சிவபெருமானுக்குப் பிறப்பில்லாமை:
अजात इत्येवं कश्चित् भीरुः प्रतिपद्यते ।
श्वेताश्वतरोपनिषत्
அஜாத இத்யேவம் கஶ்சித் பீ⁴ரு꞉ ப்ரதிபத்³யதே |
ஶ்வேதாஶ்வதரோபநிஷத்
“(ஜனனத்துக்கு அஞ்சும்) ஒருவன் நீர் பிறவாதுள்ளீர் என்னும் இம்மொழிகளைக் (கூறிக்) கொண்டு (நும்மை) சரணடைகின்றான்”
என்று சுவேதாசுவதரமும்
अजातमिमेवैकं ज्ञात्वा जन्मनि भीरवः ।
उपदेशकाण्ड:
प्रपद्यन्तेऽस्य देवस्य मोक्षार्थं दक्षिणामुखम् ।।
அஜாதமிமேவைகம் ஜ்ஞாத்வா ஜன்மனி பீ⁴ரவ꞉ |
உபதே³ஶகாண்ட³:
ப்ரபத்³யந்தே(அ)ஸ்ய தே³வஸ்ய மோக்ஷார்த²ம் த³க்ஷிணாமுக²ம் ||
“ஜனனத்திற் பயமுற்றவர்கள் அவ்வொருவரையே பிறப்பிலாப் பொருள் என்று அறிந்து மோக்ஷமடையுமாறு தேவாதி தேவருடைய தக்ஷிணாமுகத்தைச் சரணடைகின்றார்கள்” என்று உபதேச காண்டமும் உபதேசிக்கின்றன.
பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரம் – திருப்பறியலூர் வீரட்டம்.
செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.
ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்
திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் – திருவாரூர்.
ஊழி பலகண் டிருந்தார் போலும்
பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்
பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
உகப்பார் மனத்தென்றும் நீங்கார் போலும்
அருகாக வந்தென்னை யஞ்சே லென்பார்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே
தேவாரம் வேதசாரம் என்னும் நூலில் இருந்து..
English IAST Transliteration
Śivaperumāṉukkup Piṟappillāmai:
ajāta ityevaṁ kaścit bhīruḥ pratipadyate ।
Śvetāśvataropaniṣat
(jaṉaṉattukku añcum) oruvaṉ nīr piṟavātulḷīr eṉṉum immoḻikaḷaik (kūṟik) koṇṭu (nummai) caraṇataikiṉṟāṉ” eṉṟu cuvētācuvataramum
ajātamimevaikaṁ jñātvā janmani bhīravaḥ ।
Upadeśakāṇḍa:
prapadyante’sya devasya mokṣārthaṁ dakṣiṇāmukham ।।
“jaṉaṉattiṟ payamuṟṟavarkaḷ avvoruvaraiyē piṟappilāp poruḷ eṉṟu aṟintu mōkṣamaṭaiyumāṟu tēvāti tēvaruṭaiya takṣiṇāmukhattaic caraṇataikiṉṟārkaḷ” eṉṟu upatēca kāṇṭamum upatēcikkiṉṟaṉa.
Piṟappāti yillāṉ piṟappār piṟappu
Tiruññā ṉacampantapperumā ṉaruḷiya Tēvāram – Tiruppaṟiyalūr Vīrāṭṭam.
cerappāti yantac celaccaiy yun tēcaṉ
cirap pāṭuṭaiyār tiruppaṟi yalūr il
viṟappā riṭañcūḻa vīrāṭṭat tāṉē.
Orukālatt ondrāki niṉṟār pōlum
Tiru nāvukkaracar perumā ṉaruḷiya Tēvāram – Tiruvārūr.
ūḻi palakaṇ ṭiruntār pōlum
perukāmē veḷḷan tavirttār pōlum
piṟappiṭumpai cākkāṭoṉ ṛillār pōlum
urukātār uḷlattu nillār pōlum
ukappār manattenrum nīṅkār pōlum
arukāka van tenna iñcē leṉpār
aṇiyārūr tirumūlaṭ ṭāṉaṉārē.
Tēvāram Vētasāram eṉṉum nūliliruntu..
