Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

16 Forms of Murugan from Kumara Tantra

16 Names

தமிழ்
हिन्दी
En
Fr
Es

மானிடப்‌ பிறவியின்‌ பயன்‌ ஞானப்பிழம்‌பான இறையருளைப்‌ பெற்று எங்கும்‌ இறை நிலையை உணர்ந்து துன்பங்களிலிருந்து நீங்கி அமைதியான இன்பம்‌ அடைவதாகும்‌. அப்பிறவியின்‌ பயனை இவ்வுலக மக்கள்‌ யாவரும்‌ அடைய வேண்டி ஈசனால்‌ முருகப்‌ பெருமானை வழிபட்டு உய்ய அதன்‌ முறைகளைத்‌ தனித்துக் குறிப்பிட்டு உபதேசித்‌தருளியதே குமார தந்திரமாகும்‌.

குமார தந்திரமென்றால்‌ குமாரன்‌ + தந்திரம்‌ எனப்‌ பிரித்து குமரக்‌கடவுளுக்குத்‌ தனிப்பட்டு விசேஷமாக உள்ள வழிபாட்டு முறையை விளக்கும்‌ நூலாகும்‌, சிவாகமங்கள்‌ 28. அவைகளில்‌ ஒன்றான லலிதாகமத்தின்‌ உபாகமமாகும்‌. விசேஷமாக இந்தக்‌ குமார தந்திரத்தில்‌ முருகப்‌ பெருமானுக்குப்‌ பூசை முறைகளில்‌ மற்ற ஆகமங்களில்‌ கூறப்படாத மந்திரங்‌கள்‌, மண்டலம்‌, நியாஸம்‌ முதலியவைகள்‌ குறிப்பிட்டுக்‌ கூறப்பட்டுள்ளன. ஆனால்‌ கிரியைகளின்‌ கார்யமுறைகளில்‌ மாறுபாடு இல்லை. இதில்‌ பூசை முறையானது இரண்டு விதமாகக்‌ கூறப்பட்டுள்ளது. தனக்காக ஆன்மார்த்த பூசை செய்து கொள்வது ஒன்று, உலக மக்கள்‌ அனைவருக்காகவும்‌ ஆலயத்தில்‌ பூசை நடத்துவது இரண்டாவது. இது பரார்த்த பூசை என்று சொல்லப்படும்‌.

இவ்விரண்டு பூசை முறைகளுக்கும்‌ வழி வகுத்துக்‌ கேள்விப்‌ படலம்‌ முதலாக ஸாயரட்சை பூசை முடிய 61 படலங்களாக கொண்டு தினபூசை, தினவிழா, மாதவிழா, விசேட நக்ஷத்ர திதிகளின்‌ விழா, பெருவிழா, யந்திர மந்திர விசேட பூசா வழிபாட்டு முறைகள்‌, திருக்கோயில்கள்‌ அமைப்‌பதின்‌ முறைகள்‌, பழுதடைந்த கோயிலைச்‌ செப்பனிட்டுக்‌ குடமுழுக்கு நடத்தவேண்டிய முறைகள்‌, மயில்‌, யானை, வள்ளி, தேவயானை, சுமித்ரசண்டர்‌, பரிவார மூர்த்திகள்‌, பெருவிழாவின்‌ முறை, தூல லிங்கமான விமானப்‌ பிரதிட்டை, பூசைகளின்‌ விளக்கம்‌, மானிடர்கள்‌ ஸ்நான அனுஷ்டானம்‌ குஹ தீட்சை, ஆன்மார்த்த பூசை, பஞ்சகவ்ய பஞ்சாமிர்‌த முறைகள்‌, மஹாபிஷேகம்‌ செய்ய வேண்டிய முறை ஆலயங்களில்‌ வலம்‌ வர வேண்டிய முறை, வணங்க வேண்டிய முறை, சுப்பிரமண்ய கவசம்‌, ஆசார்ய இலட்சணம்‌ போன்றவைகள்‌ எல்லாம்‌ இதில்‌ கூறப்‌ பட்டுள்ளன.

முருகப்‌ பெருமானின்‌ திருவுருவங்கள்‌ 16 அழகிய அருள்மிகு வடிவங்களாகக்‌ கூறப்‌ பட்டிருக்கின்றன.

குமார தந்திரம் என்பது சைவாகமங்கள் 28இல் ஒன்றாகிய லலிதாகமத்தின் உபாகமம்.

(1) ஞானசக்திதரன்‌
(2) கந்தசாமி
(3) தேவசேனாபதி
(4) சுப்பிரமணியர்‌
(5) களிற்றூர்திப்‌ பெருமான்‌
(6) சரவணபவன்‌
(7) கார்த்திகேயன்‌
(8) குமாரன்‌
(9) ஆறுமுகவர்‌
(10) தாரகாந்தகர்‌
(11) சேனாபதி
(12) பிரமசாத்தன்‌
(13) வள்ளி கல்யாண சுந்தரர்‌
(14) பால சுப்பிரமணியர்‌
(15) கிரவுஞ்சபேதனர்‌
(16) சிகிவாகனர்‌ எனப்‌ பதினாறு ஆகும்‌.

