இந்த உடம்பும் வாக்கும் நமக்குத் தந்தவன் இறைவன். இவைகள் தாமே வந்து அமைவதில்லை. நாமேயும் எடுத்துக் கொள்வதில்லை.
“வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்த சென்னியுந் தந்த தலைவன் ” என்கின்றார் அப்பர் பெருமான். எனவே, நினைக்க நெஞ்சையும், வசனிக்க வாயையும், இந்த இரண்டையும் தாங்கி நின்று தொழிற்படுகின்ற உடம்பையும் தந்த இறைவனை, நாம் ஒவ்வொருவரும் நன்றி மறவாமையின் பொருட்டு; பூவும் நீரும் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
பூ – பூர்த்தி,
ஜா – உண்டாக்குவது!
மலமாயா கன்மங்களைப் பூர்த்தி செய்து, சிவஞானத்தை யுண்டாக்கும் புனிதமான செயல் பூஜா எனப்படும். பூஜா என்ற சொல் பூஜை என வந்தது. பூஜைக்கு முக்கியமான சாதனங்கள் பூவும் நீருமாகும்.
“புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணலு மதுகண்டு அருள் செய்யா நிற்கும்”
நல்ல மலர்களைக் கொண்டு இறைவனை நாள்தோறும் அர்ச்சனை செய்யவேண்டும். அதுவே மெய்யும் கையும் பெற்றதற்குப் பயனாகும்.
உலகில் செல்வமும் சீரும் படைத்துச் சிறப்பாக வாழ்கின்ற ஒருவனைக் கண்டபோது; “இவர் முற்பிறப்பில் நல்ல பூ வெடுத்துப் பூசை செய்தவர்” என்று இன்றும் கூறுவார்கள்.
தண்ணீரையே சிவலிங்கமாகத் திரட்டி அம்பிகை பூசித்த திருத்தலம் திருவானைக்கா.
விநாயகர் சிவபூசை செய்த திருத்தலம் திருச்செங்காட் டங்குடி.அதனால் அது கணபதீச்சுரம் எனப் பேர்பெற்றது.
சூரசங்காரத்தின் பொருட்டு, முருகவேள் படைகள் சூழப் போகும் வழியில், மண்ணியாற்றங்கரையில் சிவபூஜை செய்த இடம் திருச்சேய்ஞ்ஞலூர்.
சூரசங்காரம் புரிந்து திரும்பியபோது, தென் கடற்கரையில் ஐந்து சிவலிங்கங்கள் வைத்து முருகவேள் பூசித்தனர். அர்ச்சனை செய்யும்போது அமரர் வேண்ட, கையில் உள்ள மலருடன் திரும்பிக் காட்சி கொடுத்த கோலந்தான் திருச் செந்தூர் முருகன் திருவுருவம். இன்றும் செந்திலாண்டவன் பின்புறம் ஐந்து சிவலிங்கங்கள் இருக்கின்றன. ஆராதனை செய்யும்போது பின்புறம் கொண்டுபோய் ஆராதிக்கின்றதை இன்றும் திருச்செந்தூரில் காணலாம்.
இப்படி முருகன் வழிபட்ட திருத்தலங்கள் திருமுருகன் பூண்டி, வயலூர் முதலியன.
சக்கரம் பெறும் பொருட்டுத் திருமால் நாள்தோறும் ஆயிரந் தாமரை மலர்களால் அரனை அருச்சித்தனர். அதுவே திருவீழிமிழலை. பிரமதேவர் பூசித்த திருத்தலம் பிரமபுரம். இந்திரன் பூசித்த திருத்தலம் கண்ணார்கோயில்.
நண்டு பூசித்தது; சிலந்தி பூசித்தது; பாம்பு பூசித்தது;
குரங்கு பூசித்தது; அணில் பூசித்தது; காகம் பூசித்தது குரங்கணிமுட்டம்)
பெரிய உருவமுள்ளது யானை; சிறிய -உருவமுள்ளது எறும்பு. எறும்பு முதல் யானை யீறாக என்று கூறுவர். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருஎறும்பூர் எறும்புபூசித்த திருத்தலம்; யானை பூசித்த திருத்தலம் திருவானைக்கா.
