Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

Benefits of the Asana or Seat

தமிழ்
हिन्दी
En
Fr
Es

ஆசன பலன்‌

சிவபூசை, செபம் முதலியவற்றைச்‌ செய்யும்பொழுது விதிக்கப்பட்ட ஆசனங்களின் மீதிருந்தே செய்தல்வேண்டும்‌. தருப்பைப்புல்லினால் உண்டாக்கப்பட்ட ஆசனத்‌திருப்பின்‌ கீர்த்தியையும்‌, மரப்பலகைகளில் இருந்தால்‌ பெருஞ்சம்பத்தையும்‌, வஸ்‌திராசனத்‌திருந்தால்‌ வியாதிநீக்கத்தையும்‌, கம்பளத்‌தில் இருந்தாற்‌ செளக்யத்தையும்‌, புலித்தோலில் இருந்தாற்‌ சம்பத்தையும்‌ மோட்சத்தையும்‌, கிருஷ்ணாசினத்தில் இருந்தால்‌ ஞானத்தையும்‌, கூர்மாசனத்தில் இருந்தால் போகமோட்சத்தையும் அடைவர்.

நிலத்திலிருந்து செய்பவர்கள்‌ துக்கக்தையும்‌, கல்லில் இருந்து செய்பவர்கள்‌ ரோகங்களையும்‌, இலையின் மீதிருந்து செய்தவர்‌கள் மனச்சஞ்சலத்தையும்‌, மூங்கிற்பாயிலிருந்து செய்தவர்கள்‌ கஷ்டதரித்திரத்தையும் அடைவர்‌.

சிவபூசை விளக்கம் (1928) என்னும் நூலில் இருந்து…

இஃது அச்சுவேலி சிவஶ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் பலநூல்களை ஆதாரமாகக் கொண்டு இயற்றி, பருத்தித்துறை கலாநிதி யந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது.

கிருஷ்ணாசினம் – கறுப்பு மானின் (Black antelope)தோல்.

आसन के लाभ

शिव पूजा, जप आदि करते समय बताए गए आसनों का प्रयोग करना चाहिए।

तरुपाई घास से बने आसन पर व्यक्ति को महिमा, लकड़ी के तख्ते पर आसन पर बैठने पर महानता, कपड़े पर आसन पर बैठने पर रोगों से मुक्ति, कालीन पर आसन पर बैठने से समृद्धि, बाघ की खाल पर आसन लगाने से धन और मोक्ष, ज्ञान की प्राप्ति होती है। यदि कोई कृष्ण आसन पर है तो भोगमोक्ष, और यदि कोई कुर्मासन पर है तो भोगमोक्ष।

जो इसे मिट्टी से बनाते हैं उन्हें दुःख मिलेगा, जो इसे पत्थर से बनाते हैं उन्हें रोग मिलेंगे, जो इसे पत्ते से बनाते हैं उन्हें दुःख मिलेगा और जो इसे बांस से बनाते हैं उन्हें कष्ट मिलेगा।

शिव पूसाई स्पष्टीकरण (1928) पुस्तक से…

इसे अचुवेली के गुरु शिवश्री एस. कुमारस्वामी द्वारा कई पुस्तकों के संदर्भ में संकलित किया गया था और पारुधितुरा कलानिधि यंत्रसलाई द्वारा प्रकाशित किया गया था।

कृष्णासिनम – काली मृग त्वचा।

Benefits of the Asana Seat

While doing Shiv Pooja, Japa(m) etc., it should be done using the prescribed Asanas.

One attains the glory from a seat made of tarupai grass, greatness if one is on wooden boards, cure of diseases if one is on a cloth, prosperity if one is on a carpet, wealth and moksha if one is on a tiger skin, wisdom if one is on Krishna seat, and Bhogamoksha if one is on Kurmasana.

Those who make it from earth will get sorrow, those who make it from stone will get diseases, those who make it from leaf will get grief, and those who make it from bamboo will get hardship.

