum tanda igai vaṉai, nām ovvoruvarum naṉṟi maṟavāmaiyiṉ poruṭṭu; pūvum nīrum koṇṭu pūjai ceyya vēṇṭum.

    Pū – pūrtti,

    jā – uṇṭākuvatu!

    Malamāyā kaṉmaṅ ḷaip pūrtti ceytu, civagñāṉattai yuṇṭākum punitamāṉa ceyal pūjā eṉappṭum. Pūjā eṉṟa col pūjai eṉa vantatu. Pūjaikkum mukkiyamāṉa cātanaṅ ḷa pūvum nīrumā kum.

    “Puṇṇiyañ ceyvārk kup pūvuṇṭu nīruṇṭu aṇṇalumatu kaṇṭu arul ceyyā niṟkum”

    Nalla malarkaḷ koṇṭu igai vaṉai nāltoṟum arc caṉai ceyyavēṇṭum. Atuvē meyyum kaiyum peṟṟatṟak kup payaṉākum. Ulagil celvamum cīrum paṭaittu cirap pākā vāḻ kiṉṟa oruvaṉai kāṇṭapōtu; “Ivar muṟpiṟappil nalla pū veṭuttu pūcai ceytavar” eṉṟu iṉṟum kūṟuvār ḷa.

    Taṇṇīrai yē civalingamāgat tirāṭṭi ampi kai pūcittat tiruttalam tiruvāṉaik kā. Viṉāyakar civapūcai ceytat tiruttalam tirucc eṅkāṭ ṭaṅkuṭi. Atanāl atu kaṇapatīccuram eṉap pērpeṟṟatu. Cūracaṅkārat tiṉ poruṭṭu, murugavēḷ paṭai ḷa cūḻap pōkum valiyil, maṇṇiyā ṭṟaṅkaraiyal civapūjai ceyta iṭam tirucceyññalūr.

    Cūracaṅkāram puriytu tirumpiyapōtu, ten kaṭaṟkaraiyal aintu civalingam ka ḷva ittu murugavēḷ pūcittanar. Arccaṉai ceyyum pōtu amarar vēṇṭa, kaiyil uḷḷa malaruṭaṉ tirumpik kāṭci koṭutta kōl antān tiruccentūr murukaṉ tiruvuruvam. Iṉṟum centilāṇṭavaṉ piṉpuṟam aintu civalingam ka ḷiruk kiṉṟaṉ. Ārātai ceyyum pōtu piṉpuṟam koṇṭupōy ārātikkiṉṟat aiṉṟum tiruccenturil kāṇalām. Ippaṭi murukaṉ vaḻipatta tiruttalaṅ ka ḷtirumuru kaṉ pūṇṭi, vayalūr mutaliyaṉa.

    Cakkaṟam peṟum poruṭṭut tirumāl nāltoṟum āyiraṁ tāmaraimalarka ḷāl araṉai aruccittanar. Atuvē tiruvīḻimiḻalai. Piramatēvar pūcitta tiruttalam piramapūram. Intiṟaṉ pūcitta tiruttalam kaṇṇārkōyil.

    Naṇṭu pūcittatu; Cila anti pūcittatu; Pām pu pūcittatu; Kuraṅku pūcittatu; Aṇil pūcittatu; Kākam pūcittatu (Kuraṅka ṇimuṭṭam) Periya uruvamu ḷḷatu yāṉai; Ciriya uruvamu ḷḷatu erumpu. Erumpu mutal yāṉai yīṟāka eṉṟu kūṟuvār.

    Tiruccirāppa ḷḷikk aru xil uḷḷa tiru erumpūr erumpupūcittat tiruttalam; Yāṉai pūcitta tiruttalam tiruvāṉaik kā. Erumpum yāṉaiyum pūcitt inta talaṅ ka ḷka ṅkūṭāgak kaṇṭum, manitar igai vaṉaip pūcikkāmal uṇṭu uṭuttu ulāvi vīṉē kālaṅ kaḻittuk kālaṉ vāyp paṭukiṉṟaṉar. Ivar ka ḷkaṇṭu varunti ativīrārāmapāṇṭiyar pāṭu kiṟār.

    “Civakarumañ ceyyār tirunīṟu cāttār tavanilaiyāñ caivaneṟi cārār–Avaṉit aṉil kāṉpa raṉtapa cakkā nidalai kaittoḻār ēṉpiṟaṉṟār māṉiṭarāy iṉṟu?”

    Igai vaṉaip pūcikkāta pullar ka ḷmāṉitar eṉṟu kūṟakkūṭātu. Avaṉ t anta kaiyāl avaṉai vaḻipata marut tāl naṉṟikoṉṟa pāvam viṭātu tāṉē.

    “Erumpukaṭai yāṉaitalai īcaṉaip pūcittup peṟuṅkatikaṇ ṭumtēṟār pēy kaḷaṟiṉta ulakat tār uṇṭeṉpat illēṉpāṉ vaiyatt alakaiyāy vaikkap paṭum”

    –Mutumōḻimēl vaippu

    Kaṇṇapirāṉ makappēṟu vēṇṭi civapūjai cey t aṉar. Atanāl piṟaṉṯa makaṉukku cāmpavāṉ eṉṟu pēriṭṭaṉar. Arc caṉaṉ catā civapūjai ceytaṉaṉ. Cilar kēṭ kiṉṟār ka ḷ; Eṅ ka ḷvīṭṭil yārāvatu iṟaṉtuvit tāl appōtu pūjai ceyyalamā? Eṉpār ka ḷ. Arc caṉaṉ taṉ makaṉ apimaṉyu māṇṭaṉṟiṉṟu civapūjai ceytāṉ eṉṟu makāpāratam pēcu kiṟatuṭu. Tiru kirupāṉantavāriyār virivurai viruntu eṉṅum nūlil iruntu…

  • The Birthless and Timeless Nature of Śiva : The Unborn and Eternal Lord

    The Birthless and Timeless Nature of Śiva : The Unborn and Eternal Lord


    TaHiEnFrEs

    சிவபெருமானுக்குப் பிறப்பில்லாமை:

    अजात इत्येवं कश्चित् भीरुः प्रतिपद्यते ।

    श्वेताश्वतरोपनिषत्

    அஜாத இத்யேவம் கஶ்சித் பீ⁴ரு꞉ ப்ரதிபத்³யதே |

    ஶ்வேதாஶ்வதரோபநிஷத்

    “(ஜனனத்துக்கு அஞ்சும்) ஒருவன் நீர் பிறவாதுள்ளீர் என்னும் இம்மொழிகளைக் (கூறிக்) கொண்டு (நும்மை) சரணடைகின்றான்”

    என்று சுவேதாசுவதரமும்

    अजातमिमेवैकं ज्ञात्वा जन्मनि भीरवः ।
    प्रपद्यन्तेऽस्य देवस्य मोक्षार्थं दक्षिणामुखम् ।।

    उपदेशकाण्ड:

    அஜாதமிமேவைகம் ஜ்ஞாத்வா ஜன்மனி பீ⁴ரவ꞉ |
    ப்ரபத்³யந்தே(அ)ஸ்ய தே³வஸ்ய மோக்ஷார்த²ம் த³க்ஷிணாமுக²ம் ||

    உபதே³ஶகாண்ட³:

    “ஜனனத்திற் பயமுற்றவர்கள் அவ்வொருவரையே பிறப்பிலாப் பொருள் என்று அறிந்து மோக்ஷமடையுமாறு தேவாதி தேவருடைய தக்ஷிணாமுகத்தைச் சரணடைகின்றார்கள்” என்று உபதேச காண்டமும் உபதேசிக்கின்றன.

    பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
    செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
    சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
    விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.

    திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரம் – திருப்பறியலூர் வீரட்டம்.

    ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்
    ஊழி பலகண் டிருந்தார் போலும்
    பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்
    பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
    உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
    உகப்பார் மனத்தென்றும் நீங்கார் போலும்
    அருகாக வந்தென்னை யஞ்சே லென்பார்
    அணியாரூர்த் திருமூலட் டான னாரே

    திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் – திருவாரூர்.

    தேவாரம் வேதசாரம் என்னும் நூலில் இருந்து..


    English IAST Transliteration

    Śivaperumāṉukkup Piṟappillāmai:

    ajāta ityevaṁ kaścit bhīruḥ pratipadyate ।

    Śvetāśvataropaniṣat

    (jaṉaṉattukku añcum) oruvaṉ nīr piṟavātulḷīr eṉṉum immoḻikaḷaik (kūṟik) koṇṭu (nummai) caraṇataikiṉṟāṉ” eṉṟu cuvētācuvataramum

    ajātamimevaikaṁ jñātvā janmani bhīravaḥ ।
    prapadyante’sya devasya mokṣārthaṁ dakṣiṇāmukham ।।

    Upadeśakāṇḍa:

    “jaṉaṉattiṟ payamuṟṟavarkaḷ avvoruvaraiyē piṟappilāp poruḷ eṉṟu aṟintu mōkṣamaṭaiyumāṟu tēvāti tēvaruṭaiya takṣiṇāmukhattaic caraṇataikiṉṟārkaḷ” eṉṟu upatēca kāṇṭamum upatēcikkiṉṟaṉa.

    Piṟappāti yillāṉ piṟappār piṟappu
    cerappāti yantac celaccaiy yun tēcaṉ
    cirap pāṭuṭaiyār tiruppaṟi yalūr il
    viṟappā riṭañcūḻa vīrāṭṭat tāṉē.

    Tiruññā ṉacampantapperumā ṉaruḷiya Tēvāram – Tiruppaṟiyalūr Vīrāṭṭam.

    Orukālatt ondrāki niṉṟār pōlum
    ūḻi palakaṇ ṭiruntār pōlum
    perukāmē veḷḷan tavirttār pōlum
    piṟappiṭumpai cākkāṭoṉ ṛillār pōlum
    urukātār uḷlattu nillār pōlum
    ukappār manattenrum nīṅkār pōlum
    arukāka van tenna iñcē leṉpār
    aṇiyārūr tirumūlaṭ ṭāṉaṉārē.

    Tiru nāvukkaracar perumā ṉaruḷiya Tēvāram – Tiruvārūr.

    Tēvāram Vētasāram eṉṉum nūliliruntu..

  • The Tradition of Wearing Śaiva Symbols : Vibhūti and Rudrākṣa in Śaiva Upāsanā and Daily Life

    The Tradition of Wearing Śaiva Symbols : Vibhūti and Rudrākṣa in Śaiva Upāsanā and Daily Life



    TaHiEnFrEs

    தேவாதியருஞ் சிவசின்ன தாரணர்

    விட்டுணு, பிரமன், இந்திரன், தேவர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கந்தருவர், வித்தியாதரர், நாகர், கருடர் முதலிய கணத்தவர்களும், மனிதருள் அநேகருமாகிய சிவனடியவர் யாவருஞ் சிவசின்னங்களைத் தரித்திருக்கின்றனர் என்பது வேதாகம உபநிடத மிருதிபுராண இதிகாசாதி சாத்திரங்களால் அறியக் கிடக்கின்றது.

    மாலயனிந் திரன்மற்றை யமரர்மலர் மகளிர்சசி மற்றை வானக்கோலமட வாரியக்கர் கந்தருவ ரரக்கர்குல வசுரர் வேதச்சீலமுனி வரர்மற்றோ ரிவருளருந் தவமுடையீர் திருவெண்ணீறுசாலவுமுத்தூளனமுப்புண்டரநாடொரும்போற்றித்தரியார்யாரே.-ஶ்ரீஸூதசங்கிதை.

    விஷ்ணுவும் விபூதிருத்திராக்க தாரணரே

    சிலர், ஆசாரியருட் சிறந்தவராய், சிவசத்திகளுளொருவராய், சிவபத்தருட் சிறந்தவராய், காத்தற் கடவுளராய் விளங்கும் விஷ்ணுக்கும் அவனை வழிபடுவார்க்கும் விபூதி ருத்திராக்கதாரணம் தக்கதன்று என்கின்றனர். “பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷ¡ பரணா: – தக்ஷ¢ணாயாந் திகி விஷ்ணு” எனவரும் (அதர்வணவேதம்) பஸ்மஜாபால உபநிடத சுலோகத்தானே திருமால் ஸ்ரீகாசி §க்ஷத்திரத்திலே தென்றிசைக்கணிருந்து விபூதிருத்திராக்க தாரணமுடையராய் உபாசிக்கின்றனர் என்பது பெறப்படலானும், “சிவேநவிஷ்ணு நாசைவ” எனவரும் ஶ்ரீஸூதசங்கிதைச் சுலோகத்தானே திருமாலுக்கும் அவரது தேவியார்க்குஞ் சைவ தருமமும், விபூதி தாரணமுங் கூறப்பட்டமையானும், இன்னும் இராமாவாதார மெடுத்த காலத்து “த்யாத்வா ரகுபதிம் க்ருத்தம் காலாநல மிவாபரம் – பீத க்ருஷ்ணாஜிநதரம் பஸ்மோத்துளன விக்ரஹம்” என்னும் இராமாயண சுலோகத்தானும், “ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாக்ஷ¡த் ருத்ர மிவாபரணம் – பஸ்மோத் தூளித ஸர்வாங்கம் த்ருஷ்டுவா காம வசங்கதா” என்னும் அத்தியாத்மராமாயண சுலோகத்தானும், விபூதி தரித்திருந்தனரென்பது வெளியாகலானும், “கண்ணன்வென்பூதி பூசிக் கண்டிகை மாலை சாத்திப் – புண்ணியத் திங்கள்வேணி யானிரு பாதம் போற்றி” எனக் கண்ண அவதாரத்திலுங் கண்டிகையு நீறுமணிந்தனர் என்று கூர்மபுராணங் கூறுவதனானும், “சிவஸ்ய விஷ்ணோர் தேவாநாம்” எனவரும் பராசரஸ்மிருதி சுலோகத்தானே விபூதியைத் திரிபுண்டாமாகத் தரிப்பின்கேசவமூர்த்திக்கும் இலக்குமிதேவியார்க்குந் திருப்தியுண்டாகிறது எனத் தெரிதலானும், ஏனைய பிரமாண நியாயங்களானும் விஷ்ணுவுஞ் சிவசின்ன தாரணரும், சிவசின்ன தாரணப் பிரியருமாகலின், அவற்கும் அவனை வழிபடுமடியார்க்குஞ் சிவசின்னங்கள் உரியனவாமென்று தெளியப்பட்டது.

    யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்த மகாசரபம் சிவஸ்ரீ நா.கதிரைவேற் பிள்ளை இயற்றிய சைவபூஷண சந்திரிகை என்னும் நூலில் இருந்து…

    English IAST Transliteration

    Dēvātiyaruñ civaciṉṉa tāraṇar

    viṭṭuṇu, piramaṉ, intiraṉ, tēvar, muṉivar, kiṉṉarar, kimpuruṭar, kantarvar, vittiyātarar, nākar, karuṭar mutaliya kaṇattavarkaḷum, maṉitaruḷ aṉēkarumākiya civaṉaṭiyar yāvaruñ civaciṉṉaṅkaḷait tarittirukkiṉṟaṉar eṉpatu vētakama upaniṭata mirutipūraṇa itikācāti cāttiraṅkaḷāl aṟiya kiṭakkiṉṟatu.

    mālayiniṉ tiramaṟṟai yamaramalar makaḷircaci maṟṟai vāṉakkōlamaṭa vāriyakkar kantarvara rakkarkula vacurar vēdaccīlamuṉi vararmaṟṟō rivaruḷarun tavamuṭaiyīr tiruveṇṇīṟucālavumuttūḷaṉamuppuṇṭaranāṭorumpōṟṟittariyār yārē.-śrī sūta caṅkitai.


    viṣṇuvum vibūtiruttirākṣa tāraṇarē

    cilar, ācāriyaruṭ ciṟantavarāy, civacattikaḷuḷoruvārāy, civapattaruṭ ciṟantavarāy, kāttaṟ kaṭavuḷarāy viḷaṅkum viṣṇukkuṁ avaṉai vaḻipaṭuvārkkum vibūti ruttirākkṣatāraṇam takkatantry eṉkiṉṟaṉar. “basmadik tāṅgā ruttirākṣā paraṇā: – dakṣiṇāyān diki viṣṇu” eṉavarum (atharvaṇavēdam) basmajābāla upaniṭata clōkattāṉē tirmāl śrīkāci kṣēttirattilē teṉṟicaikkaṇiruntu vibūtiruttirākṣa tāraṇamuṭaiyarāy upācikkiṉṟaṉar eṉpatu peṟappaṭalāṉum, “civēnaviṣṇu nāsaiva” eṉavarum śrī sūta caṅkitaic clōkattāṉē tirmālukkuṁ avartēviyārkkuñ caiva tarumamum, vibūti tāraṇamuṅ kūṟappaṭṭamaiyāṉum, iṉṉum irāmāvatāra meṭutta kālattut “dhyātvā raghupatiṁ kruttaṁ kālānala mivāparaṁ – pīta kr̥ṣṇājīnadharaṁ pasmōtthūlana vigrahaṁ” eṉṉum irāmāyaṇac clōkattāṉum, “svarṇa varṇa jaṭāpāraṁ sākṣāt rudra mivāparaṇaṁ – pasmōt dhūlita sarvāṅgaṁ druṣṭuvā kāma vacaṅgadhā” eṉṉum attiyātmarāmāyaṇac clōkattāṉum, vibūti tarittiruntaṉar eṉpatu veḷiyākalāṉum, “kaṇṇaṉveṇpūti pūcik kaṇṭikai mālai cāttip – puṇṇiyat tiṅkaḷvēṇi yāṉiru pātaṁ pōṟṟi” eṉak kaṇṇa avatārattiluṅ kaṇṭikaiyu nīṟumaṇintaṉar eṉṟu kūrmapurāṇaṅ kūṟuvatāṉum, “civasyai viṣṇōr dēvānām” eṉavarum parācarasmiruti clōkattāṉē vibūtiyait tripuṇṭarāmākat tarippiṉkēcavamūrttikkum ilakkumitēviyārkkuṅ tiruptiyuṇṭākiṟatu eṉat teritalāṉum, ēṉaiya piramāṇa niyāyaṅkaḷāṉum viṣṇuvuñ civaciṉṉa tāraṇarum, civaciṉṉa tāraṇap piriyarumākalil, avarkkuṁ avaṉai vaḻipaṭumaṭiyārkkuñ civaciṉṉaṅkaḷ uriyaṉavāmeṉṟu teḷiyappaṭṭatu.

    yāḻppāṇattu mēlaipulōli caivacittānta makācarapam sivaśrī nā.katiraivēṟ piḷḷai iyaṟṟiya caivapūṣaṇa cantirikai eṉṉum nūlil iruntu…

  • The Mahatva of Rudrākṣa and Vibhūti : A Study

    The Mahatva of Rudrākṣa and Vibhūti : A Study


    TaHiEnFrEs

    || உருத்திராக்கம் வேதோக்தமானது ||

    நூற்றெட்டு உபநிடதங்களுள்ளே திரிபுரதாபிநி உபநிடதம் , திரிபுரோபநிடதம் , பஸ்மஜாபால உபநிடதம் , பிருஹஜ்ஜாபால உபநிடதம் , ராமரஹஸ்யோபநிடதம் , அக்ஷமாலிகா உபநிடதம் , ருத்ராக்ஷ ஜாபால உப நிடதம் ஆகிய இவைகள் உருத்திராக்ஷத்தைப்பற்றி சிறப்பித்துக் கூறுகின்றன . அவற்றுள் உருத்திராக்ஷ ஜாபாலம் உருத்திராக்ஷமணிகளின் உற்பத்தி , அளவு , முகம் , தாரணமந்திரம் , தாரணபலாதி விவரம் ஆகிய இவற்றைச் சொல்லுகின்றது . அக்ஷமாலிகை அந்த மணிகளின் நிறம் , மாலைகளின் பேதம் , மகிமை முதலிய விவரங்களைக் கூறுகின்றது . பிருஹஜ் ஜாபாலம் – மணிகளின் உற்பத்தி , தாரணம் , பலாதி இவைகளைத் தெளிவாய்ப் போதிக்கின்றது .

    சிவபெருமானுடைய திருக்கண்களினின்றும் வெளிப்பட்ட நீரே விருக்ஷமாகி அவற்றின் பலனாகவிளைந்த உருத்திராக்ஷமே மகா புண்ணிய மகிமைத்தென்பது வேதங்களாலே அறியப்படுதலின் , அவை வைதிகமாவதற்கு யாதொரு இழுக்குமில்லை . விபூதி யுபநிடதமாகிய பஸ்மஜாபால உபநிடதத்தை எண்பத்தேழாவதாகவும் , இவ்வுருத்திராக்ஷ ஜாபால் உபநிடதத்தை எண்பத்தெட்டாவதாகவுஞ் சேர்த்து வைக்கப்பட்டிருத்தலால் இவ்விரண்டும் முத்திக்கு இன்றியமையாத பரமசாதனங்களெனப் பெறப்பட்டன . பட வே அக்ஷமாலிகா உபநிடதத்தை அறுபத்தேழாவது உபநிடதமாக வைத்து அதற்குமுன்னே பரமஹம்ஸபரி ராஜகோபநிடதத்தை அறுபத்தாறாவது உபநிடதமாக வைத்து வேதம் புகழ்ந்தமையால் ஸர்வசங்க பரித்தியாகஞ் செய்த தத்துவஞானத்தையுடைய சந்நியாசிகளுக்குங் கூட இது தள்ளத்தகாத பரம தாரணம் என்பது சுருதியின் சம்மதம் .

