The Significance of Rudrākṣa Dāna


TaHiEnFrEs

|| மதுமாமிசம் புசிப்பவர்க்கு ருத்ராக்ஷ தானம் செய்தலாகாது ||

உருத்திராக்க தானம் . 

சிவனடியராயுள்ளார்க்கு உருத்திராக்க மாலையை யாவது , மணியையாவது தானஞ் செய்தல் சொல்ல வொண்ணாப் பரம புண்ணியம் ஆகும் . சுத்த வித்தைகளிலே சொல்லப்பட்ட துலாபுருட தானம் , இரணிய கருப்பதானம் பிரமாண்ட தானம் , இரணிய கற்பகதானம் , அட்டோத்தர சகத்திர கோதானம் , இரணிய விடபதானம் , இரணிய வசுவதானம் , இரணிய கன்னிகா தானம் , இரணிய துவாரபாலக தானம் , சொர்ண ரத தானம் , பஞ்சலாங்கல தானம் , சுவர்ண பூமி தானம் , கற்பகலதா தானம் , இரத்தின தேனு தானம் , பொற்கும்ப தானம் , சுவர்ண கணபதி தானம் , விட்டுணு விம்ப தானம் , திலபதும தானம் , திலபருவத தானம் , திலதேனு தானம் , இலக்குமி தானம் , அன்னதானம் , சுவர்ண தானம் , வித்தியா தானம் , சிவிகா தானம் , கவிகா தானம் , பாதரக்ஷாநி முதலிய த னங்கள் எவற்றினும் இது மிக விசேடமுடையது . உருத்திராக்க தானத்திற்கு ஒப்பாகவாவது உயர்வாகவாவது வேறோர் தான முளதென நினைத்தலும் மகாபாவம்.தானஞ் செய்வார்அன்புடனே செய்க . மதுமாமிச பக்ஷணமுடையார், சிவ தீக்ஷையில்லார் , தூர்த்தர் முதலிய அசற்பாத்திரர்க்குத் தானஞ் செய்தலாகா.சற்பாத்திர முடையார்க்குத் தானஞ் செய்தவர் இருவினையி னின்றும் நீங்கிச் சிவசாலோக்கிய முத்தியையடைந்து , அங்கிருந்தவாறே  சிவபெருமானோடு இரண்டறக் கலத்தலாகிய சிவசாயுச்சிய முத்தியை யடைவர் . 

பெருந்திரட்டு . 

துலைப்புருட முதலாகச் சுத்தவித்தை கிளக்குபல தூய தானக் 

கிலையிதன்ற னிலேசமென வெண்ணியா னடியவர்க்கிங் கியன்ற கண்டீ 

யலைவின்றிப் பத்தியுடன் கொடுப்பரே லவர்முத்திக் கருக ரிந்த 

மலைவகற்றுந் தானமொரு பாத்திரர்க்கே செய்வதென மறைகள் பேசும் .

யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்தசரபம் சைவத்திரு நா.கதிரைவேற் பிள்ளை இயற்றிய சைவபூஷண சந்திரிகை என்னும் நூலில் இருந்து…