From the book Shiva Poosai Explanation (1928)…

It was compiled by the Guru Sivashri S. Kumaraswamy of Achuveli with reference to several books and published by Parudhitura Kalanidhi Yantrasalai.

Krishnasinam – Black antelope skin.

Avantages du siège Asana

Lorsque vous faites Shiv Pooja, Japa(m), etc., cela doit être fait en utilisant les Asanas prescrits.

On atteint la gloire à partir d’un siège fait d’herbe tarupai, la grandeur si l’on est sur des planches de bois, la guérison des maladies si l’on est sur un tissu, la prospérité si l’on est sur un tapis, la richesse et le moksha si l’on est sur une peau de tigre, la sagesse. si l’on est sur le siège de Krishna, et Bhogamoksha si l’on est sur Kurmasana.

Ceux qui le fabriquent à partir de la terre connaîtront du chagrin, ceux qui le fabriquent à partir de pierre auront des maladies, ceux qui le fabriquent à partir de feuilles auront du chagrin et ceux qui le fabriquent à partir de bambou auront des difficultés.

Extrait du livre Explication de Shiva Poosai (1928)…

Il a été compilé par le Guru Sivashri S. Kumaraswamy d’Achuveli en référence à plusieurs livres et publié par Parudhitura Kalanidhi Yantrasalai.

Krishnasinam – Peau d’antilope noire.

Beneficios de la silla Asana

Al hacer Shiv Pooja, Japa(m), etc., se debe hacer usando las Asanas prescritas.

Uno alcanza la gloria desde un asiento hecho de hierba tarupai, la grandeza si está sobre tablas de madera, la curación de enfermedades si está sobre una tela, la prosperidad si está sobre una alfombra, la riqueza y moksha si está sobre una piel de tigre, la sabiduría. si uno está en el asiento de Krishna, y Bhogamoksha si está en Kurmasana.

Aquellos que lo hagan de tierra experimentarán tristeza, aquellos que lo hagan de piedra experimentarán enfermedades, aquellos que lo hagan de hojas experimentarán tristeza y aquellos que lo hagan de bambú experimentarán dificultades.

Extracto del libro Explicación de Shiva Poosai (1928)…

Fue compilado por Guru Sivashri S. Kumaraswamy de Achuveli con referencia a varios libros y publicado por Parudhitura Kalanidhi Yantrasalai.

Krishnasinam: piel de antílope negro.


Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

Palani Sivasree Isaana Sivacharya Swamigal

நீற்றாத் திருமேனி நெஞ்சறா அஞ்செழுத்து நிமலன் பூசைச் சாறறாத் தினப்பணிகள் தடையறாக் கருணை விழிசாரும் இன்சொல் பேற்றாச் சைவநெறி பெட்பறாப் பஞ்சகச்சம் பிறங்கு முந்நூல் வீற்றா அக்கமணி மிளிரும் ஈசானகுரு விரைத்தாள் போற்றி !

– புலவர்மணி சோமசுந்தரம்செட்டியார் .

சிவக்கடலில் திளைத்திடுவார் செய்ய திருவைந்தெழுத்தே திகழும் நாவார்
சுவைத் தமிழும் வடமொழியும் துய்த்துணர்ந்தார் வெண்ணீறு துதைந்த மெய்யார் தவத்துயர்ந்தார் தண்ணளியார் சிவபூஜைக்கு உறுதுணையார் தன்னேரில்லார் பவக்கடல் நின்று எமையேற்றும் ஈசான குரு பாதம் பணிந்து வாழ்வாம் !

– தமிழ்க்கடல் இராய.சொக்கலிங்கம் செட்டியார் .

நாவேறும் சித்தாந்த நல்லுரையும் சிவனருள்சீர்நண்ணும் நால்வர் பாவேறு மணமும் அவர் ஈசான ஞானகுரு பரனே நாளும் வேவேறும் ஈசனருள் பூசை நயம்பெறத் தந்தாய் சிறியேன் நெஞ்சப் பூவேறியிருந்து உன்னை மறவாத மனமும் நல்கப் போற்றுவேனே .

