Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

Civapuṇṇiyatteḷivu

அடியார்க்கு எளியனாகிய இறைவன்‌, ஆலயத்துக்கு வந்து தரிசிக்காத பலருக்கும்‌ அருள்‌ சுரக்கத்‌ திருவிழாக்‌ காலங்களில்‌ வெளியே உலாவருகிறான்‌. அவ்வமயம்‌ பாராமுகமாயும்‌, படுத்துத்‌ தூங்கிக்‌ கொண்டும்‌ இருப்பவர்கள்‌ பாவத்தை ஈட்டுகின்றனர்‌.

திருவிழாக்களில்‌ ஈசனை வலம்வந்தால்‌ ஒவ்வோரடிக்கும்‌ அசுவமேதப்‌ பலன்‌ கிட்டும்‌( சிவபுண்ணியத்தெளிவு 34) ஏதாவது ஒரு காலம்‌ வலம்‌ வந்தாலும்‌ ஏழு பிறவிப்‌ பாவம்‌ போகும்‌; திருவிழாவில்‌ நாள்‌ தோறும்‌ வலம்‌ வருபவர்‌. உருத்திரப்‌ பதவியை அடைவர்‌ (சிவபுண்ணியத்தெளிவு 37)

திருவிழா ஆரம்பத்தில்‌ இடபக்‌ கொடி ஏற்றப்படும்‌; அவ்வமயம்‌ அக்கொடிப்‌ பின்‌ சென்று வலம்‌ வருவோர்க்கு பூமி, பொன்‌, புத்திரர்‌, பெளத்திரர்‌ முதலிய செல்வம்‌ பெருகும்‌. (சிவபுண்ணியத்தெளிவு 35)

இடபக்‌ கொடியை ஏற்றும்‌ காலத்துச்‌ செய்யப்படும்‌ நிவேதனமான இடப நிவேதனத்தை அன்போடு ஏற்று அருந்தும்‌ பெண்‌, மலடி என்று நிச்சயிக்கப்பட்டிருந்தாலும்‌ சிறந்த மகவைப்‌ பெற்றெடுப்பாள்‌ (சிவபுண்ணியத்தெளிவு 36)