    விபூதி ருத்ராக்ஷ மஹத்துவ விளக்கம் என்னும் நூலில் ஸ்ரீலஸ்ரீ சிவ அருணகிரி முதலியார் அவர்கள்…


    English IAST Transliteration

    || ruttirākkaṁ vēdōktamāṉatu ||

    nūṟṟeṭṭu upaniṭataṅkaḷuḷḷē tripuratāpiṉi upaniṭatam, tripurōpaniṭatam, pasmajābāla upaniṭatam, piruhajjābāla upaniṭatam, rāmarahasyōpaniṭatam, akṣamālikā upaniṭatam, rutrākṣa jābāla upaniṭatam ākiya ivaikaḷ uruttirākṣattaippaṟṟi ciṟappittuk kūṟukiṉṟaṉa. avaṟṟuḷ uruttirākṣa jāpālam uruttirākṣamaṇikaḷiṉ utpatti, aḷavu, mukam, tāraṇamantiram, tāraṇapalāti vivaram ākiya ivaṟṟaic collukiṉṟatu. akṣamālikai anta maṇikaḷiṉ niṟam, mālaikaḷiṉ pētam, makimai mutaliya vivaraṅkaḷaik kūṟukiṉṟatu. piruhaj jāpālam – maṇikaḷiṉ utpatti, tāraṇam, palāti ivaikaḷait teḷivāyp pōtikkiṉṟatu.

    civaperumāṉuṭaiya tirukkaṇkaḷiṉiṉṟum veḷippaṭṭa nīrē virukṣamāki avaṟṟiṉ palaṉākaviḷainta uruttirākṣamē makā puṇṇiya makimaitt’eṉpatu vēdaṅkaḷālē aṟiyappaṭutaliṉ, avai vaidikanavataṟku yātoru iḻukkumillai. vibūti yupaniṭatamākiya pasmajābāla upaniṭatattai eṇpattēḻāvāka vum, ivvuruttirākṣa jāpāl upaniṭatattai eṇpatteṭṭāvākavun cērttu vaikkappeṭṭiruttalāl ivviraṇṭum muttikku iṉṟiyamaiyāta paramacātaṉaṅkaḷeṉap peṟappaṭṭaṉa. paṭa vē akṣamālikā upaniṭatattai aṟupattēḻāvatu upaniṭatamāka vaittu ataṟkumunnē paramahaṁsapari rājakōpaniṭatattai aṟupattāṟāvatu upaniṭatamāka vaittu vēdam pukaḻntamaiyāl sarvacaṅka parittiyākañ ceyta tattuvajñāṉattaiyuṭaiya sanniyācikaḷukkuṅ kūṭa itu taḷḷattakāta parama tāraṇam eṉpatu śurutiyiṉ sammatam.

    vibūti rutrākṣa mahattuva viḷakkam eṉṉum nūlil śrīlaśrī civa aruṇakiri mutaliyār avarkaḷ…

  • Saiva Siddhānta Darśana: The Need for Caution in Interpreting Saiva Texts

    Saiva Siddhānta Darśana: The Need for Caution in Interpreting Saiva Texts


    TaHiEnFrEs

    நமது சைவசமயிகள் ஆரிய மொழியிலுள்ள வேதாகம முதலிய சைவ மெய்ந்நூல்களையும், தமிழ் மொழியிலுள்ள தேவார திருவாசக முதலிய சைவ அருணூல்களையும் வரையறுத்து உணராத குறையினால், சித்தாந்த சைவ அயலான சிவாத்துவித முதலிய அகச்சமய நூல்களையும், மாயாவாத முதலிய புறச்சமய நூல்களையும், அம் மெய்ந்நூல்களோ டொப்பத் தஞ் சமய
    நூல்களெனக் கொண்டு கற்று, வழிதடுமாறி அலைகின்றார்கள். அது நிற்க.

    நமது சைவசமயிகள் தஞ்சமய பரமாசாரியர் முதலியோர் முறையும், தத்தம் பரம்பரைச் சைவசந்தானாசாரியர் முறையும், உள்ளபடி விசாரித்து உணராத குறையினால், சங்கராசாரியர் முதலிய ஏகாத்மவாத வேதாந்தாசாரியர்களையும், அவர் வழிப்பட்ட மாயாவாத சமயப் போதகர்களையும் தஞ் சமயகுரவர்களென்று கொண்டு வழிபட்டு அவம் பெருக்கிச் சித்தாந்தச் செந்நெறி பிழைத்து அல்லற்பட்டு உழல்கின்றார்கள். அது நிற்க.

    நமது சைவசமயிகள் சித்தாந்த சைவபத்ததி தேர்ந்துணராத குறையினால், அசைவாசாரங்களையும், அசம்பிரதாயங்களையும், சைவாசாரங்களாகவும் சைவ சம்பிரதாயங்களாகவுங்கொண்டு, வீண்செயலுழப்புற்று வாணாள் வீணாள்படக் கழிக்கின்றார்கள்.

    ஆதலால் பரமசிவன் இலக்கணம், சித்தாந்த சைவ இலக்கணம், சித்தாந்த சைவசாத்திர முறை, சித்தாந்த சைவாசாரியர் இலக்கணம், சித்தாந்த சற்சம்பிரதாய இலக்கணம், சித்தாந்த சைவாநுஷ்டானத்தால் எய்தும் இகபரவீடு பேற் றின்பப்பயனிலக்கணம் என்னுமிவற்றை, முறையாக எடுத்துப் போதித்து நம்மவரை நல்வழிப் படுத்தல் நமக்கெல்லாம் பெருங்கடனாமாதலின், நாமெல்லாம் மற்றவைகளை வரன் முறையாக எடுத்து நம்மவர்க்குப் போதித்தலை விரதமாகக்
    கொண்டு செய்து போதரக் கடவமாவேம்.

    • ஸ்ரீ சபாபதி நாவலர் அவர்கள்

    சித்தாந்த சைவ போதம் (ஞானாமிர்தம்)(1983) என்னும் நூலில் இருந்து…


    English IAST Transliteration

    Namatu caivasamaiyikaḷ āriya moḻiyiluḷḷa vētākama mutaliya caiva meynṉūlkaḷaiyum, tamiḻ moḻiyiluḷḷa tēvāra tiruvācaka mutaliya caiva aruṇūlkaḷaiyum varaiyaṟuttu uṇarāta kuṟaiyināl, cittānta caiva ayalāṉa civāttuvita mutaliya akaccamaiya nūlkaḷaiyum, māyāvāta mutaliya puṟaccamaiya nūlkaḷaiyum, am meynṉūlkaḷō ṭoppat tañ camaya nūlkaḷeṉak koṇṭu kaṟṟu, vaḻitaṭumāṟi alaikinṟārkaḷ. atu niṟka.

