சிவாலய மஹோற்சவமானது இறைவனது பஞ்ச கிருத்தியத்தைக் (ஐந்தொழில்) குறிப்பதாக நிகழும். பெரும்பாலும்
10 நாட்களில் நிகழ்கின்ற இப்பெருவிழாவின் தத்துவம் சிவஞான நூல்களில் இனிது விளக்கப்பட்டுள்ளன.
முதல் நாள் அன்று பெருமான் அன்னவாகனத்தில் எழுந்தருளி வருவது மரபு. இது பிரம தேவனுடையது ஆதலால் முதல் மூன்று நாள் உற்சவங்களும் சிவபெருமான் சிருஷ்டிகர்த்தா வாகிய பிரமதேவனிடம் அதிட்டித்து நின்று சிருஷ்டித்
தொழிலைச் (படைத்தலை) செய்கின்றான் என்பதை விளக்கும்.
நான்காவது நாளில் பெருமாள் நாக வாகனதில் எழுந்தருளி வருவது மரபு. இது திருமாலின் வாகனமாதலால் 4, 5, 6 ஆகிய விழாக்களும் சிவபெருமான் திதிகர்த்தாவாகிய திருமாலிடம் அதிட்டித்து நின்று திதித்தொழிலை (காத்தலை) நிகழ்த்துகின்றான் என்பதை விளக்கும்.
7-வது நாளன்று பெருமான் இரதத்திலும் 8-வது நாளன்று குதிரை வாகனத்திலும் எழுந்தருளுவது மரபு. இது பெருமான் சம்ஹார கர்த்தாவாகிய ருத்ரமூர்த்தியிடம் அதிட்டித்து நின்று சம்ஹாரத் தொழிலை (அழித்தலை) நிகழ்த்துகின்றான்
என்பதைக் காட்டும். ஒன்பதாம் நாளில் ஆண்டவன் பிக்ஷாடனராக எழுந்தருளி வருவது, பெருமான் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளது செருக்கை (அவர் அறிவை மயக்கி) அடக்கியதைக் குறிக்கும். மறைத்தல் சக்தி கருநிறமாதலால், பெருமானும் கரிய பட்டு நூல்களையும், கரிய புட்பமாலையையும் அணிந்து வருவான். இது மறைத்தல் சக்தி கருநிறமானது என்றும் மயக்கும் தன்மையுடைய தென்றும், இவ்விழா (மறைத்தலை) திரோதானம் என்னும் நான்காவது தொழிலை குறிக்கும்.
இனி கடைசி நாளாகிய பத்தாவது நாள் அன்று பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வந்து தீர்த்தமாடிஉயிர்களுக்கு அருள்புரிகின்றான் என்பது அநுக்ரகத் தொழிலைக் (அருளல்) குறிக்கும்.
சிவக்ஷேத்ராலய மஹோற்சவ உண்மை விளக்கம் என்னும் நூலில் என்னும் நூலில் இருந்து…
English IAST Transliteration
Civālaya Mahōtsavamānatu Iraivanatu Pañca Kiruttiyattai Kuṟippitāk Nikiṭum. Perumpālum 10 Nāṭkaḷil Nikiṉṟa Ippēruviḻāviṉ Tatvam Civaññāna Nūlaikalil Iṉitu Viḷakkappaṭṭuḷḷan. Mutaḷ Nāḷ Anṟu Perumāṉ Annavākaṉattil Eḻuntharulī Varuvatu Marapu.
Idu Paramateivanuṭaiyatu Ātalāl Mutaḷ Mūṇṟu Nāḷ Uṟcavangaḷum Civaperumāṉ Ciruṣṭikarttāvākya Paramateivanuṭaiyatu Atiṭṭitte Ninnu Ciruṣṭit Toḻilai (Paṭaittalai) Ceykiṉṟāṉ Enpat Enpatu.
Nāṉkāvatam Nāḷil Perumāḷ Nāka Vākaṉatilai Eḻuntharulī Varuvatu Marapu. Idu Tirumāliṉ Vākaṉamātalāl 4, 5, 6 Ākkiya Viḻākaḷum Civaperumāṉ Titikarttāvākya Tirumāḷiṭam Atiṭṭitte Ninnu Titit Toḻilai (Kāttalai) Nikalthukkiṉṟāṉ Enpatu.
7-vatu Nāḷaṉṟu Perumāṉ Irattilum 8-vatu Nāḷaṉṟu Kutirai Vākaṉattilum Eḻuntharuluvatu Marapu. Idu Perumāṉ Samhāra Karttāvākya Ruttramūrttiyilam Atiṭṭitte Ninnu Samhārat Toḻilai (Aḻittalai) Nikalthukkiṉṟāṉ Enpatu Kāṭṭum.
Ompatāvatu Nāḷil Āṇṭavaṉ Pikhṣāṭaṉarāka Eḻuntharulī Varuvatu, Perumāṉ Tārakāvaṉattu Ṛṣi Pattinikalaṉatu Cerukkiṉ (Avar Aṟivai Mayakkī) Aṭakkiyat Enpatu Kuṟikkum. Maṟattāl Sakti Karuṉiṟamātalāl, Perumāṉum Kariya Paṭṭu Nūlkaḷaiyum, Kariya Puṣpamālaiyum Aṇiṉtu Varuvāṉ. Idu Maṟattal Sakti Karuṉiṟamaṉatu Enṟum Mayakkuṁ Taṉmatuṭaiyatu Teṉṟum, Ivviḻā (Maṟattālai) Tirōtāṉam Enṉum Nāṉkāvatu ToḴilai Kuṟikkum.
Iṉi Kaṭaicci Nāḷākkiya Pattāvatu Nāḷ Aṉṟu Perumāṉ Capparattil Eḻuntharulī Vantu Tīrtthamāṭi Uyirkaḷukk Arul Puriṉṟāṉ Enpatu Anukraha Toḻilai (Aruḷal) Kuṟikkum.
