கன்மம் – சித்தாந்திகள் கொள்கை:
இந்தியத் தத்துவ தரிசனங்கள் எல்லாம் கன்மக் கொள்கையைப் பற்றிப் பேசுகின்றன.என்றாலும் அவற்றுள் வேறுபாடு உண்டு.பவுத்தம் ஒருவன் அறிந்து செய்த வினையே பலனைக் கொடுக்கும், அறியாது செய்த வினை, வெறும் செயல் அளவில் நின்று விடும் என்று கூறும்.
சமணம் அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் செய்த வினை தானே பலனைக் கொடுக்கும் என்று கூறும்.இதற்கு இளங்கன்று ஒன்றைப் பசுமந்தையில் புகுத்தின் அது தன் தாயைத் தானே தேடி அடையும்.அதனைப் போலப் பல பிறவிகளிலும்,வினை, தன்னைச் செய்தவனையே சென்று சேரும் என கூறுவர்.(பசுவின் கன்று சடமல்ல, வினை சடம்)
சைவம் இதற்கு மாறுபட்டு வினை,சடம், அறிவற்றது.தானே செய்தவனைச் சென்று அடையாது.இறைவனே வினையைச் செய்தவனுக்குக் கன்ம பலனை அறிந்து ஊட்டுவான் என உரைக்கும்.
பெரும்பாலான சமயங்கள் கன்மக் கொள்கையை வெறும் ‘காரண காரியங்கள்’ ஆகவோ,ஊழாகவோ தலை எழுத்து எனும் குறுகிய நோக்கிலேயோ காண்கின்றன.சைவசித்தாந்தத்தில் வினைக் கொள்கை வினையினை அடிப்படைக் காரணத்திலிருந்து ஆராய்கின்றது.சித்தாந்தத்தில் வினைக் கொள்கை அறிவுப்பூர்வமானதும் விரிவானதும் ஆகும்.
“செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனும் கொடுப்பானும், மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்.” எனச் சைவமே கொள்ளும்.
மூலகன்மம் என்னும் நூலிற்கு முனைவர் ஸ்ரீ கோ.ந.முத்துக்குமாரசாமி ஐயா அவர்கள் அளித்த மகிழ்வுரையிலிருந்து…
English IAST Transliteration
kanmam – siddhāntikaḷ koḷkai:
indiyat tattuva darisaṉaṅkaḷ ellām kaṼmakk koḷkaiyaip paṟṟip pēcukiṉṟaṉa. eṉṟālum avaṟṟuḷ vēṟupāṭu uṇṭu. pauttam oruvaṉ aṟintu seyta viṉaiyē palaṉaik koṭukkum, aṟiyātu seyta viṉai, veṟum ceyal alaavil niṉṟu viṭum eṉṟu kūṟum.
camaṇam aṟintu seytālum aṟiyāmal seytālum seyta viṉai tāṉē palaṉaik koṭukkum eṉṟu kūṟum. itaṟku iḷaṅkaṉṟu oṉṟaip pacumantaiyil pukuttiṉ atu taṉ tāyait tāṉē tēṭi aṭaiyum. ataṉaippōlak pala piṟavikaḷilum, viṉai, taṉṉaic ceytavaṉaiyē ceṉṟu cērum eṉa kūṟuvar. (pacuviṉ kaṉṟu caṭamalla, viṉai caṭam)
caivam itaṟku māṟupaṭṭu viṉai, caṭam, aṟivaṟṟatu. tāṉē ceytavaṉaic ceṉṟu aṭaiyātu. iṟaivaṉē viṉaiyaic ceytavaṉukkuk kaṉma palaṉai aṟintu ūṭṭuvāṉ eṉa uraikkum.
perumpālaṉa camaṅkaḷ kaṉmakk koḷkaiyai veṟum ‘kāraṇa kāriyaṅkaḷ’ ākavō, ūḷākavō talai eḻuttu eṉum kuṟukiya nōkkilēyō kāṇkiṉṟaṉa. caivasiddhāntattil viṉaik koḷkai viṉaiyiṉai aṭippaṭaik kāraṇattiliruntu ārāykiṉṟatu. siddhāntattil viṉaik koḷkai aṟivuppūrvamāṉatum virivāṉatum ākum.
“ceyviṉaiyuñ ceyvāṉum ataṉpayaṉum koṭuppāṉum, meyvakaiyāl nāṉkākum vititta poruḷ.” eṉac caivamē koḷḷum.
mūlakanmam eṉṉum nūliṟku muṉaivar śrī ko. na. muttukumārasāmi aiyā avarkaḷ aḷitta makiḻvuraiyiliruntu…