    Namatu caivasamaiyikaḷ tañcamaya paramācāriyar mutaliyōr muṟaiyum, tattam paramparai caivacantāṉācāriyar muṟaiyum, uḷḷapaṭi vicārittu uṇarāta kuṟaiyināl, caṅkarācāriyar mutaliya ēkātmavāta vētāntācāriyarkaḷaiyum, avar vaḻippaṭṭa māyāvāta camayap pōtakaraiyum tañ camayakuravarkaḷeṉṟu koṇṭu vaḻipaṭṭu avam peruṇkic cittāntac ceṉṉeṟi piḻaitu allarpaṭṭu uḻalkinṟārkaḷ. atu niṟka.

    Namatu caivasamaiyikaḷ cittānta caivapattati tērntuṇarāta kuṟaiyināl, acaivācāraṅkaḷaiyum, acampiratāyaṅkaḷaiyum, caivācāraṅkaḷākavum caiva campiratāyaṅkaḷākavumkoṇṭu, vīṇceyal uḻappuṟṟu vāṇṇāḷ vīṇṇāḷpaṭak kaḻikkinṟārkaḷ.

    Ātalāl paramacivaṉ ilakkaṇam, cittānta caiva ilakkaṇam, cittānta caivacāttira muṟai, cittānta caivācāriyar ilakkaṇam, cittānta sarscampiratāya ilakkaṇam, cittānta caivānuṣṭāṉattāl eytum ikaparavīṭu pēṟ ṟiṉpappayaṉilakkaṇam eṉṉumivaṟṟai, muṟaiyāka eṭuttup pōtittu nammavaraik nalvaḻip paṭuttal namakkellām peruṅkaṭaṉāmātaliṉ, nāmelḷām maṟṟavaikaḷai varan muṟaiyāka eṭuttu nammavaṟkuk pōtittalai viratamākak koṇṭu ceytu pōtarak kaṭavamāvōm.

    • Śrī Sabhāpati Nāvalar avarkaḷ

    Cittānta Caiva Pōtam (Jñāṉāmirtam) (1983) eṉṉum nūlil iruntu….

  • Puranic Insights Series- Why do devotees of the Gods suffer?

    Puranic Insights Series- Why do devotees of the Gods suffer?


    EnFrEs

    A thread on Purāṇa-s and the answers they give for commonly held questions–I intend for this thread to be a long-continuing series–To save time, I will share screenshots of the original and translation:

    A burning question that many of us have: Why do devotees of the Gods suffer?

    Nārada relates to Arjuna in the Skāndapurāṇa (here, we will see the version of the text with seven khaṇḍa-s) the story of a pious trader, Nandabhadra, who has the same question. Nandabhadra was not just an external worshiper but one who was righteous within and theDevas themselves were pleased with his character. Nandabhadra had recently lost his son and wife. He had a neighbour–an atheist who found delight in causing the pious to deviate from their belief in Dharma, but called himself Satyavrata (one who has taken a vow to speak only the truth). 

    Given Nandabhadra’s devastating personal losses, Satyavrata, using sympathy as pretext, uttered the following words to break Nandabhadra.

    This consists of the usual tripe from atheists that we hear even today. 

    Where are the Devas? This is false; they would be visible if they existed – kva devāḥ saṃti mithyaitaddṛśyaṃte cedbhavaṃtyapi |

    All these are the imagination of untruthful Vipras (Brāhmaṇa-s) for the sake of wealth/goodies – sarvā ca kūṭaviprāṇāṃ dravyāyaiṣā vikalpanā

    There is nothing worse than human birth. It is full of miseries. Human birth is a tax. It is better to be born as animals. 

    Nandabhadra is not swayed by Satyavrata’s atheistic speech and rebukes him. He then goes to worship the Kapileśvara Liṅga on the banks of Bahūdaka Kuṇḍa.


    However, he does feel miserable with all that has been going on his life and recited the following verses to Sadāśiva, expressing his deep grievance with the nature of existence.

    On the 4th day, a young boy, looking extremely ill with leprosy, appears before him and starts conversation with Nandabhadra. The young boy chides Nandabhadra for wishing to die and starts his discourse on the nature of suffering and the importance of being freed from greed. 

    Nandabhadra then takes up the four things which are reproached: kāma (desire), krodha (anger), ahaṃkāra (egoism/sense of I-ness) and indriya-s (sensory faculties). He makes an opt observation. Kāma is needed for even the pursuit of svarga and mokṣa. 

    Without krodha (anger), one is regarded by enemies, external and internal, as a blade of grass. Without ahaṃkāra (sense of I-ness), one will be regarded as mad. If one causes his Indriyas to withdraw from everything, how can one hear the Dharma (such as the Boy’s discourses) and, as a matter of fact, even live?

    The Boy then refers to the tattvas immediately higher than ahaṃkāra and the Indriyas: the Guṇas (sattvaguṇa, rajoguṇa & tamoguṇa) and buddhi (Intellect) and explains how to regulate the earlier 4 by means of sattvaguṇa. He ends that part of the discourse with a statement:

    mānuṣyamāhustattvajñāḥ śivabhāvena bhāvitam || 76 

    The human condition, the knowers of Tattvas say, is imbued with Śiva-nature.

    Contrast this with the atheist Satyavrata’s statement that human existence is cursed. It is at this point Nandabhadra asks the question, “Why do the pious suffer?”


    All you say may be true but the Īśvara-s, who are givers of everything, the Devas worshiped by all–why do they not protect their own devotees from sorrows? Particularly, some of these devoted ones are sunk in misery. My intellect is deluded because of this, boy! What do you think?

    The Boy divides the devotees into two types–pure and impure–and warns about the consequences of worshiping Devas when ‘impure’. When an ‘impure’ man worships Devas, the Bhūta-s take over him and make him resort to improper acts, causing him to perish quickly–adā bhūtānyā viśaṃti sa ca muhyati tatkṣaṇāt || vimūḍhaścāpyakāryāṇi tāni tāni niṣevate|–akārya here means an improper/unbefitting act.

    What does impure mean here? Here, it means a spiritually impure person who does not do the duties placed upon him by Īśvara.

    Now, what about the pure bhaktas, the real ones who perform their obligations faithfully and then worship? Why do bad things happen to them?

    The Boy answers that a huge amount of previous karma-s, which may take several painful lifetimes, are rapidly consumed in the course of a single life–tasya pūrvakṛtaṃ vyaktaṃ karmaṇāṃ koṭi mucyate|–bahubhirjanmabhirbhojyaṃ bhujyetaikena janmanā

    When such a huge amount of karmas is burnt off, the soul can proceed to realize its true objectives (happiness here and hereafter) without obstacles.


    So far, we have seen the conversation between Nandabhadra and the young boy and we now have a perspective on why pious people suffer even as they faithfully worship Īśvara. Now, Nandabhadra takes up another question, which many of us would have as well – Why are sinful people seen to lead good lives?

    What follows as response is a very simple but useful categorization of distribution of puṇya-s for the life here and the life in the other world. 

