நமது சைவசமயிகள் ஆரிய மொழியிலுள்ள வேதாகம முதலிய சைவ மெய்ந்நூல்களையும், தமிழ் மொழியிலுள்ள தேவார திருவாசக முதலிய சைவ அருணூல்களையும் வரையறுத்து உணராத குறையினால், சித்தாந்த சைவ அயலான சிவாத்துவித முதலிய அகச்சமய நூல்களையும், மாயாவாத முதலிய புறச்சமய நூல்களையும், அம் மெய்ந்நூல்களோ டொப்பத் தஞ் சமய
நூல்களெனக் கொண்டு கற்று, வழிதடுமாறி அலைகின்றார்கள். அது நிற்க.
நமது சைவசமயிகள் தஞ்சமய பரமாசாரியர் முதலியோர் முறையும், தத்தம் பரம்பரைச் சைவசந்தானாசாரியர் முறையும், உள்ளபடி விசாரித்து உணராத குறையினால், சங்கராசாரியர் முதலிய ஏகாத்மவாத வேதாந்தாசாரியர்களையும், அவர் வழிப்பட்ட மாயாவாத சமயப் போதகர்களையும் தஞ் சமயகுரவர்களென்று கொண்டு வழிபட்டு அவம் பெருக்கிச் சித்தாந்தச் செந்நெறி பிழைத்து அல்லற்பட்டு உழல்கின்றார்கள். அது நிற்க.
நமது சைவசமயிகள் சித்தாந்த சைவபத்ததி தேர்ந்துணராத குறையினால், அசைவாசாரங்களையும், அசம்பிரதாயங்களையும், சைவாசாரங்களாகவும் சைவ சம்பிரதாயங்களாகவுங்கொண்டு, வீண்செயலுழப்புற்று வாணாள் வீணாள்படக் கழிக்கின்றார்கள்.
ஆதலால் பரமசிவன் இலக்கணம், சித்தாந்த சைவ இலக்கணம், சித்தாந்த சைவசாத்திர முறை, சித்தாந்த சைவாசாரியர் இலக்கணம், சித்தாந்த சற்சம்பிரதாய இலக்கணம், சித்தாந்த சைவாநுஷ்டானத்தால் எய்தும் இகபரவீடு பேற் றின்பப்பயனிலக்கணம் என்னுமிவற்றை, முறையாக எடுத்துப் போதித்து நம்மவரை நல்வழிப் படுத்தல் நமக்கெல்லாம் பெருங்கடனாமாதலின், நாமெல்லாம் மற்றவைகளை வரன் முறையாக எடுத்து நம்மவர்க்குப் போதித்தலை விரதமாகக்
கொண்டு செய்து போதரக் கடவமாவேம்.
- ஸ்ரீ சபாபதி நாவலர் அவர்கள்
சித்தாந்த சைவ போதம் (ஞானாமிர்தம்)(1983) என்னும் நூலில் இருந்து…
English IAST Transliteration
Namatu caivasamaiyikaḷ āriya moḻiyiluḷḷa vētākama mutaliya caiva meynṉūlkaḷaiyum, tamiḻ moḻiyiluḷḷa tēvāra tiruvācaka mutaliya caiva aruṇūlkaḷaiyum varaiyaṟuttu uṇarāta kuṟaiyināl, cittānta caiva ayalāṉa civāttuvita mutaliya akaccamaiya nūlkaḷaiyum, māyāvāta mutaliya puṟaccamaiya nūlkaḷaiyum, am meynṉūlkaḷō ṭoppat tañ camaya nūlkaḷeṉak koṇṭu kaṟṟu, vaḻitaṭumāṟi alaikinṟārkaḷ. atu niṟka.
Namatu caivasamaiyikaḷ tañcamaya paramācāriyar mutaliyōr muṟaiyum, tattam paramparai caivacantāṉācāriyar muṟaiyum, uḷḷapaṭi vicārittu uṇarāta kuṟaiyināl, caṅkarācāriyar mutaliya ēkātmavāta vētāntācāriyarkaḷaiyum, avar vaḻippaṭṭa māyāvāta camayap pōtakaraiyum tañ camayakuravarkaḷeṉṟu koṇṭu vaḻipaṭṭu avam peruṇkic cittāntac ceṉṉeṟi piḻaitu allarpaṭṭu uḻalkinṟārkaḷ. atu niṟka.
Namatu caivasamaiyikaḷ cittānta caivapattati tērntuṇarāta kuṟaiyināl, acaivācāraṅkaḷaiyum, acampiratāyaṅkaḷaiyum, caivācāraṅkaḷākavum caiva campiratāyaṅkaḷākavumkoṇṭu, vīṇceyal uḻappuṟṟu vāṇṇāḷ vīṇṇāḷpaṭak kaḻikkinṟārkaḷ.
Ātalāl paramacivaṉ ilakkaṇam, cittānta caiva ilakkaṇam, cittānta caivacāttira muṟai, cittānta caivācāriyar ilakkaṇam, cittānta sarscampiratāya ilakkaṇam, cittānta caivānuṣṭāṉattāl eytum ikaparavīṭu pēṟ ṟiṉpappayaṉilakkaṇam eṉṉumivaṟṟai, muṟaiyāka eṭuttup pōtittu nammavaraik nalvaḻip paṭuttal namakkellām peruṅkaṭaṉāmātaliṉ, nāmelḷām maṟṟavaikaḷai varan muṟaiyāka eṭuttu nammavaṟkuk pōtittalai viratamākak koṇṭu ceytu pōtarak kaṭavamāvōm.
- Śrī Sabhāpati Nāvalar avarkaḷ
Cittānta Caiva Pōtam (Jñāṉāmirtam) (1983) eṉṉum nūlil iruntu….
