TaHiEnFrEs
சிவபுண்ணியத்தெளிவு என்னும் நூலில் கண்டபடி சிவனடியார்களுக்கு கைங்கர்யம் அளிக்கும் பொருட்களும் அதன் பயன்களும்.
- கௌபீனம் (கோவணம்) – ஆயிரம் கோடியுகம் சிவலோக வாசம்
(தெளிவு 125) - கம்பளம் – கம்பளத்தில் உள்ள ஒவ்வொரு
முடிக்கும் ஒரு கழஞ்சு பொன்
கொடுத்த பலன் (தெளிவு 126) - புலித்தோல் (அ) மான்தோல் – கம்பளத்திற்குச்சொன்ன பலன்.(தெளிவு 127)
- சாமரம், அரிசி, மலர், கனி, தீபம்
முதலியன – ஒவ்வோர்
அரிசிக்கும்
மலருக்கும்
ஆயிரம் யுகம் சிவபுரத்தில் வாசம்.(தெளிவு 90,91)
5.சிவலிங்கம் – ஆயிரம்
கற்பம் சிவலோகவாசம்.
(தெளிவு 95)
6.சிவாகமம் – அறியாக் குழந்தைப் பருவம் முதல் செய்த
கொலைப் பாவங்கள் தீரும்
(தெளிவு 117).
- பாடலம்(நண்பகலில் மலரும் ஒரு வகை மலர்)
உற்பலம்(குவளை, செங்கழுநீர்ப் பூ, நீலோற்பலம், கருநெய்தல் போன்ற மலர்களைக் குறிக்கும்)
முதலியன கலந்த
சுகந்த நீர் – வருணன் பதம் (தெளிவு 132)
8.கையில்
அன்பளிப்பு – திருமால் உலகில் உறைதல்
(தெளிவு 133)
- சுக்கு முதலிய
மருந்துகள் – ஆயிரம் கோடி கற்பம் ஆதவன் உலகு
(தெளிவு.134). - நோயகல
மருந்து – நூறுகோடி யுகம் சிவலோக வாசம்.
(தெளிவு.135).
11.விபூதிப்
பெட்டி – தீர்த்தாடனம் செய்த பலன்(தெளிவு 136).
- சிவஞானிக்குச் சிவாகம தானம் – சிவானந்தம் பலன் (தெளிவு. 137).
- படிப்போர்க்கு ஆமகதானம் – சிவஞானம் பலன் (தெளிவு. 138)
- உருத்திராக்க
மணிமாலை – உருத்திரன் உலகம் (தெளிவு. 139).
]5. கைத்தடியும்,
குடையும் – மனைவியொடு மன்னராய்ப் பிறப்பர்
(தெளிவு.140).
- பாதுகை(காலலணி ) – சிவபுரம் (தெளிவு 141).