Karma and Reincarnation: Shaping Human Destiny


TaHiEnFrEs

பெத்த உயிர்கள் தத்தம் இருவினைக்கேற்ப இறத்தல் பிறத்தல்களைப் புரியும் .

ஓர் உயிர் பிறப்பெடுத்துள்ள உடலை விட்டு நீங்கியதும் சூக்கும தேகத்தில் ஒடுங்கும். அச்சூக்கும தேகத்தினின்று மீளவும் ஓர் தூல தேகம் தோன்றும்.

சூக்கும தேகம் ஒன்றேயாயிருந்தாலும் , அதனினின்று தோன்றும் தூல தேகம் பிறவிதோறும் வெவ்வேறே . அன்றியும் ஓர் உயிர் பொருந்தியுள்ள தேகமும் மற்றோருயிர் பொருந்தியுள்ள தேகமும் வெவ்வேறாகவே காணப்ப டும் . ஓர் உயிர் மனித தேகத்தையும் மற்றோருயிர் விலங்கு முதலிய தேகத்தையும் , ஓர் உயிர் பலமான தேகத்தையும் மற்றோருயிர் பலஹீனமான தேகத்தையும் , ஓர் உயிர் சுகதேகத்தையும் மற்றோருயிர் துக்கதேகத்தையும் இவ்வாறு பல விதமாய்ப் பேதப்பட்ட சரீரங்கள் உயிர்கட்கிருக்கவும் காண் கிறோம் . இதுவுமன்றி ஒரு தேகம் அனேக வருஷ காலம் அழியாதிருக்கவும் மற்றொன்று சிலநாட்களிலும் சில கணங்களிலும் அழியவும் காண்கிறோம் . இத்தேகங்களை இவ்வாறு பேதப்படத் தோற்றுவிப்பவன் ஏனையுலகப்பொருள்களைத் தோற்றுவிக்கும் முதல்வனே . இம்முதல்வன் இத்தேகங்களை யாதும் நியதியின்றித் தன்னிஷ்டம்போல இவ்வாறு பேதப்படத் தோற்றுவிப்பானா? அன்றி யாதானும் நியதிப் படி தோற்றுவிப்பானா? அந்நியதிதான் யாது ? என்பதை ஆராய்வாம் .

முதல்வன் தன்னிஷ்டம்போல் உயிர்கட்குப் பேதப்பட்ட சரீரங்களைத் தோற்றுவிப்பானென்பது பொருந்தாது . எல்லாவுயிர்களையும் ஒன்றுபோல நடத்தும் முதல்வன் அவ்வுயிர்கள் பால்யாதுங் காரணமின்றிப் பேதம் செய்யான் . ஆகவே இத்தேகங்களை நியதிப்படுத்துதற்கு ஏதுவான காரணமொன்றிருத்தல் வேண்டும் . இந்நியத காரணமே வினையெனப்படும் .

வினை என்பதற்குச் செயல் என்பது பொருள் . ஒவ் வோருயிரும் தூலதேகத்தோடு கூடியுள்ள போது பலவித செயல்களைச் செய்யும் . இச்செயல்களை விருப்பு வெறுப்போடும் செய்யும் ; விருப்பு வெறுப்பின்றியும் செய்யும் . விருப்பு வெறுப்பின்றிச் செய்யப்படும் செயல்கள் தூலதேகத்தை மாத்திரம் தாக்குவனவாதலால் , சித்துப்பொருளாகிய உயிரி னைத்தாக்கா . விருப்பு வெறுப்போடு செய்யப்படும் செயல் களோ அறிவினையும் தாக்குவனவாதலால் , உயிர்களையும் பந்தித்து அவ்வுயிர்கள் இறக்குங்காலத்து அவற்றின் சூக்கும தேகங்களில் தங்கிநின்று அவ்வுயிர்கட்குச் சுகதுக்கங்களாகிய பலன்களை நியதியிட்டுக் கொடுக்கும் . இவ்வாறு பலன்களைத் தந்தவை போக எஞ்சியவினையே அச்சூக்கும தேகக் களினின்று