    The boy explains that dāna was done by  these sinful men in their previous lives, but with a tāmasa intent, along with worship of Hara with a rājasika attitude – vyaktaṃ taistamasā dattaṃ dānaṃ pūrveṣu janmasu| rajasā pūjitaḥ śaṃbhuḥ

    However, because those charitable acts were performed out of a tāmasa intent, there is no genuine attachment to Dharma – kiṃ tu yattamasā karma kṛtaṃ tasya prabhāvataḥ| dharmāya na ratirbhūyāt

    After being duly rewarded for that charitable act which was beneficial to another (even though performed out of an ulterior motive and poor character), that person will end up in hell; there is no doubt here about this – bhuktvā puṇyaphalaṃ yāti narakaṃ nātra saṃśayaḥ

    In this regard, the boy quotes a Śloka by Mārkaṇḍeya:

    ihaivaikasya nāmutra amutraikasya no iha |

    iha cāmutra caikasya nāmutraikasya no iha ||

    ihaivaikasya nāmutra – Here only for one [person], not [in the] hereafter

    amutraikasya na iha – [In the] hereafter for [another] one, not here

    iha cāmutra caikasya – [Both] here and hereafter for [yet another] one

    nāmutraikasya na iha – Not [in the] hereafter for [another] one; not here [for him as well] 

    What does this mean?


    Case 1 – ihaivaikasya nāmutra – Here only for one [person], not [in the] hereafter – This person has performed puṇyakarman that leads to enjoyment in this life but that puṇyakarman did not come together with a good stream of vāsana-s (mental disposition) that would impel him to do further, genuinely good deeds, which in turn will lead him to happiness in the afterlife (heaven). This first case, though not explained, is the earlier-mentioned example of sinful men who have inherited sinful vāsana-s but did charitable deeds in a previous life out of less-than-noble motives.

    Case 2 – amutraikasya na iha – [In the] hereafter for [another] one, not here – This is where a person performs puṇyakarman in this life and that will lead him to a good end in the next world (amutra) but he has not performed puṇyakarman previously and that leads to a less-than-stellar life here. Again, no example is given for this. But we can see that this goes well with the situation we went through in the earlier part of the thread – genuinely pious and good men who go through miseries here.

    Case 3 – iha cāmutra caikasya – [Both] here and hereafter for [yet another] one – This is where a person has performed puṇyakarman previously and consequently enjoys life here. He has also inherited a stream of good vāsana-s from his previous lives, further perpetuating the performance of puṇyakarman in this life, leading him to a blessed state in the afterlife. Needless to say, this is the best of situations and one towards which we all have to work.

    Case 4 – nāmutraikasya na iha – Not [in the] hereafter for [another] one; not here [for him as well] – This is the worst. The person has not performed any puṇyakarman to have a good life here and does not have it within himself (lack of good vāsana-s at best and abundance of bad vāsana-s at worst) to perform puṇyakarman here so that he can have a good end in the afterlife at least. Nevertheless, even someone stuck in this vicious, seemingly self-perpetuating cycle, can have a way out, thanks to the sovereign grace of Īśvara. More on this some other time.


  • The Pancakrtya : Understanding the Five Divine Acts in Siva Temple Mahotsavam

    The Pancakrtya : Understanding the Five Divine Acts in Siva Temple Mahotsavam



    TaHiEnFrEs

    சிவாலய மஹோற்சவமானது இறைவனது பஞ்ச கிருத்தியத்தைக் (ஐந்தொழில்) குறிப்பதாக நிகழும். பெரும்பாலும்
    10 நாட்களில் நிகழ்கின்ற இப்பெருவிழாவின் தத்துவம் சிவஞான நூல்களில் இனிது விளக்கப்பட்டுள்ளன.

    முதல் நாள் அன்று பெருமான் அன்னவாகனத்தில் எழுந்தருளி வருவது மரபு. இது பிரம தேவனுடையது ஆதலால் முதல் மூன்று நாள் உற்சவங்களும் சிவபெருமான் சிருஷ்டிகர்த்தா வாகிய பிரமதேவனிடம் அதிட்டித்து நின்று சிருஷ்டித்
    தொழிலைச் (படைத்தலை) செய்கின்றான் என்பதை விளக்கும்.

    நான்காவது நாளில் பெருமாள் நாக வாகனதில் எழுந்தருளி வருவது மரபு. இது திருமாலின் வாகனமாதலால் 4, 5, 6 ஆகிய விழாக்களும் சிவபெருமான் திதிகர்த்தாவாகிய திருமாலிடம் அதிட்டித்து நின்று திதித்தொழிலை (காத்தலை) நிகழ்த்துகின்றான் என்பதை விளக்கும்.

    7-வது நாளன்று பெருமான் இரதத்திலும் 8-வது நாளன்று குதிரை வாகனத்திலும் எழுந்தருளுவது மரபு. இது பெருமான் சம்ஹார கர்த்தாவாகிய ருத்ரமூர்த்தியிடம் அதிட்டித்து நின்று சம்ஹாரத் தொழிலை (அழித்தலை) நிகழ்த்துகின்றான்
    என்பதைக் காட்டும். ஒன்பதாம் நாளில் ஆண்டவன் பிக்ஷாடனராக எழுந்தருளி வருவது, பெருமான் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளது செருக்கை (அவர் அறிவை மயக்கி) அடக்கியதைக் குறிக்கும். மறைத்தல் சக்தி கருநிறமாதலால், பெருமானும் கரிய பட்டு நூல்களையும், கரிய புட்பமாலையையும் அணிந்து வருவான். இது மறைத்தல் சக்தி கருநிறமானது என்றும் மயக்கும் தன்மையுடைய தென்றும், இவ்விழா (மறைத்தலை) திரோதானம் என்னும் நான்காவது தொழிலை குறிக்கும்.

    இனி கடைசி நாளாகிய பத்தாவது நாள் அன்று பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வந்து தீர்த்தமாடிஉயிர்களுக்கு அருள்புரிகின்றான் என்பது அநுக்ரகத் தொழிலைக் (அருளல்) குறிக்கும்.

    சிவக்ஷேத்ராலய மஹோற்சவ உண்மை விளக்கம் என்னும் நூலில் என்னும் நூலில் இருந்து…


    English IAST Transliteration

    Civālaya Mahōtsavamānatu Iraivanatu Pañca Kiruttiyattai Kuṟippitāk Nikiṭum. Perumpālum 10 Nāṭkaḷil Nikiṉṟa Ippēruviḻāviṉ Tatvam Civaññāna Nūlaikalil Iṉitu Viḷakkappaṭṭuḷḷan. Mutaḷ Nāḷ Anṟu Perumāṉ Annavākaṉattil Eḻuntharulī Varuvatu Marapu.

    Idu Paramateivanuṭaiyatu Ātalāl Mutaḷ Mūṇṟu Nāḷ Uṟcavangaḷum Civaperumāṉ Ciruṣṭikarttāvākya Paramateivanuṭaiyatu Atiṭṭitte Ninnu Ciruṣṭit Toḻilai (Paṭaittalai) Ceykiṉṟāṉ Enpat Enpatu.