– தி.செ.முருகதாசய்யா , கௌமார மடாலயம் , திருவாமத்தூர் .

மான்காட்டி மான்பிடிக்கும் வாய்ப்பை நினைப்பூட்டி
ஊன்காட்டி – வான்காட்ட நம்போல் உருக்காட்டி வந்த ஈசான சிவ மாதேவன் பாதமலர் சிந்தனையால் சேரும்திரு . 

யாக்கைகொடுத்து எமையிங்கே இவைநுகர்ந்து வருகவென எம்கரத்தில் நோக்கிருநான் குடையான்முன்பு எழுதும்எழுத் தினைஞான நோக்கம் செய்து பூக்குமலர்க் கரத்தாலே அழித்தென்றும் சிவபோகம் பொலியும் வண்ணம் தீக்கைபுரிந்து ஆண்டருளும் ஈசான சிவகுரவன் திருத்தாள் போற்றி போற்றி .

சைவத்திரு தத்புருஷ தேசிகரவர்கள்

Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

The Various Epithets of Rajaraja Chozhan

தமிழ்
हिन्दी
En
Fr
Es

திரு இராஜராஜ சோழ மாமன்னரின் மெய்க்கீர்த்தி

திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி வேங்கை நாடுங் கங்க பாடியும் தடிகை பாடியும் நுளம்ப பாடியும் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் முரட்டெழிற் சிங்களர் ஈழமண்டலமும் இரட்ட பாடி யேழரை யிலக்கமும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந் தெண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன் னெழில்வள ரூழியு ளெலலா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோராசகேசரி வர்மன்

காந்தலூர் கொண்டான், அழகிய அழகிய சோழன், மும்முடிச்சோழன்ராஜசர்வக்ஞன், சோழநாராயணன், அபயகுலசேகரன், அரித்துர்க்கலங்கன், அருள் மொழி, ரணமுகபீமன், ரவி வம்சசிகாமணி, ராஜ பாண்டியன், ராஜ கேசரிவர்மன், சோழேந்திர சிம்மன், ராஜ மார்த்தாண்டன், ராஜேந்திர சிம்மன், ராஜவிநோதன், உத்தமசோழன், உத்துக துங்கன், உய்யக் கொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், சண்ட பராக்கிரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாத சேகரன், சோழகுலசுந்தரன், சோழ மார்த்தாண்டன், திருமுறைகண்ட சோழன், ஜன நாதன், ஜெயகொண்ட சோழன், தெலிங்க குலகாலன், நித்ய விநோதன், பண்டிதசோழன், பாண்டிய ககுலாசனி பெரிய பெருமாள், மூர்த்தி விக்கிரமா பரணன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன்,உடையார் ஸ்ரீராஜராஜ சோழன் ஐப்பசி சதய நன்னாள்.

Transliteration :

Tirumakaḷ pōlap perunilac celviyum taṉakkē yurimai pūṇṭamai maṉakkoḷak kāntaḷūrc cālaik kalamaṟut taruḷi vēṅkai nāṭuṅ kaṅka pāṭiyum taṭikai pāṭiyum nuḷampa pāṭiyum kuṭamalai nāṭuṅ kollamuṅ kaliṅkamum muraṭṭeḻiṟ ciṅkaḷar īḻamaṇṭalamum iraṭṭa pāṭi yēḻarai yilakkamum munnīrp paḻantīvu paṉṉīrāyiramun teṇṭiṟal veṉṟit taṇṭāṟ koṇṭataṉ ṉeḻilvaḷa rūḻiyu ḷelalā yāṇṭun toḻutaka viḷaṅkum yāṇṭē ceḻiyarait tēcukoḷ kōrācakēcari varmaṉ