தனித்தனி தோன்றும் தூல தேகங்களையும் அத்தூல தேகங்களோடு கூடிய காலத்து அனுபவிக்கும் இன்பதுன்பங்களையும் நியதிப்படுத்தும் . இவ்வினை இருதிறப் படும் . அவை நல்வினை தீவினை யென்பன . இவ்விருவினைகளும் பிறவிதோறும் உயிர்களால் ஈட்டப்பட்டுவரும் . இவ் வினைகள் பொருளல்லவாயினும் , உயிர்களை இவ்வினைகளியற் றும்படி செய்வதான காரணப்பொருள் ஒன்றுண்டு . இக்காரணந்தான் மூலகன்மம் என்று சொல்லப்படும் . இம்மூலகன்மமும் வியாபகமாயுள்ள சூக்கும ஜடப்பொருள் . இதுவும் அநாதியேயுள்ளது . இது தன்னுள் இருவேறு கூறாயிருப் பதால் இதனால் இயற்றப்படும் வினைகளும் இருவகைப்படும் . இவ்வினைகட்கு ஏற்பவே ஒவ்வோருயிரும் தேகத்தினை யெடுப்பதும் விடுப்பதுமாம் . அதாவது உயிர்களின் பிறப்புக்களை நியதிப்படுத்துவது அவ்வவ்வுயிரின் வினையே . அவற்றின் இறப்புக்களை நியதிப்படுத்துவதும் அதுவே . இவ்விறத்தல் பிறத்தல்களுக்கு நடுவே உயிர்கட்குவரும் சுகதுக்கங் கட்கு நியதகாரணமும் அதுவேயாம் . இக்கருத்துக்களை யெல்லாம் உணர்த்தவே சிவஞானபோதம் ‘போக்குவரவுபுரிய’ என்று மட்டும் ஓதாது ‘இருவினையிற் போக்குவரவுபுரிய என் றோதியது .

சிவஞான போத உபந்நியாச பாடம் என்னும் நூலில் சைவத்திரு வி.பி காந்திமதிநாத பிள்ளை அவர்கள்.


English IAST Transliteration

Petta uyirkal tat tam iru vṉaikkēṟṟup piṟattal piṟattal kaḷai puriyum.

Ōr uyir piṟapp eṭuttuḷḷa uṭalai viṭṭu nīṅgiyatum cūkku ma tēkattil oṭuṅkum. Ac cūkku ma tēkattiṉiṉṟu mīḷavum ōr tūla tēkam tōṉṟum. Cūkku ma tēkam oṉṟeyāyiruntalum, ataṉiṉiṉṟu tōṉṟum tūla tēkam piṟavitōṟum vevvēṟē.

Aṉṟiyum ōr uyir poruntiyuḷḷa tēkamum maṟṟōruyir poruntiyuḷḷa tēkamum vevvēṟākāvaṉ kaṇappaṭum. Ōr uyir maṉita tēkattaiyum maṟṟōruyir vilaṅku mutaliya tēkattaiyum, ōr uyir palamāṉa tēkattaiyum maṟṟōruyir palahīṉamāṉa tēkattaiyum, ōr uyir cukatēkattaiyum maṟṟōruyir tukkatēkattaiyum ivvāṟṟu pala vitamāyp pētappaṭṭa carīraṅ kaḷ uyirk aṭkirukkavum kaṇkiṟōm.

Ituvumaṉṟi ōr tēkam aṉēka varuṣa kālam aḻiyātirukkavum maṟṟoṉṟu cila nā ṭkaḷilum cila kaṇaṅ kaḷilum aḻiyavum kaṇkiṟōm. Ittēkaṅ kaḷai ivvāṟṟu pētappaṭa tōṟṟuvippavṉ ēṉaiyu lakappōruḷ kaḷait tōṟṟuvikum mutaḷvaṉē. Immutaḷvaṉ ittēkaṅ kaḷai yātum niyativinṟit taṉniṣṭampōla ivvāṟṟu pētappaṭa tōṟṟuvippāṉā? Aṉṟi yātāṉum niyatip paṭi tōṟṟuvippāṉā? Aṉ niyatitāṉ yātu? Eṉpat ai ārāyavām.