எறும்பும் யானையும் பூசித்த இந்தத் தலங்களைக் கண் கூடாகக் கண்டும், மனிதர்கள் இறைவனைப் பூசிக்காமல் உண்டு உடுத்து உலாவி வீணே காலங் கழித்துக் காலன் வாய்ப்படுகின்றனர்.
இவர்களைக் கண்டு வருந்தி அதிவீரராமபாண்டியர் பாடு கிறார்.
“சிவகருமஞ் செய்யார் திருநீறு சாத்தார் தவநிலையாஞ் சைவநெறி சாரார்–அவனிதனில் கான்பரந்த பச்சைக் களாநிழலைக் கைதொழார் ஏன்பிறந்தார் மானிடராய் இன்று?”
இறைவனைப் பூசிக்காத புல்லர்களை மனிதர்கள் என்று கூறக்கூடாது. அவன் தந்த கையால் அவனை வழிபட மறுத்தால் நன்றிகொன்ற பாவம் விடாதுதானே.
“எறும்புகடை யானைதலை ஈசனைப் பூசித்துப் பெறுங்கதிகண் டும்தேறார் பேய்கள் அறிந்த உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையாய் வைக்கப் படும்”
–முதுமொழிமேல் வைப்பு
கண்ணபிரான் மகப்பேறு வேண்டி சிவபூஜை செய் தனர். அதனால் பிறந்த மகனுக்கு சாம்பவான் என்று பேரிட்டனர்.
அர்ச்சுனன் சதா சிவபூஜை செய்தனன். சிலர் கேட்கின்றார்கள்; எங்கள் வீட்டில் யாராவது இறந்துவிட்டால் அப்போது பூஜை செய்யலாமா? என்பார்கள். அர்ச்சுனன் தன் மகன் அபிமன்யு மாண்ட அன்றிரவு சிவபூஜை செய்தான் என்று மகாபாரதம் பேசுகின்றது.
திரு கிருபானந்தவாரியார் விரிவுரை விருந்து என்னும் நூலில் இருந்து…
English IAST Transliteration
Inta uṭambum vākkum namakku tanda vaṉ igai vaṉ. Ivai ṭā mvē vandu amaivilai. Nāmēyum eṭut tukuṉṟatu milai. “Vāḻtta vāyum niṉaikka maṭa neñcamum tāḻtta ceṉṉiyum tanda talaivaṉ” eṉkiṉṟār appar perumāṉ.
Eṉvēr, niṉaikka neñ caiyum, vacanikka vāyaiyum, inta iṟaṇṭaiyum tāṅki niṉṟu toḻilpaṭukiṉṟa uṭambaiyum tanda igai vaṉai, nām ovvoruvarum naṉṟi maṟavāmaiyiṉ poruṭṭu; pūvum nīrum koṇṭu pūjai ceyya vēṇṭum.
Pū – pūrtti,
jā – uṇṭākuvatu!
Malamāyā kaṉmaṅ ḷaip pūrtti ceytu, civagñāṉattai yuṇṭākum punitamāṉa ceyal pūjā eṉappṭum. Pūjā eṉṟa col pūjai eṉa vantatu. Pūjaikkum mukkiyamāṉa cātanaṅ ḷa pūvum nīrumā kum.
“Puṇṇiyañ ceyvārk kup pūvuṇṭu nīruṇṭu aṇṇalumatu kaṇṭu arul ceyyā niṟkum”
Nalla malarkaḷ koṇṭu igai vaṉai nāltoṟum arc caṉai ceyyavēṇṭum. Atuvē meyyum kaiyum peṟṟatṟak kup payaṉākum. Ulagil celvamum cīrum paṭaittu cirap pākā vāḻ kiṉṟa oruvaṉai kāṇṭapōtu; “Ivar muṟpiṟappil nalla pū veṭuttu pūcai ceytavar” eṉṟu iṉṟum kūṟuvār ḷa.
Taṇṇīrai yē civalingamāgat tirāṭṭi ampi kai pūcittat tiruttalam tiruvāṉaik kā. Viṉāyakar civapūcai ceytat tiruttalam tirucc eṅkāṭ ṭaṅkuṭi. Atanāl atu kaṇapatīccuram eṉap pērpeṟṟatu. Cūracaṅkārat tiṉ poruṭṭu, murugavēḷ paṭai ḷa cūḻap pōkum valiyil, maṇṇiyā ṭṟaṅkaraiyal civapūjai ceyta iṭam tirucceyññalūr.