kāntalūr koṇṭāṉ, aḻakiya aḻakiya cōḻaṉ, mum’muṭiccōḻaṉrājacarvakñaṉ, cōḻanārāyaṇaṉ, apayakulacēkaraṉ, aritturkkalaṅkaṉ, aruḷ moḻi, raṇamukapīmaṉ, ravi vamcacikāmaṇi, rāja pāṇṭiyaṉ, rāja kēcarivarmaṉ, cōḻēntira cim’maṉ, rāja mārttāṇṭaṉ, rājēntira cim’maṉ, rājavinōtaṉ, uttamacōḻaṉ, uttuka tuṅkaṉ, uyyak koṇṭāṉ, ulakaḷantāṉ, kēraḷāntakaṉ, caṇṭa parākkiramaṉ, catrupujaṅkaṉ, ciṅkaḷāntakaṉ, civapāta cēkaraṉ, cōḻakulacuntaraṉ, cōḻa mārttāṇṭaṉ, tirumuṟaikaṇṭa cōḻaṉ, jaṉa nātaṉ, jeyakoṇṭa cōḻaṉ, teliṅka kulakālaṉ, nitya vinōtaṉ, paṇṭitacōḻaṉ, pāṇṭiya kakulācaṉi periya perumāḷ, mūrtti vikkiramā paraṇaṉ, cattiriya cikāmaṇi, kīrtti parākkiramaṉ,uṭaiyār srīrājarāja cōḻaṉ aippaci cataya naṉṉāḷ.


Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

Explanation of Siva Pujai

“சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி லவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே.”

திருமுறை 4, பதிகம் 112 பொது, பாடல் எண் : 9 : திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம்.
our Lord who has a red body and has the name of Civaṉ to denote himself only.
it such a great god admits me as his protege and protects me.
if I invoke him for many days catching hold of him by his name pavaṉ wandering wherever he goes.
he will definitely appear before me thinking this fellow will not cease invoking me for many days.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

சிவ என்னும் பதம் சி-வ-எனப்பிரிந்து, சிகாரம் பதியட்சரமாகவும், வகாரம் பரையட்சரமாகவும் பெயர்பெற்று, சூரியனும் ஒளியும்போலவிளங்கும்.

பிறவியையும் மலத்தையும் நீக்கி மோட்சத்தைத்தரும்
படிநினைத்துச் சிவசத்திகளிடத்தில் உடல் பொருளாவியை
ஒப்பித்தலே சிவபூசை என்பதன் கருத்தாகும்.
அதற்கு மந்திரமும் கிரியையும் பாவனையும் வேண்டப்படும். மந்திரமும் முத்திரையும் கிரியையின் கருத்து இது என்பதை விளக்கும். ஒவ்வொருகிரியையிலும் எய்தற்பாலனவாகி யபலன் இவை என்பதை மனதால் நினைப்பது பாவனையாகும்.

ஆகையால் மனம், வாக்கு, காயமென்னும் மூன்றும் ஒருமித்து மெய்யன்போடு கிரியை செய்தல் வேண்டும். அவை வெவ்
வேறு வழிப்பட அன்பின்றிச் செய்யுங் கிரியையாற் பயனிலவாம்.

“கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.”

திருமுறை 5, பதிகம் 99 பொது, பாடல் எண் : 9 : திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம்.
if one has no love towards Araṉ, even if one bathes plunging into crores of holy waters with intention.
it is like the foolish act of the obstinate person who pours water that has the nature of flowing, into a pot of holes and keeping it safe by covering it with a lid.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

சிவபூசை விளக்கம்(1928)
என்னும் நூலில் அச்சுவேலி ச.குமாரசுவாமிக் குருக்கள்.


Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

Saiva Siddhantham –A brief description

சைவ சித்தாந்தம் – சுருக்கமான விளக்கம்

  1. உடலுக்கு வேறாக உயிர் என ஒரு பொருள் உண்டு.
  2. அந்த உயிருக்கு உள்ளாக இறைவன் என்னும் மற்றொரு
    பொருள் உண்டு.
  3. உயிர்ப்பொருள், உள்ளிருக்கும் இறைவன் உணர்த்துதல்
    வழியாகத்தான் தனது உடற் கருவிகளை இயக்கிக்
    கொண்டு இவ்வுலகில் வாழ்கிறது.
  4. உயிரின் உலகியல் வாழ்வுக்கு உடந்தையாக ஆணவம்,
    கன்மம், மாயை என்ற மும்மலங்கள் உள்ளன.
  5. திருவருளால் இவற்றைச் சார்ந்து உயிர்வாழும் கட்டம்
    அவ்வளவும் பந்த நிலை அல்லது பெத்த நிலை.
  6. திருவருளால் இவற்றின் தொடர்பு நீங்கிச் சூக்கும
    உணர்வாகிய ஞான உணர்வினால் கடவுளை அறிந்து
    அடைந்து அனுபவிக்கும் நிலை மோட்ச நிலை அல்லது சுத்த நிலை.
  7. இச்சுத்த நிலைப்பேறு ஒவ்வோருயிர்க்கும் உரியது. ஆனால்,
    அதனதன் பக்குவ காலத்தில் மட்டும் அதற்கதற்கு வாய்ப்பது.
  8. இவ்வகையிற் சம்பந்தப்படும் பொருள்கள் மூன்று. அவை
    பதி, பசு, பாசம் என்பன.
  9. இம் முப்பொருள் இயல்புகளை உரிய முறையிற்
    கற்றுக் கேட்டுத் தெளிபவர்களே மெய்ஞ்ஞானம் பெறுவர்.
    அவர்களே மேல்கதிக்கும் வீடு பேற்றிற்கும் உரியர்.
  10. வீடு பேறு என்பது உயிர் தன் சீவத்தன்மை கழிந்து
    சிவத்தோடு ஏகரசமாய் நின்று அநுபவிக்கும் ஆராத ஒரு
    பேரின்ப நிலை.

இவையும்‌ இவற்றின்‌ உள்‌ விரிவுகளுமே சைவசித்தாந்தம்‌ கூறும்‌ விஷயங்கள்‌. இவற்றை அறிவதன்‌ மூலம்‌ ஒருவன்‌ தன்னை அறிந்தவன்‌ ஆவான்‌. தன்னை அறியும்‌ அறிவும்‌ தலைவனாகிய இறைவனை அறிதலோடேயே நிகழும்‌. இந்த அறிவு நிலையே அறிவுக்கெல்லாம்‌ உயர்நிலை அறிவாகும்‌. இந்த அறிவு நிலையை எட்டாவிடில்‌ அறிவுக்குப்‌ பயன்‌ எதுவுமில்லை.

“கற்றதனாலாய பயனென்‌” என்ற செய்யுளின்‌ மூலம்‌ இக்கருத்து திருக்குறளில்‌ முத்திரீகரணம்‌ (முத்திரையிடல் ) செய்யப்பட்டிருக்கிறது.

சித்தாந்தச் செழும் புதையல்கள் என்னும் நூலில் பண்டிதர் மு.கந்தையா அவர்கள்.


Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

The Greatness of Siva Pujai

சிவ பூஜை மான்மியம்

விண்ணவர் , முநிவர் , எவ்வெத் தலங்களிற் சிவபெருமானை உமையுடன் வழிபட்டனர் , எங்களுக்கு உணர்த்தியருளுக என முநிவர்கள் கேட்கச் ஶூதமாமுனிவர் கூறுகின்றார் .

திருமால் : – காசியிற் சிவனைப் பூசித்துக் காத்தல் தொழிலும் , ஐந்தாயுதமும் , திருமகளும் , கருடவாகனமும் பின்னும் பல வரங்களும் அளிக்கப் பெற்றார் . சிவலோகத்தின் கீழே வைணவபதத்தில் இருக்கப் பெற்றார் .

