சிவபெருமான்,
அநாதிகாலத்தில் சமயங்களைச் சிருஷ்டிக்குங்கால் பல சமயங்களைக் கற்பிப்பானேன்?
ஒரு பள்ளியில் கற்கும் மாணாக்கர்கள் பிறப்பினால் ஒரு தன்மையராயினும் அறிவில் தீவிர, மந்த பேதவிளக்கத்தினால் பல வேறுபாடுடையராய் பல வகுப்பினராய் பிரித்து, அவைகளுக்கேற்ப நுட்பமாயும், பருப்பொருளாகவும் கல்வியைப் பலவிதப்படுத்தி கற்பித்தல் போல மனிதர் பிறப்பினால் ஒரு தன்மையராயினும் பக்குவ பேதம் காரணமாக தீவிரமாகவும் மந்தமாகவும் விளங்கும் அறிவின் தாரதம்மிய விளக்கமுடையராய் இருத்தலின், கிருபாசமுத்திரமாகிய சிவபெருமான் அவரவர் பக்குவ முறைப்படி நுண்பொருள் உடையனவாகவும் பருப்பொருள் உடையனவாகவும் சமயங்கள் பல நிறுத்தியதெனவாகும்.இங்கனம் செய்தல் குற்றமாகாது என்க.
இச்சமயங்களில் நிற்பவர், அவைகள் சொல்லும் அறங்களை வழுவாது அனுட்டிப்பின், அந்த அனுஷ்டான பலத்தினால்,அதனினும் மேல் சமயம் சார்ந்து, அதிற்கூறிய ஞான சாதனங்களைக் கடைப்பிடித்து, பரமுத்தி அடைவதற்கு வழியாகும்.
திருவாவடுதுறை ஆதீன வெளியீடான உலகத்தோற்றம்(1951) என்னும் நூலில் இருந்து…