The Inner and Outer Signs of Śiva Devotees


TaHiEnFrEs

அடியார் இலக்கணம் .

நைமிசாரண்ய முநிவர்கள் பத்தர்களுடைய இலக்கணம் எது என்று கேட்கச் ஶூதமுநிவர் கூறுகின்றார் : – தேவர் , அசுரர் , அரக்கர் , இயக்கர் கந்தருவர் , நாகர் , முநிவர் , நரர் ஆகிய எவ்வகையருள்ளும் அடியார்கள் உண்டு . அடியார்களுக்குள் வருணாச்சிரம பேதம் கிடையாது ; யாவரும் மாகேசுரர் . 

 அடியார்களது அகத்துள் விளங்கும் இலக்கணம் மூன்று – அவைதாம் 

(i ) மானத ஜபம் , 

( ii ) மானத சிவபூஜை 

( iii ) உள்ளத்தே பரம்பொருள் தோற்றமளித்தல் . 

புறத்தே தோன்றும் இலக்கணம் பத்து அவைதாம். : 

( 1 ) கண்டம் தழுதழுத்தல் , 

(2 ) நா அசைதல் 

( 3 ) இதழ் துடித்தல் 

( 4 ) நடுக்கமுறல் 

( 5 ) மயிர் பொடித்தல் 

( 6 ) அங்கம் வெதும்பி வியர்த்தல் 

( 7 ) தள்ளாடி வீழ்தல் 

( 8 ) கண்ணீர் சொரிதல் 

( 9 )  இரங்குதல் 

( 10 ) ஆர்வத்தால் பரவசப்படுதல் . 

இத்தகைய அடியார்கள் புண்ணியர்கள் ; வீடுபேறு பெறுவார்கள் ;

திருநீறும் கண்டிகையும் புனைந்தவர்களிடம் மேற்சொன்ன இலக்கணங்கள் இல்லாவிடினும் , அவர்களைக் கண்டால் அவர்களை வீழ்ந்து வணங்கி உபசார மொழிகளைக் கூறவேண்டும் . சிவாசாரியர்களையும் சிவனடியர்களையும் பணிந்தேத்துபவர் யாராயிருந்தாலும் நோயற்று மக்களுடன் உலகில் பல்லாண்டு வாழ்வர் ; சகல தேவர்களாலும் உபசரிக்கப்பட்டு சிவலோகம் மருவி ஈற்றில் சிவனடி கூடுவர் . சிவபுண்ணியத்தின் மேன்மை யெல்லாம் தேவிக்குச் சிவபிரான் முன்னொரு காலத்தில் கூறியருளினர் . அதிபக்குவர்க்கே சிவபுண்ணியத்தின் மேன்மையைக் கூறலாகும் . சிவபிரான் தேவியின் பொருட்டு உரைத்தது இது என்றால் தமியேனாற் கூற முடியுமோ ?

திரு ஞானவரோதய பண்டாரம் இயற்றிய உபதேச காண்டம்(1950) என்னும் நூலில் இருந்து…

இப்பதிவினை யூடியூபில் கேட்டு இன்புற…