பிரமன் : – காஞ்சியிற் பிஞ்ஞகனை வழிபட்டுப் படைத்தல் தொழிலும் கலைமகளும் , அன்னவாகனம் முதலியவும் தரப்பெற்று வைணவபதத்தின் கீழ் இருக்கப் பெற்றான் . அந்த இடம் பிரமலோகம் எனப்படும் .


இந்திரன் : –ஸ்ரீ சைலத்தில் ஈசனை அருச்சித்து வானுலக ஆட்சியும் , புலோமிசை( இந்திராணி ) யும் , ஐராவதமும் , உச்சைச்சிரவமும் , குலிசப்படையும் , கற்பகத்தருவும் , காமதேனுவும் , சிந்தாமணியும் , கீழ்த்திசையரசும் கிடைக்கப் பெற்றான் .

அக்கினி : – அண்ணாமலையில் அண்ணலைப் பூசித்து அக்கினிகளுக்கு அரசும் , சுவாஹா தேவியும் , ஆட்டுவாகனமும் , சத்திப்படையும் , தென்கீழ்த் திசை அரசும் பெற்றான் ,

இயமன் : – கேதாரத்தில் எம்பெருமானை வழிபட்டுத் தண்டமும் , எருமைக் கடா வாகனமும் , நடுவன் என்ற நிலையும் பெற்றுத் தென்றிசைக்குத் தலைவனானான் : மற்றும் சுவர்க்கத்துக்கும் நரகத்துக்கும் புகவேண்டிய உயிர்களின் புண்ணிய பாவம் அறிந்து கூறும் சபையினரையும் , கதிரவன் முதலான உயிர்கள் புரியும் கருமத்தை அறிந்துரைக்கப் பதினான்கு எழுத்தாளர்களுக்குத் தலைமை பூண்ட சித்திரகுத்தனையும் பெற்றான்.

நிருதி : -நிருதி கோகரணத்தில் நீலகண்டரைப் பூசித்து வாளும் , அரக்கர் சேனையும் பெற்றுத் தென்மேற்குத் திசைக்குத் தலைமை கொண்டான் .

வருணன் : – திருவானைக்காவில் வள்ளலை வழிபட்டு மகரமீன் வாகனமும் , பாசம் முதலிய படைகளும் , கடலரசும் மேற்றிசைத் தலைமையும் பெற்றான் .

வாயு :
வாயு காளத்தியில் மங்கைப்பாகனைப் பூசித்துக் காற்றின் தலைமையும் , பல படைகளும் , வடமேற்குத் திசை அரசும் பெற்றான் .

குபேரன் : –

குபேரன் சித்தேச்சுரத்திற் குன்ற வில்லியைப் பரவி வடதிசையரசும் நவநிதித் தலைமையும் , புட்பக விமானமும் , இயக்கர் முதன்மையும் , கதை முதலாம் படைகளும் , சிவபெருமானது தோழமையும் அருளப் பெற்றான் .

ஈசானன் : – திருவாரூரில் எந்தையைப் பூசித்துப் பெயருக்கு ஏற்ப சிவரூபமும் , படைகளும் , விடைவாகனமும் , பிற சிவசின்னங்களும் வடகீழ்த் திசையரசும் , அதிகாரம் முடிந்தவுடன் சிவனடி நிழல் வாழ்வும் வேண்டிப் பெற்றனன் .

சூரியன் : –
சூரியன் காஞ்சியிற் சூலபாணியைப் பூசித்து மறைமண்டலத்தில் தனி இருப்பும் , ஏழ்பரித்தேரும் , நவக்கிரகத் தலைமையும் பெற்றுப் பகுதி மண்டலத்திலே இருக்கப் பெற்றான் .

சந்திரன் : – சந்திரன் கும்பகோணத்திற் சம்புவை ஆராதித்துப் பயிர்களுக்கு அரசும் , நக்ஷத்திரங்களுக்கு நாயகனாம் , பேறும் பெற்றுப் , பரமனுக்கு ஆபரணமுமாகிச் சூரியனுடன் மேருவை வலம்வரப் பெற்றான் .

