Categories
SuddhAdvaitham Saiva Siddhantham

Mahavidwan Meenakshi Sundaram Pillai

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன மஹாவித்துவான் சைவத்திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று

ஒவ்வொரு தலபுராண ஆசிரியரும் ஒவ்வொரு வகையில் அவையடக்கப் பாடல்களைப் பாடிச் சிறப்பித்திருக்கக் காணலாம். எடுத்துக்காட்டாக,

திருவம்பர்த் தலபுராணத்தில் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கூறும் அவையடக்கப் பாடல்கள் அவர்தம் பெரும் புலமையைச் சுட்டுவன. இவர்தம் ஆறு பாடல்களும் சுவைபட அமைந்துள்ளன.

இறையருளே துணை

பிரமதேவர் வழிபட்ட திருவம்பர்ப் பிரமபுரேசரின் புராணம் பாடுவதற்கு உனக்குத் தகுதியில்லை என்று சிலர் கூறக்கூடும், ஒரு காலத்தில் திருமால் முதலிய தேவர்களும் கூடத் தன்னை அசைக்க முடியாதபடி நிலை பெற்று நின்று, ஒரு துரும்பும் கூட வெற்றி பெற்றது என்னும் வரலாற்றைக் கேனோபநிடதம் கூறுகின்றது. ஆதலின் இறையருள் பெற்றால். இறையருளைத் துணையாகப் பற்றினால், எளியவன் ஆகிய யானும் இந்நூலைப் பாடுதல் இயலும்.

“பிரமனார் பூசை கொண்டு பெருந்திருக் கோயில் மேய பரமனார் புராணம் பாடும் பண்புனக் கில்லை என்னில் உரமனார் அணங்கி னோர்முன் னோரைவெல் துரும்பு போலத் திரமனார் அருள்இ லேசம் சேர்தரின் உண்டாம் அன்றே.

திரிசிரபுரம் மஹாவித்வான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய புராணங்கள் எழுபதிற்கும் மேற்பட்டன. பதிகம், பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, யமகவந்தாதி, திரிபந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, மாலை, தூது என்று பல பிரபந்தங்களும் இயற்றியுள்ளார். அவைகளில் 44 பிரபந்தங்களை திரு உ.வே.சா ஐயரவர்கள் பதிப்பித்துள்ள பிள்ளையவர்களின் பிரபந்தத் திரட்டிற் காணலாம்.