Mutaḷvaṉ taṉniṣṭampōla uyirk aḷkup pētappaṭṭa carīraṅ kaḷait tōṟṟuvippāṉ eṉpatu poruntātu. Ella vuyir kaḷaiyum oṉṟupōla naṭakkuṅ mutaḷvaṉ avvu yirkaḷ pālyātuṅ kāraṇamiṉṟip pētam ceyyāṉ. Ākavē ittēkaṅ kaḷai niyatippaṭuttutṟak ḷētuvāṉa kāraṇamoṉṟiruttal vēṇṭum. In niyata kāraṇamē viṉaiyeṉappṭum. Viṉai eṉpatṟakku ceyal eṉpatu poruḷ.

Ovvōruyirum tūla tēkattōṭu kūṭiyuḷḷa pōtu palavita ceyal kaḷai ceyyum. Ic ceyal kaḷai viruppu veṟuppōṭum ceyyum; viruppu veṟuppinṟiyum ceyyum. Viruppu veṟuppinṟic ceyyappaṭum ceyal kaḷ tūla tēkattai māttṛum tākkum vaṉavātalāl, cittuppōruḷākiya uyiri ṉaittākkā. Viruppu veṟuppōṭu ceyyappaṭum ceyal kaḷō aṟiviṉaiyum tākkum vaṉavātalāl, uyirk aḷaiyum pantittu avvu yirkaḷ iṟaṅkuṅ kāltu ac cūkku ma tēkaṅ kaḷil taṅkininṟu avvu yirk aḷ sukatuk kaṅ kaḷākiya palaṅ kaḷai niyatit tuṅkoṭukkum.

Ivvāṟṟu palaṅ kaḷait t antavai pōka eñcaiya viṉaiyē ac cūkku ma tēkak kaḷiṉiṉṟu taṉit taṉi tōṉṟum tūla tēkaṅ kaḷaiyum at tūla tēkaṅ ka ḷōṭu kūṭiya kālattu aṉupvikkuṅ iṉpatuṉpaṅ kaḷaiyum niyatippaṭut tum. Ivviṉai irutiṟa ppaṭum. Avai nalviṉai tīviṉai yeṉpaṉa. Ivv iruviṉaik kaḷum piṟavitōṟum uyirk aḷāl ēṭṭappattu varum. Iv viṉaik kaḷ pōruḷallavāyiṉum, uyirk aḷai iv viṉaik kaḷiyṟṟum paṭi ceyvait tāṉa kāraṇappōruḷ oṉṟuṇṭu.

Ik kāraṇantāṉ mūlakarmaṉ eṉṟu collappaṭum. Immūlakarmaṉum vyāpakamāy uḷḷa cūkku ma jaṭappōruḷ. Ituvum anādiyē yuḷḷatu. Ituvum taṉṉul iruvēṟu kūṟāyirup patāl itaṉāl iyṟṟappaṭum viṉaik kaḷum iru vakai ppaṭum. Ivviṉaik kaṭku ēṟavē ovvōruyirum tēkattinai eṭuppattum viṭuppattumā m. Atāvatu uyirk aḷiṉ piṟappuk kaḷai niyatippaṭutuvatu avv avvu yiriṉ viṉaiyē. Avaṟṟiṉ iṟappuk kaḷai niyatippaṭutuvatum atuvē. Ivv iṟattal piṟattal kaḷukku naṭuvē uyirk aḷvarum cukatuk kaṅ kaṭku niyata kāraṇamum atuvēyām.

Ikkarut tukaḷai yeḷlām uṇarttavē civagñānapōtam ‘pōkkuvaravupuriya’ eṉṟu maṭṭum ōtātu ‘iruvṉaiyiṟ pōkkuvaravupuriya’ eṉ ṟōtiyaṉatu.

Civagñāna pōta upannyāca pāṭam eṉṅum nūlil caivattiru vi. Pi kāntimatināta piḷḷai avarkaḷ.