கிரகங்கள்

இவ்வாறே செவ்வாய் ( அங்காரான் ) திருவிடைமருதூரிலும் , புதன் மதுரையிலும் , வியாழன் ( குரு பிரகஸ்பதி ) சேதுவிலும் , வெள்ளி ( சுக்கிரன் ) திருவாலங்காட்டிலும் , சனி வேதாரணியத்திலும் பரமனை வழிபட்டுச் சோம சூரிய மண்டலங்களின் மேற்கே அருகிலேயிருந்து உயிர்களின் வினைக்கீடாக அனுபவம் தரவும் , வியாழன் தேவர் குருவாகவும் , வெள்ளி அரசர் குருவாகவும் இருக்கப் பெற்றனர் .

எழு முநிவர் :
வசிட்டர் முதலான எழுமுநிவரும் ( தில்லைச் ) சிற்றம்பலத்திலே சிவனை வழிபட்டுப் பல நூல் உணர்வும் , நவ கோள்களின் மேல் நிலையிலே வாழும் பேறும் , இறுதியிற் பேரின்ப வீட்டை அடையும் வாழ்வையும் பெற்றனர்.

ஸ்ரீ ஶூதமாமுனிவர் மேலுஞ் சொல்கிறார் :

உத்தான பாதன் மைந்தன் துருவன் காசியில் விஸ்வேச்சுரனை வழிபாடு செய்து அளவற்ற வரங்களையும் எழுமுநிவர் நிலைக்கு மேலான நிலையும் , எழுமுநிவரும் தன்னைச்சுற்றி வரும் பேற்றையும் பெற்று உயர் பதத்தில் திகழ்கின்றான் .

ஆதிசேடன் கும்பகோணத்திற் பரமனை அருச்சித்துக் கடல் புவியனைத்தும் முடித்தலையிற் சுமக்கும் பேறு பெற்றான் .

இப்படியே எண்ணற்ற தலங்களினும் மலைமுடியினும் கடல் கரைகளிலும் இமையவரும் , முநிவரும் , சித்தரும் , காருடரும் , கந்தருவரும் , வித்தியாதரரும் , இயக்கரும் , சாகரும் மற்றும் பலரும் இறைவனைப் பூசித்துத் தத்தம் பதவியையும் வரங்களையும் பெற்றனர் .

ஆகையால் அறத்தை விரும்பும் மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வகைப் பொருளையும் பல்கும் சிவபூஜை செய்யவேண்டும் . இறை வழிபாட்டாற் சித்தராயினர் சிலர்.இங்கனம் வழிபட்டுப்புகழ் பெற்றவர் சனகாதசித்தர் கபிலராதியோர் நித்தராயினர் . சிலர் சாலோகத்தையும் , சிலர் சாமீபத்தையும் ,சிலர் சாரூபத்தையும் , சிலர் சாயுச்சியம் எனும் இறைவன் திருவடி நிழலையும் பெற்றனர் . சில மானிடர் சிவவழிபாட்டால் அளவற்ற செல்வத்தை இம்மையிலே பெற்றும் செல்வச்செருக்கால் மாயையில் மீளவும் மூழ்கி மறுபடியும் வழிபட்டார் . மற்றும் வெற்றி வேண்டினவர் வெற்றியையும் , மனைவி மக்களை வேண்டினவர் மனைவி மக்களையும் , பசு , வாகனம் , செல்வம் , அழகு , வடிவு , வண்மை , சத்தியம் . பராக்கிரமம் முதலிய வேண்டினவர் தாம் வேண்டினவற்றையும் சிவபூஜை வழிபட்டாற் பெற்றனர்.

திரு ஞானவரோதய பண்டாரம் இயற்றிய உபதேச காண்டம் என்னும் நூலில் இருந்து…