Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

Dhaksha Kaandam

புஷ்பேஷு கந்தவஜ் ஜ்ஞேயஸ் திலேஷ்வபிச தைலவத் |
கண்டாயாம் த்வநிவத் த்வக்நௌ ப்ரபாவத் பரமேஸ்வர: |
ஸர்வத்ர ஸர்வதா தேவஸ் ஸர்வேஷ்வபிச ஸம்ஸ்தித: ||

  • தக்ஷ காண்டம்

“மலரில் மணம் போன்றும், எள்ளில் எண்ணெய் போன்றும், மணியில் நாதம் போன்றும், அக்கினியிற் பிரகாசம் போன்றும் எவ்விடங்களிலும் எக்காலங்களிலும் எப்பொருள்களிலும் சிவபெருமான் வியாபித்துள்ளார் ‘


Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

Svētāsvara upaniṭatam

तमीश्वराणां परमं महेश्वरं तं देवतानां परमञ्च दैवतं ।
पतिं पतीनां परमं परस्ताद् विधेम देवं भुवनेशमीढ्यम् ।।

தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம் தம் தே³வதானாம் பரமஞ்ச தை³வதம் |
பதிம் பதீனாம் பரமம் பரஸ்தாத்³ விதே⁴ம தே³வம் பு⁴வனேஶமீட்⁴யம் ||

“ஈசுரர்களுக்குள்ளே பரமமகேசுவரராயும், தேவர்களுக்குள்ளே மஹாதேவராயும், மேலாய பரமபதியாயும்,புவநேசராயும், ஸ்துதிக்கற்பாலராயுமுள்ள அந்த மஹாதேவரை அறிகின்றோம்” என்று ஸ்வேதாஸ்வதரோபநிடதம் குறிப்பிடுகிறது.

Transliteration :

tam-īśvarāṇāṃ paramaṃ maheśvaraṃtaṃ devatānāṃ paramaṃ ca daivatam ।

patiṃ patīnāṃ paramaṃ parastādvidāma devaṃ bhuvaneśam-īḍyam ।।

-Śvetāśvataropaniṣad 6.7

Translation :

We know Him who is the Supreme Lord of lords, the Supreme Deity of deities, the Ruler of rulers;

who is higher than the imperishable prakriti and is the self-luminous, adorable Lord of the world.


Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

Civapuṇṇiyatteḷivu

அடியார்க்கு எளியனாகிய இறைவன்‌, ஆலயத்துக்கு வந்து தரிசிக்காத பலருக்கும்‌ அருள்‌ சுரக்கத்‌ திருவிழாக்‌ காலங்களில்‌ வெளியே உலாவருகிறான்‌. அவ்வமயம்‌ பாராமுகமாயும்‌, படுத்துத்‌ தூங்கிக்‌ கொண்டும்‌ இருப்பவர்கள்‌ பாவத்தை ஈட்டுகின்றனர்‌.

திருவிழாக்களில்‌ ஈசனை வலம்வந்தால்‌ ஒவ்வோரடிக்கும்‌ அசுவமேதப்‌ பலன்‌ கிட்டும்‌( சிவபுண்ணியத்தெளிவு 34) ஏதாவது ஒரு காலம்‌ வலம்‌ வந்தாலும்‌ ஏழு பிறவிப்‌ பாவம்‌ போகும்‌; திருவிழாவில்‌ நாள்‌ தோறும்‌ வலம்‌ வருபவர்‌. உருத்திரப்‌ பதவியை அடைவர்‌ (சிவபுண்ணியத்தெளிவு 37)

திருவிழா ஆரம்பத்தில்‌ இடபக்‌ கொடி ஏற்றப்படும்‌; அவ்வமயம்‌ அக்கொடிப்‌ பின்‌ சென்று வலம்‌ வருவோர்க்கு பூமி, பொன்‌, புத்திரர்‌, பெளத்திரர்‌ முதலிய செல்வம்‌ பெருகும்‌. (சிவபுண்ணியத்தெளிவு 35)

இடபக்‌ கொடியை ஏற்றும்‌ காலத்துச்‌ செய்யப்படும்‌ நிவேதனமான இடப நிவேதனத்தை அன்போடு ஏற்று அருந்தும்‌ பெண்‌, மலடி என்று நிச்சயிக்கப்பட்டிருந்தாலும்‌ சிறந்த மகவைப்‌ பெற்றெடுப்பாள்‌ (சிவபுண்ணியத்தெளிவு 36)