    Nāṉkāvatam Nāḷil Perumāḷ Nāka Vākaṉatilai Eḻuntharulī Varuvatu Marapu. Idu Tirumāliṉ Vākaṉamātalāl 4, 5, 6 Ākkiya Viḻākaḷum Civaperumāṉ Titikarttāvākya Tirumāḷiṭam Atiṭṭitte Ninnu Titit Toḻilai (Kāttalai) Nikalthukkiṉṟāṉ Enpatu.

    7-vatu Nāḷaṉṟu Perumāṉ Irattilum 8-vatu Nāḷaṉṟu Kutirai Vākaṉattilum Eḻuntharuluvatu Marapu. Idu Perumāṉ Samhāra Karttāvākya Ruttramūrttiyilam Atiṭṭitte Ninnu Samhārat Toḻilai (Aḻittalai) Nikalthukkiṉṟāṉ Enpatu Kāṭṭum.

    Ompatāvatu Nāḷil Āṇṭavaṉ Pikhṣāṭaṉarāka Eḻuntharulī Varuvatu, Perumāṉ Tārakāvaṉattu Ṛṣi Pattinikalaṉatu Cerukkiṉ (Avar Aṟivai Mayakkī) Aṭakkiyat Enpatu Kuṟikkum. Maṟattāl Sakti Karuṉiṟamātalāl, Perumāṉum Kariya Paṭṭu Nūlkaḷaiyum, Kariya Puṣpamālaiyum Aṇiṉtu Varuvāṉ. Idu Maṟattal Sakti Karuṉiṟamaṉatu Enṟum Mayakkuṁ Taṉmatuṭaiyatu Teṉṟum, Ivviḻā (Maṟattālai) Tirōtāṉam Enṉum Nāṉkāvatu ToḴilai Kuṟikkum.

    Iṉi Kaṭaicci Nāḷākkiya Pattāvatu Nāḷ Aṉṟu Perumāṉ Capparattil Eḻuntharulī Vantu Tīrtthamāṭi Uyirkaḷukk Arul Puriṉṟāṉ Enpatu Anukraha Toḻilai (Aruḷal) Kuṟikkum.

  • Karma and Liberation in Saiva Siddhanta

    Karma and Liberation in Saiva Siddhanta


    TaHiEnFrEs

    கன்மம் – சித்தாந்திகள் கொள்கை:

    இந்தியத் தத்துவ தரிசனங்கள் எல்லாம் கன்மக் கொள்கையைப் பற்றிப் பேசுகின்றன.என்றாலும் அவற்றுள் வேறுபாடு உண்டு.பவுத்தம் ஒருவன் அறிந்து செய்த வினையே பலனைக் கொடுக்கும், அறியாது செய்த வினை, வெறும் செயல் அளவில் நின்று விடும் என்று கூறும்.

    சமணம் அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் செய்த வினை தானே பலனைக் கொடுக்கும் என்று கூறும்.இதற்கு இளங்கன்று ஒன்றைப் பசுமந்தையில் புகுத்தின் அது தன் தாயைத் தானே தேடி அடையும்.அதனைப் போலப் பல பிறவிகளிலும்,வினை, தன்னைச் செய்தவனையே சென்று சேரும் என கூறுவர்.(பசுவின் கன்று சடமல்ல, வினை சடம்)

    சைவம் இதற்கு மாறுபட்டு வினை,சடம், அறிவற்றது.தானே செய்தவனைச் சென்று அடையாது.இறைவனே வினையைச் செய்தவனுக்குக் கன்ம பலனை அறிந்து ஊட்டுவான் என உரைக்கும்.

    பெரும்பாலான சமயங்கள் கன்மக் கொள்கையை வெறும் ‘காரண காரியங்கள்’ ஆகவோ,ஊழாகவோ தலை எழுத்து எனும் குறுகிய நோக்கிலேயோ காண்கின்றன.சைவசித்தாந்தத்தில் வினைக் கொள்கை வினையினை அடிப்படைக் காரணத்திலிருந்து ஆராய்கின்றது.சித்தாந்தத்தில் வினைக் கொள்கை அறிவுப்பூர்வமானதும் விரிவானதும் ஆகும்.

    “செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனும் கொடுப்பானும், மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்.” எனச் சைவமே கொள்ளும்.

    மூலகன்மம் என்னும் நூலிற்கு முனைவர் ஸ்ரீ கோ.ந.முத்துக்குமாரசாமி ஐயா அவர்கள் அளித்த மகிழ்வுரையிலிருந்து…


    English IAST Transliteration

    kanmam – siddhāntikaḷ koḷkai:

    indiyat tattuva darisaṉaṅkaḷ ellām kaṼmakk koḷkaiyaip paṟṟip pēcukiṉṟaṉa. eṉṟālum avaṟṟuḷ vēṟupāṭu uṇṭu. pauttam oruvaṉ aṟintu seyta viṉaiyē palaṉaik koṭukkum, aṟiyātu seyta viṉai, veṟum ceyal alaavil niṉṟu viṭum eṉṟu kūṟum.

    camaṇam aṟintu seytālum aṟiyāmal seytālum seyta viṉai tāṉē palaṉaik koṭukkum eṉṟu kūṟum. itaṟku iḷaṅkaṉṟu oṉṟaip pacumantaiyil pukuttiṉ atu taṉ tāyait tāṉē tēṭi aṭaiyum. ataṉaippōlak pala piṟavikaḷilum, viṉai, taṉṉaic ceytavaṉaiyē ceṉṟu cērum eṉa kūṟuvar. (pacuviṉ kaṉṟu caṭamalla, viṉai caṭam)

    caivam itaṟku māṟupaṭṭu viṉai, caṭam, aṟivaṟṟatu. tāṉē ceytavaṉaic ceṉṟu aṭaiyātu. iṟaivaṉē viṉaiyaic ceytavaṉukkuk kaṉma palaṉai aṟintu ūṭṭuvāṉ eṉa uraikkum.

    perumpālaṉa camaṅkaḷ kaṉmakk koḷkaiyai veṟum ‘kāraṇa kāriyaṅkaḷ’ ākavō, ūḷākavō talai eḻuttu eṉum kuṟukiya nōkkilēyō kāṇkiṉṟaṉa. caivasiddhāntattil viṉaik koḷkai viṉaiyiṉai aṭippaṭaik kāraṇattiliruntu ārāykiṉṟatu. siddhāntattil viṉaik koḷkai aṟivuppūrvamāṉatum virivāṉatum ākum.