இந்தப்‌ பதினாறு திருநாமங்களையும்‌ தினந்‌தோறும்‌ யார்‌ கூறுகின்றுரோ அவர்‌ எல்லா பாபங்களிலிருந்தும்‌ விடுபடுகின்றார்.

– குமாரதந்திரம் என்னும் கட்டுரையில்(1973) சிவஸ்ரீ v.விஸ்வநாத சிவாச்சாரியார்.

Transliteration :

māṉiṭap‌ piṟaviyiṉ‌ payaṉ‌ ñāṉappiḻam‌pāṉa iṟaiyaruḷaip‌ peṟṟu eṅkum‌ iṟai nilaiyai uṇarntu tuṉpaṅkaḷiliruntu nīṅki amaitiyāṉa iṉpam‌ aṭaivatākum‌. Appiṟaviyiṉ‌ payaṉai ivvulaka makkaḷ‌ yāvarum‌ aṭaiya vēṇṭi īcaṉāl‌ murukap‌ perumāṉai vaḻipaṭṭu uyya ataṉ‌ muṟaikaḷait‌ taṉittuk kuṟippiṭṭu upatēcit‌taruḷiyatē kumāra tantiramākum‌.

Kumāra tantirameṉṟāl‌ kumāraṉ‌ + tantiram‌ eṉap‌ pirittu kumarak‌kaṭavuḷukkut‌ taṉippaṭṭu vicēṣamāka uḷḷa vaḻipāṭṭu muṟaiyai viḷakkum‌ nūlākum‌, civākamaṅkaḷ‌ 28. Avaikaḷil‌ oṉṟāṉa lalitākamattiṉ‌ upākamamākum‌. Vicēṣamāka intak‌ kumāra tantirattil‌ murukap‌ perumāṉukkup‌ pūcai muṟaikaḷil‌ maṟṟa ākamaṅkaḷil‌ kūṟappaṭāta mantiraṅ‌kaḷ‌, maṇṭalam‌, niyāsam‌ mutaliyavaikaḷ‌ kuṟippiṭṭuk‌ kūṟappaṭṭuḷḷaṉa. Āṉāl‌ kiriyaikaḷiṉ‌ kāryamuṟaikaḷil‌ māṟupāṭu illai. Itil‌ pūcai muṟaiyāṉatu iraṇṭu vitamākak‌ kūṟappaṭṭuḷḷatu. Taṉakkāka āṉmārtta pūcai ceytu koḷvatu oṉṟu, ulaka makkaḷ‌ aṉaivarukkākavum‌ ālayattil‌ pūcai naṭattuvatu iraṇṭāvatu. Itu parārtta pūcai eṉṟu collappaṭum‌.

Ivviraṇṭu pūcai muṟaikaḷukkum‌ vaḻi vakuttuk‌ kēḷvip‌ paṭalam‌ mutalāka sāyaraṭcai pūcai muṭiya 61 paṭalaṅkaḷāka koṇṭu tiṉapūcai, tiṉaviḻā, mātaviḻā, vicēṭa nakṣatra titikaḷiṉ‌ viḻā, peruviḻā, yantira mantira vicēṭa pūcā vaḻipāṭṭu muṟaikaḷ‌, tirukkōyilkaḷ‌ amaip‌patiṉ‌ muṟaikaḷ‌, paḻutaṭainta kōyilaic‌ ceppaṉiṭṭuk‌ kuṭamuḻukku naṭattavēṇṭiya muṟaikaḷ‌, mayil‌, yāṉai, vaḷḷi, tēvayāṉai, cumitracaṇṭar‌, parivāra mūrttikaḷ‌, peruviḻāviṉ‌ muṟai, tūla liṅkamāṉa vimāṉap‌ piratiṭṭai, pūcaikaḷiṉ‌ viḷakkam‌, māṉiṭarkaḷ‌ snāṉa aṉuṣṭāṉam‌ kuha tīṭcai, āṉmārtta pūcai, pañcakavya pañcāmir‌ta muṟaikaḷ‌, mahāpiṣēkam‌ ceyya vēṇṭiya muṟai ālayaṅkaḷil‌ valam‌ vara vēṇṭiya muṟai, vaṇaṅka vēṇṭiya muṟai, cuppiramaṇya kavacam‌, ācārya ilaṭcaṇam‌ pōṉṟavaikaḷ‌ ellām‌ itil‌ kūṟap‌ paṭṭuḷḷaṉa.

Murukap‌ perumāṉiṉ‌ tiruvuruvaṅkaḷ‌ 16 aḻakiya aruḷmiku vaṭivaṅkaḷākak‌ kūṟap‌ paṭṭirukkiṉṟaṉa.

Kumāra tantiram eṉpatu caivākamaṅkaḷ 28il oṉṟākiya lalitākamattiṉ upākamam.

