|| உருத்திராக்கம் வேதோக்தமானது ||
நூற்றெட்டு உபநிடதங்களுள்ளே திரிபுரதாபிநி உபநிடதம் , திரிபுரோபநிடதம் , பஸ்மஜாபால உபநிடதம் , பிருஹஜ்ஜாபால உபநிடதம் , ராமரஹஸ்யோபநிடதம் , அக்ஷமாலிகா உபநிடதம் , ருத்ராக்ஷ ஜாபால உப நிடதம் ஆகிய இவைகள் உருத்திராக்ஷத்தைப்பற்றி சிறப்பித்துக் கூறுகின்றன . அவற்றுள் உருத்திராக்ஷ ஜாபாலம் உருத்திராக்ஷமணிகளின் உற்பத்தி , அளவு , முகம் , தாரணமந்திரம் , தாரணபலாதி விவரம் ஆகிய இவற்றைச் சொல்லுகின்றது . அக்ஷமாலிகை அந்த மணிகளின் நிறம் , மாலைகளின் பேதம் , மகிமை முதலிய விவரங்களைக் கூறுகின்றது . பிருஹஜ் ஜாபாலம் – மணிகளின் உற்பத்தி , தாரணம் , பலாதி இவைகளைத் தெளிவாய்ப் போதிக்கின்றது .
சிவபெருமானுடைய திருக்கண்களினின்றும் வெளிப்பட்ட நீரே விருக்ஷமாகி அவற்றின் பலனாகவிளைந்த உருத்திராக்ஷமே மகா புண்ணிய மகிமைத்தென்பது வேதங்களாலே அறியப்படுதலின் , அவை வைதிகமாவதற்கு யாதொரு இழுக்குமில்லை . விபூதி யுபநிடதமாகிய பஸ்மஜாபால உபநிடதத்தை எண்பத்தேழாவதாகவும் , இவ்வுருத்திராக்ஷ ஜாபால் உபநிடதத்தை எண்பத்தெட்டாவதாகவுஞ் சேர்த்து வைக்கப்பட்டிருத்தலால் இவ்விரண்டும் முத்திக்கு இன்றியமையாத பரமசாதனங்களெனப் பெறப்பட்டன . பட வே அக்ஷமாலிகா உபநிடதத்தை அறுபத்தேழாவது உபநிடதமாக வைத்து அதற்குமுன்னே பரமஹம்ஸபரி ராஜகோபநிடதத்தை அறுபத்தாறாவது உபநிடதமாக வைத்து வேதம் புகழ்ந்தமையால் ஸர்வசங்க பரித்தியாகஞ் செய்த தத்துவஞானத்தையுடைய சந்நியாசிகளுக்குங் கூட இது தள்ளத்தகாத பரம தாரணம் என்பது சுருதியின் சம்மதம் .
விபூதி ருத்ராக்ஷ மஹத்துவ விளக்கம் என்னும் நூலில் ஸ்ரீலஸ்ரீ சிவ அருணகிரி முதலியார் அவர்கள்…
English IAST Transliteration
|| ruttirākkaṁ vēdōktamāṉatu ||
nūṟṟeṭṭu upaniṭataṅkaḷuḷḷē tripuratāpiṉi upaniṭatam, tripurōpaniṭatam, pasmajābāla upaniṭatam, piruhajjābāla upaniṭatam, rāmarahasyōpaniṭatam, akṣamālikā upaniṭatam, rutrākṣa jābāla upaniṭatam ākiya ivaikaḷ uruttirākṣattaippaṟṟi ciṟappittuk kūṟukiṉṟaṉa. avaṟṟuḷ uruttirākṣa jāpālam uruttirākṣamaṇikaḷiṉ utpatti, aḷavu, mukam, tāraṇamantiram, tāraṇapalāti vivaram ākiya ivaṟṟaic collukiṉṟatu. akṣamālikai anta maṇikaḷiṉ niṟam, mālaikaḷiṉ pētam, makimai mutaliya vivaraṅkaḷaik kūṟukiṉṟatu. piruhaj jāpālam – maṇikaḷiṉ utpatti, tāraṇam, palāti ivaikaḷait teḷivāyp pōtikkiṉṟatu.
civaperumāṉuṭaiya tirukkaṇkaḷiṉiṉṟum veḷippaṭṭa nīrē virukṣamāki avaṟṟiṉ palaṉākaviḷainta uruttirākṣamē makā puṇṇiya makimaitt’eṉpatu vēdaṅkaḷālē aṟiyappaṭutaliṉ, avai vaidikanavataṟku yātoru iḻukkumillai. vibūti yupaniṭatamākiya pasmajābāla upaniṭatattai eṇpattēḻāvāka vum, ivvuruttirākṣa jāpāl upaniṭatattai eṇpatteṭṭāvākavun cērttu vaikkappeṭṭiruttalāl ivviraṇṭum muttikku iṉṟiyamaiyāta paramacātaṉaṅkaḷeṉap peṟappaṭṭaṉa. paṭa vē akṣamālikā upaniṭatattai aṟupattēḻāvatu upaniṭatamāka vaittu ataṟkumunnē paramahaṁsapari rājakōpaniṭatattai aṟupattāṟāvatu upaniṭatamāka vaittu vēdam pukaḻntamaiyāl sarvacaṅka parittiyākañ ceyta tattuvajñāṉattaiyuṭaiya sanniyācikaḷukkuṅ kūṭa itu taḷḷattakāta parama tāraṇam eṉpatu śurutiyiṉ sammatam.
vibūti rutrākṣa mahattuva viḷakkam eṉṉum nūlil śrīlaśrī civa aruṇakiri mutaliyār avarkaḷ…