Cūracaṅkāram puriytu tirumpiyapōtu, ten kaṭaṟkaraiyal aintu civalingam ka ḷva ittu murugavēḷ pūcittanar. Arccaṉai ceyyum pōtu amarar vēṇṭa, kaiyil uḷḷa malaruṭaṉ tirumpik kāṭci koṭutta kōl antān tiruccentūr murukaṉ tiruvuruvam. Iṉṟum centilāṇṭavaṉ piṉpuṟam aintu civalingam ka ḷiruk kiṉṟaṉ. Ārātai ceyyum pōtu piṉpuṟam koṇṭupōy ārātikkiṉṟat aiṉṟum tiruccenturil kāṇalām. Ippaṭi murukaṉ vaḻipatta tiruttalaṅ ka ḷtirumuru kaṉ pūṇṭi, vayalūr mutaliyaṉa.
Cakkaṟam peṟum poruṭṭut tirumāl nāltoṟum āyiraṁ tāmaraimalarka ḷāl araṉai aruccittanar. Atuvē tiruvīḻimiḻalai. Piramatēvar pūcitta tiruttalam piramapūram. Intiṟaṉ pūcitta tiruttalam kaṇṇārkōyil.
Naṇṭu pūcittatu; Cila anti pūcittatu; Pām pu pūcittatu; Kuraṅku pūcittatu; Aṇil pūcittatu; Kākam pūcittatu (Kuraṅka ṇimuṭṭam) Periya uruvamu ḷḷatu yāṉai; Ciriya uruvamu ḷḷatu erumpu. Erumpu mutal yāṉai yīṟāka eṉṟu kūṟuvār.
Tiruccirāppa ḷḷikk aru xil uḷḷa tiru erumpūr erumpupūcittat tiruttalam; Yāṉai pūcitta tiruttalam tiruvāṉaik kā. Erumpum yāṉaiyum pūcitt inta talaṅ ka ḷka ṅkūṭāgak kaṇṭum, manitar igai vaṉaip pūcikkāmal uṇṭu uṭuttu ulāvi vīṉē kālaṅ kaḻittuk kālaṉ vāyp paṭukiṉṟaṉar. Ivar ka ḷkaṇṭu varunti ativīrārāmapāṇṭiyar pāṭu kiṟār.
“Civakarumañ ceyyār tirunīṟu cāttār tavanilaiyāñ caivaneṟi cārār–Avaṉit aṉil kāṉpa raṉtapa cakkā nidalai kaittoḻār ēṉpiṟaṉṟār māṉiṭarāy iṉṟu?”
Igai vaṉaip pūcikkāta pullar ka ḷmāṉitar eṉṟu kūṟakkūṭātu. Avaṉ t anta kaiyāl avaṉai vaḻipata marut tāl naṉṟikoṉṟa pāvam viṭātu tāṉē.
“Erumpukaṭai yāṉaitalai īcaṉaip pūcittup peṟuṅkatikaṇ ṭumtēṟār pēy kaḷaṟiṉta ulakat tār uṇṭeṉpat illēṉpāṉ vaiyatt alakaiyāy vaikkap paṭum”
–Mutumōḻimēl vaippu
Kaṇṇapirāṉ makappēṟu vēṇṭi civapūjai cey t aṉar. Atanāl piṟaṉṯa makaṉukku cāmpavāṉ eṉṟu pēriṭṭaṉar. Arc caṉaṉ catā civapūjai ceytaṉaṉ. Cilar kēṭ kiṉṟār ka ḷ; Eṅ ka ḷvīṭṭil yārāvatu iṟaṉtuvit tāl appōtu pūjai ceyyalamā? Eṉpār ka ḷ. Arc caṉaṉ taṉ makaṉ apimaṉyu māṇṭaṉṟiṉṟu civapūjai ceytāṉ eṉṟu makāpāratam pēcu kiṟatuṭu. Tiru kirupāṉantavāriyār virivurai viruntu eṉṅum nūlil iruntu…
