The Temple as a Microcosm of the Universe: A Saiva Explanation


TaHiEnFrEs

உயிர்கள் கர்ம சக்கரத்தாற் சுழன்று பிரபஞ்ச வாசனையில் அழுந்தி, தாரம்,
தனம் முதலான பொருள்களின் மோகத்தால் சுகதுக்கங்களைக் கடலலைபோல் ஓயாது
மாறி மாறி அனுபவிக்கின்றன. கடவுள் எங்கும் வியாபகராயிருத்தலால் எந்த
விடத்திலிருந்தும் அவரை வழிபடலாம் என எண்ணில், சுகதுக்கரூப அலைகள்
எங்கும் சூழ்ந்து கொண்டிருத்தலால் அவை அவ்வழிபாட்டை நிலைக்கவொட்டாது
தடைபண்ணும். ஆகவே ஒருமனத்தோடு வழிபாடு செய்வதற்குரிய இடம் ஆலயம்.
எல்லோரும் ஒருங்குகூடிக் கடவுளை வழிபடுவதற்கும் ஆலயம் அவசியமாகும். எனவே
ஆலயமானது எங்கும் வியாபியாவிருக்கிற கடவுள் மந்திர பூர்வமாக ஸ்தாபிக்கப்படும்
வடிவங்களில் வெளிப்பட்டு ஆன்மாக்களுக்கு அருள்புரியுமிடமாகும். ஆ – பசு லயம்
ஒடுங்குதல், எனப் பொருள்படுதலால் அது ஆன்மாக்கள், தம்மைப் பத்தித்த ஆணவ
மல வலி ஒடுங்கப்பெற்றுப் பேரன்புடன் மனோவாக்குக் காயங்களென்னும் திரிகரணங்களாலும் முறையே சிந்தித்து, வாழ்த்தி, வணங்கி, அருண்ஞானமடைந்து, இறைவனிடத்து ஒடுங்குவதற்குச் சாதனமான இடமாகும்.

சிவாலயம் அண்டத்தில் காணப்படும் பாகுபாடுகளையும் பிண்டத்தில் காணப்படும் பாகுபாடுகளையும் குறிப்பதாகும். அண்டத்தில் காணப்படும் அத்துவாக்களின் வகையாலும் உடலில் காணப்படும் உறுப்பு வகையாலும் தியானத்தின் நிமித்தம்
உடலிற் பாவிக்கப்படும் ஆதாரங்களின் வகையாலும் சிவாலயம் அண்ட பிண்ட ஸ்வரூபமாயுள்ளது.

ஆலய வழிபாட்டின்‌ தத்துவம்‌ என்னும் கட்டுரையில் “ சிவாகம வித்துவான்‌ ”, சிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சாரியார்‌‌ அவர்கள்.


English IAST Transliteration

uyirkaḷ karma cakkarattāṟ cuḻaṉṟu pirapañca vācaṉaiyil aḻunti, tāram, taṉam mutalāṉa poruḷkaḷiṉ mōkattāl cuka tukkaṅkaḷaik kaṭalalaipōl ōyātu māṟi māṟi aṉupavikkiṉṟaṉa. kaṭavuḷ eṅkum viyāpakarāyiruttalāl entaviṭattiliruntum avarai vaḻipaṭalām eṉa eṇṇil, cukatukkarūpa alaikaḷ eṅkum cūḻntu koṇṭiruttalāl avai avvaḻipāṭṭai nilaikkavoṭṭātu taṭaipaṇṇum. ākavē orumaṉattōṭu vaḻipāṭu seyvataṟkuriya iṭam ālayam. ellōrum oruṅkūṭik kaṭavuḷai vaḻipaṭuvataṟkum ālayam avaciyamākum. eṉavē ālayamāṉatu eṅkum viyāpiyāvirukkiṟa kaṭavuḷ mantira pūrvamāka stāpikkap paṭum vaṭivaṅkaḷil veḷippaṭṭu āṉmākkaḷukku arulpuriyu miṭamākum. ā – pacu layam oṭuṅkutal, eṉap poruḷpaṭutalāl atu āṉmākkaḷ, tammaip pattitta āṇava mala vali oṭuṅkap peṟṟup pēraṉpuṭaṉ maṉōvākku kkāyaṅkaḷeṉṉum tirikaraṇaṅkaḷālum muṟaiyē cintittu, vāḻtti, vaṇaṅki, aruṇjñāṉamaṭaintu, iṟaivaṉiṭattu oṭuṅkuvataṟkuc cātaṉamāṉa iṭamākum.

civālayam aṇṭattil kāṇappaṭum pākupāṭukaḷaiyum piṇṭattil kāṇappaṭum pākupāṭukaḷaiyum kurippatākum. aṇṭattil kāṇappaṭum attuvākkaḷiṉ vakaiyālum uṭalil kāṇappaṭum uṟuppu vakaiyālum tiyāṉattiṉ nimittam uṭaliṟ pāvikkap paṭum ātāraṅkaḷiṉ vakaiyālum civālayam aṇṭa piṇṭa svarūpamāy uḷḷatu.

ālaya vaḻipāṭṭiṉ tattuvam eṉṉum kaṭṭuraiyil “ civākama vittuvāṉ ” sivaśrī svāminātha sivāccāriyār avarkaḷ.