    “ceyviṉaiyuñ ceyvāṉum ataṉpayaṉum koṭuppāṉum, meyvakaiyāl nāṉkākum vititta poruḷ.” eṉac caivamē koḷḷum.

    mūlakanmam eṉṉum nūliṟku muṉaivar śrī ko. na. muttukumārasāmi aiyā avarkaḷ aḷitta makiḻvuraiyiliruntu…

  • Understanding the Role and Significance of Siva Lingam and Siva Temple

    Understanding the Role and Significance of Siva Lingam and Siva Temple


    TaHiEnFrEs

    கடவுள்‌ சிவபெருமான் ஒருவரே. அவர்‌ அறக்கருணையாலும்‌ மறக்கருணையாலும்‌ உயிர்களுக்கு அநுக்கிரகம்‌ செய்யும்‌ பொருட்டு எடுத்துக்கொண்ட அருள்‌ வடிவங்கள்‌ சந்திரசேகரர்‌, சோமாஸ்கந்தர்‌ முதலாகப்‌ பலஉள்ளன. சிவபெருமானது ஆணையைப்‌ பெற்று உயிர்களுக்கு நிக்கிரக அநுக்கிரகங்களைச்‌ செய்கின்ற திருமால்‌ நான்முகன்‌ முதலிய தேவர்‌களும்‌ உள்ளனர்‌. முன்னே சொல்லிய கடவுளரின்‌ திருவுருவங்களும்‌ பின்னே சொல்லிய தேவர்களின்‌ திருவுருவங்களும்‌ சிவாலயத்தில்‌ வைத்துப்‌ பூசிக்கப்‌ பெறுவதால்‌ சிவாலயம்‌ அனைத்துத்‌ தெய்வங்களின்‌ சொரூபமாக அமைந்திருக்கிறது. மேலும்‌ உயிர்‌களுக்கு அருள்புரிவதற்குச்‌ சிவபெருமான்‌ அருவம்‌, அருவுருவம்‌, உருவம்‌ ஆகிய மூவகைத்‌ திருமேனிகளையும் கொள்ளுவார்‌. சிவாலயத்தின்‌ பள்ளியறையிலுள்ள கண்ணாடியில்‌ அருவ வடிவமும்‌ சிவலிங்கத்தில்‌ அரு வுருவ வடிவமும்‌ சந்திரசேகரர்‌, விநாயகர்‌ முதலிய திருவுருவங்களில்‌ உருவ வடிவமும்‌, அமைந்துள்ளன.

    இன்னும்‌ சிவாலயத்திலுள்ள சிவலிங்கம்‌ பதி, இடப தேவர்‌ பசு, பலிபீடம்‌ பாசம்‌ என்பதும்‌ அறியத்தக்கதாகும்‌.

    இங்ஙனமாகச்‌ சிவாலயத்தில்‌ உள்ள உண்மைகள்‌ விரிக்கிற்‌ பெருகும்‌. உண்மை நூல்களை ஓதியுணர்ந்த ஆன்றோர்களிடம்‌ இவற்றைக்‌ கேட்டுத்‌ தெளிந்து அமைதி பெறுவது அறிவுடைமையாகும்‌,

    பொருளாற்றலும்‌ அருளாற்றலும்‌.

    காணப்‌ பெறுகின்ற எல்லாப்‌ பொருள்களிலும்‌ அவ்வவற்றுக்கெனத்‌ தனித்தனியே ஆற்றல்கள்‌ அமைந்திருக்கின்றன. இதைப்‌ “பெளதிக ஆற்றல்‌” என்று சொல்லுவோம்‌. இதைப்‌ போலவே எல்லாப்‌ பொருள்களிடத்திலும்‌ எதனாலும்‌ அளந்தறிய முடியாத தெய்வீக ஆற்றலும்‌ நிறைந்திருக்கிறது. அதனாலேயே அறிவற்ற பெளதீக ஆற்றல்‌ அறிவுள்ள மனித ஆற்றலுக்கும்‌ அப்பாற்‌ பட்டுச்‌ செயற்பட்டு விடுகிறது.

    பொருளாற்றல்‌ பொருள்களில்‌ தங்கியிருந்து வெளிப்படுவது போல அருளாற்றல்‌ அருள்‌ நிறைந்த சிவஞானியரது உள்ளம்‌ உடம்பு செயல்‌ முதலியவற்றிலும்‌ அவர்‌ கைக்கொள்ளும்‌ தருப்பை மாவிலை முதலியவற்றிலுமாக எளிதில்‌ வெளிப்பட்டு அனைவருக்கும்‌ பயனை வழங்குகிறது.

    கும்பாபிஷேக தத்துவம் என்னும் நூலில் சைவத்திரு தத்புருஷ தேசிகர் அவர்கள்.


    English IAST Transliteration

    kaṭavuḷ civaperumāṉ oruvarē. avar aṟakkaruṇaiyālum maṟakkaruṇaiyālum uyirkaḷukku anukkirakam ceyyum poruṭṭu eṭuttukkoṇṭa aruḷ vaṭivaṅkaḷ candirasēkarar, comāskandar mutalākap palavuḷḷaṉa. civaperumāṉatu āṇaiyaip peṟṟu uyirkaḷukku nikkiraka anukkirakaṅkaḷaic ceykiṉṟa tirumāl nāṉmukaṉ mutaliya tēvarkaḷum uḷḷaṉar. muṉṉē solliya kaṭavuḷariṉ tiruvuruvāṅkaḷum piṉṉē solliya tēvarkaḷiṉ tiruvuruvāṅkaḷum civālayattil vaittup pūccikkap peṟuvadāl civālayam anaittut teyvaṅkaḷiṉ sorūpamāka amaintirukkiṟatu. mēlum uyirkaḷukku arulpuriṟataṟkuc civaperumāṉ aruvam, aruvuruvam, uruvam ākiya mūvakaitt tirumēṉikaḷaiyum koḷḷuvār. civālayattiṉ paḷḷiyaṟaiyullḷa kaṇṇāṭiyil aruva vaṭivamum civiliṅkattil aruvuruvam vaṭivamum candirasēkarar, viṉāyakar mutaliya tiruvuruvāṅkaḷil uruva vaṭivamum, amaintuḷḷaṉa.

    iṉṉum civālayattilluḷḷa civiliṅkam pati, iṭapa tēvar pacu, palipīṭam pācam eṉpatum aṟiyatakkadākum.

    iṅṅaṉamākac civālayattil uḷḷa uṇmaikaḷ virikkiṟ perukum. uṇmai nūlkaḷai ōtiyuṇarnda āṉṟōrkaḷiṭam ivaṟṟaik kēṭṭut teḷintu amaiti peṟuvatu aṟivuṭaimaiyākum.

    poruḷāṟṟalum aruḷāṟṟalum.

    kāṇap peṟukiṉṟa ellāp poruḷkaḷilum avvavaṟṟukkeṉat taṉittaṉiyē āṟṟalkaḷ amaintirukkiṉṟaṉa. itaip “pautika āṟṟal” eṉṟu solluvōm. itaip pōlavē ellāp poruḷkaḷiṭattilum etaṉālum aḷantariya muṭiyāta teyvīka āṟṟalum niṟaintirukkiṟatu. ataṉālāyē aṟivaṟṟa pautīka āṟṟal aṟivuḷḷa maṉita āṟṟalukkum appāṟpaṭṭuc ceṟpaṭṭu viṭukiṟatu.

    poruḷāṟṟal poruḷkaḷil taṅkiyiruntu veḷippaṭuvatu pōla aruḷāṟṟal aruḷ niṟainta civajñāṉiyaratu uḷḷam uṭampu ceyal mutaliya vaṟṟilum avar kaikkoḷḷum taruppai māvilai mutaliya vaṟṟilumāka eḷitil veḷippaṭṭu aṉaivarukkum payaṉai vaḻaṅkukiṟatu.

    kumpābhiṣēka tattuvam eṉṉum nūlil caivattiru tatpuruṣa dēśikar avarkaḷ.