(1) Ñāṉacaktitaraṉ‌
(2) kantacāmi
(3) tēvacēṉāpati
(4) cuppiramaṇiyar‌
(5) kaḷiṟṟūrtip‌ perumāṉ‌
(6) caravaṇapavaṉ‌
(7) kārttikēyaṉ‌
(8) kumāraṉ‌
(9) āṟumukavar‌
(10) tārakāntakar‌
(11) cēṉāpati
(12) piramacāttaṉ‌
(13) vaḷḷi kalyāṇa cuntarar‌
(14) pāla cuppiramaṇiyar‌
(15) kiravuñcapētaṉar‌
(16) cikivākaṉar‌ eṉap‌ patiṉāṟu ākum‌.

Intap‌ patiṉāṟu tirunāmaṅkaḷaiyum‌ tiṉan‌tōṟum‌ yār‌ kūṟukiṉṟurō avar‌ ellā pāpaṅkaḷiliruntum‌ viṭupaṭukiṉṟār.

– Kumāratantiram eṉṉum kaṭṭuraiyil(1973) civasrī v.Visvanāta civāccāriyār.

कुमार तंत्र में भगवान मुरुगा के 16 रूपों का उल्लेख है।

कुमार तंत्र 28 शैवगमों में से एक, ललितागम का उपसंहार है।

(1) ज्ञानसखितारण
(2) कंदासामी
(3) देवसेनापति
(4) सुब्रमण्यर
(5) कलिरुर्थी पेरुमन
(6) सरवनभवन
(7) कार्तिकेयन
(8) कुमारन
(9) अरुमुगावर
(10)तारकण्ठकार
(11)सेनापति
(12) ब्रह्मस्थान
(13) वल्ली कल्याण सुन्दरार
(14) बाला सुब्रमण्यर
(15) क्रौंजपेडानार
(16) सिकिवाकनर, सोलह है.

जो कोई प्रतिदिन इन सोलह नामों का पाठ करता है वह सभी पापों से मुक्त हो जाता है।

The purpose of human birth is to obtain the wisdom of God, realize the state of God everywhere, get rid of suffering and attain Bliss. The Kumara Tantra is the explanation of how Siva worshiped Lord Muruga and preached the methods to achieve the benefits of birth.

Kumara Tantra mentions the 16 forms of Lord Muruga.

The Kumara Tantra is an epilogue to Lalithagam, one of the 28 Saivagamas.

(1) Gnanasaktitaran
(2) Kandasamy
(3) Devasenapati
(4) Subramaniar
(5) Kalirurthi Peruman
(6) Saravanabhavan
(7) Karthikeyan
(8) Kumaran
(9) Arumugavar
(10) Tarakanthakar
(11) Senapati
(12) Brahmasathan
(13) Valli Kalyana Sundarar
(14) Bala Subramaniar
(15) Kraunjapedanar
(16) Sikivaganar, which makes it sixteen.

Whoever recites these sixteen names daily is freed from all sins.

Le but de la naissance humaine est d’obtenir la sagesse de Dieu, de réaliser l’état de Dieu partout, de se débarrasser de la souffrance et d’atteindre la félicité. Le Kumara Tantra explique comment Siva adorait le Seigneur Muruga et prêchait les méthodes permettant d’obtenir les bienfaits de la naissance.

Kumara Tantra mentionne les 16 formes du Seigneur Muruga.

Le Kumara Tantra est un épilogue de Lalithagam, l’un des 28 Saivagamas.

(1) Gnanasaktitaran
(2) Kandasamy
(3) Devasenapati
(4) Subramanien
(5) Kalirurthi Péruvien
(6) Saravanabhavan
(7) Karthikeyan
(8) Kumaran
(9) Arumugavar
(10) Tarakanthakar
(11) Senapati
(12) Brahmasathan
(13) Valli Kalyana Sundarar
(14) Bala Subramaniar
(15) Kraunjapedanar
(16) Sikivaganar, ce qui fait seize.

Celui qui récite quotidiennement ces seize noms est libéré de tous péchés.

El propósito del nacimiento humano es obtener la sabiduría de Dios, realizar el estado de Dios en todas partes, deshacerse del sufrimiento y alcanzar la bienaventuranza. El Kumara Tantra explica cómo Siva adoró al Señor Muruga y predicó los métodos para obtener las bendiciones del nacimiento.

Kumara Tantra menciona las 16 formas del Señor Muruga.

El Kumara Tantra es un epílogo de Lalithagam, uno de los 28 Saivagamas.

(1) Gnanasaktitaran
(2) Kandasami
(3) Devasenapati
(4) Subramano
(5) Kalirurthi peruano
(6) Saravanabhavan
(7) Karthikeyan
(8) Kumaran
(9) Arumugavar
(10) Tarakanthakar
(11) Senapati
(12) Brahmasatán
(13) Valli Kalyana Sundarar
(14) Bala Subramaniar
(15) Kraunjapedanar
(16) Sikivaganar, que suman dieciséis.

Aquel que recita estos dieciséis nombres diariamente queda libre de todos los pecados.