Beyond Human Understanding: The Elusive yet Omnipresent Śiva


TaHiEnFrEs

|| சிவபெருமான் மிகு நுண்ணுணர்வாயுள்ளார் ||

एष सर्वेषु भूतेषु गूढोऽऽत्मा न प्रकाशते।
दृश्यते त्वग्र्यया बुद्ध्या सूक्ष्मया सूक्ष्मदर्शिभिः ||

eṣa sarveṣu bhūteṣu gūḍho”tmā na prakāśate |
dṛśyate tvagryayā buddhyā sūkṣmayā sūkṣmadarśibhiḥ ||

ஏஷ ஸர்வேஷு பூ⁴தேஷு கூ³டோ⁴(ஆ)த்மா ந ப்ரகாஶதே |
த்³ருஶ்யதே த்வக்³ர்யயா பு³த்³த்⁴யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்மத³ர்ஶிபி⁴꞉ ||

“சமஸ்த சேதனாசேதனப் பிரபஞ்சங்களினும் மறைந்திருக்கும் பரமான்மாவாகிய இவர் (சிவபெருமான் எவர்க்கும்) புலப்படுவாரில்லை; சூட்சும அறிஞர்களாலே கூர்மையாகிய அருண் ஞானக்கண்ணினாற் காணப்படுகின்றார்”

என்கிறது கடோபநிடதம்.

திருச்சிற்றம்பலம்

நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை
நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்
தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீக்காத பேரொளிசேர் நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே

திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம், திருப்புன்கூரும் திருநீடூரும், ஆறாம் திருமுறை.

ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

திருவாசகம்

காசிவாசி சாம்பவஸ்ரீ செந்திநாதையர் இயற்றிய தேவாரம் வேதசாரம் என்னும் நூலில் இருந்து…


English IAST transliteration

|| Śivaperumān miku nuṇṇuṇarvāyuḷḷār ||

eṣa sarvēṣu bhūtēṣu gūḍhō”tmā na prakāśatē | 

dṛśyatē tvagryayā buddhyā sūkṣmayā sūkṣmadarśibhiḥ ||

“Samasta cētaṉācētaṉap prapañcaṅkaḷiṉum maṛaindirukkum paramāṉmā-vākiya ivar (Śivaperumān evarkkum) pulappaḍuvārillai; sūṭcuma aṟiñarkaḷālē kūrmaiyākiya aruṇ ñāṉa-kkaṇṇiṉāṟ kāṇappaḍugiṉṟār”

eṉkiṟatu Kaṭhōpaniṣadam.

Tirucciṟṟambalam

Nōkkātē evvaḷavum nōkkiṉāṉai    
Nuṇukātē yādoṉṟum nuṇukiṉāṉai
Ākkātē yādoṉṟu mākkīṉāṉai    
Aṇukātār avartammai aṇukā tāṉait
Tēkkātē teṇkaḍal-nañc uṇḍāṉ taṉṉait    
Tiruppuṉkūr mēviya Śivalōkaṉai
Nīkkāta pēroḷisēr Nīḍūrāṉai    
Nītaṉēṉ eṉṉē-nāṉ niṉaiyā vāṟē

Tirunāvukkarasar Perumān aruḷiya Dēvāram, Tiruppuṉkūrum Tiru Nīḍūrum, Āṟām Tiru-muṟai.

Īrttenṉṉai yāṭkoṇḍa entai perumāṉē Kūrtta mey-ñāṉattāṟ koṇḍuṇarvār taṅkaruttiṉ Nōkkariya nōkkē nuṇukkariya nuṇṇuṇarvē

Tiruvācakam

Kāśivāsi Sāmbasrī Sentināthaiyar iyarriya Dēvāram Vētasāram eṉṉum nūlil irundu…rundu…