TaHiEnFrEs
சீரேறுஞ் செந்தில்வளர் கந்தநாதா
சிவகுருவே பரஞானச்சுடர் மாமணியே
பாரேறுங்கீர்த்தி கொண்டறுமாமுகவா
பாவைகுற வள்ளி தெய்வானை ரமணா
நீரேறுங் கார்மேனி வண்ணன்மருகா
நிர்மல பொற்காந்தி திருபன்னீர் புயனே
மாரேறுந்துய்ய வெண்மலர் தாரணியும்
மங்களனே நவநீதன் யெனையாள்வாயே.
அண்டர்களினிடாகற்றக் கருணையோடு
அவதரித்துமசுரர் குலமறுத்ததீரா
எண்டிசையுஞ் செங்கோலைச் செலுத்தும் நீதா
யேழை யென்மனதிலிசைகுடி கொண்டோனே தொண்டனெனைச்சூழ்ந்தமிடிருணபந்தத்தைத்
தோணியதை நீக்கி பரிபாலித்தாள
விண்டிடு மென்பண்டு வினைத்தீதறுப்பாய் விமலனே நின்றுணை கைப்பற்றினேனே.
திருச்செந்தூர் முருகன் புகழ்கீர்த்தனம். (பக்திரஸமான துதி)(1912)
ஸ்ரீவில்லிபுத்தூர் டிஸ்டிரிக்ட்டு முன்சீப்பு கோர்ட்டு அமீனா திரு என். எஸ். நவநீதகிருஷ்ணய்யரவர்களால் இயற்றப்பெற்றது.