திருவண்ணாமலை திருத்தலத்திற்குரிய திருநாமங்கள் : –
அருணாசலம் , அருணகிரி , அருணாத்ரி , சோணாசலம் , சோணகிரி , சோணாத்ரி , சிவலோகம் , சுத்தநகரம் , கௌரிநகரம் , ஞானநகரம் , தக்ஷிணகைலாசம் , தேசுநகரம் , முக்திநகரம் , வாயு நகரம் , ஸ்தலைச்வரம் , அருணாபுரி , திருவருணை , திருவ ண்ணாமலை என்னும் இத்திருநாமங்கள் முக்தியடைய இச்சிப்பவர்கள் எக்காலத்திலும் இடைவிடாது சிந்திப்பதற்குரிய இனிய திருநாமங்களாம் .
திருவண்ணாமலை க்ஷேத்திர மூர்த்திக்குரிய திருநாமங்கள் : –
அருணாசலேசன் , சோணாசலேசன் , அருணகிரீசன் , சோணாத்ரீசன் , அம்ருதேசானன் , பக்தபாச விமோசகன் , முகராங்க்ரிபதி , ம்ருகமதேசுவரன் , கௌரீசன் , ஸ்படிகாசலன் , ஞானசம்பந்தநாதன் , வேதமூர்த்தி , ஸித்தராஜன் , க்ஷமாரூபி , பால மூர்த்தி , திகம்பரன் , சர்வவித்யேச்வரன் , அருணன் , ப்ரதக்ஷிணப்ரியன் , அக்ஷராக்ருதி , அனாதி , அந்தரகிதன் , பக்தஞானப்ரகன் , ஆச்சர்யவைபவன் , வாஞ்சிதகாயகன் , முக்திப்ரதன் , சுவயம்பு , மரகதாசலன் என்பனவாதி நாமங்கள் ஒருநாமம் ஓருருவமொன்றுமிலார்க்குரிய எண்ணிறந்த திருநாமங்களில் ஞானமடைய விரும்புமவர் அகத்தில் இடைவிடாது ஜபித்தற்குரிய சிந்தைக்கு அமுதமெனவினிய அருணேசரது புனித திருநாமங்களாம்.
ஸ்ரீ ஸ்காந்த மஹாபுராணத்தில் உள்ள அருணாசல கண்டத்தில் ஸ்ரீ கௌதம முனிவர் ஸ்ரீ அருணாசலேஸ்வரப் பெருமானிடம், ‘சுவாமி! இந்த திவ்ய திருத்தலத்தில் தங்களுக்கு வழங்கப்படும் விஷேச திருநாமங்களைக் கூறியருளுக’ என்று கேட்க, அதற்கு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் அருளிய திவ்ய திருநாமங்கள்.