தேவாதியருஞ் சிவசின்ன தாரணர்
விட்டுணு, பிரமன், இந்திரன், தேவர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கந்தருவர், வித்தியாதரர், நாகர், கருடர் முதலிய கணத்தவர்களும், மனிதருள் அநேகருமாகிய சிவனடியவர் யாவருஞ் சிவசின்னங்களைத் தரித்திருக்கின்றனர் என்பது வேதாகம உபநிடத மிருதிபுராண இதிகாசாதி சாத்திரங்களால் அறியக் கிடக்கின்றது.
மாலயனிந் திரன்மற்றை யமரர்மலர் மகளிர்சசி மற்றை வானக்கோலமட வாரியக்கர் கந்தருவ ரரக்கர்குல வசுரர் வேதச்சீலமுனி வரர்மற்றோ ரிவருளருந் தவமுடையீர் திருவெண்ணீறுசாலவுமுத்தூளனமுப்புண்டரநாடொரும்போற்றித்தரியார்யாரே.-ஶ்ரீஸூதசங்கிதை.
விஷ்ணுவும் விபூதிருத்திராக்க தாரணரே
சிலர், ஆசாரியருட் சிறந்தவராய், சிவசத்திகளுளொருவராய், சிவபத்தருட் சிறந்தவராய், காத்தற் கடவுளராய் விளங்கும் விஷ்ணுக்கும் அவனை வழிபடுவார்க்கும் விபூதி ருத்திராக்கதாரணம் தக்கதன்று என்கின்றனர். “பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷ¡ பரணா: – தக்ஷ¢ணாயாந் திகி விஷ்ணு” எனவரும் (அதர்வணவேதம்) பஸ்மஜாபால உபநிடத சுலோகத்தானே திருமால் ஸ்ரீகாசி §க்ஷத்திரத்திலே தென்றிசைக்கணிருந்து விபூதிருத்திராக்க தாரணமுடையராய் உபாசிக்கின்றனர் என்பது பெறப்படலானும், “சிவேநவிஷ்ணு நாசைவ” எனவரும் ஶ்ரீஸூதசங்கிதைச் சுலோகத்தானே திருமாலுக்கும் அவரது தேவியார்க்குஞ் சைவ தருமமும், விபூதி தாரணமுங் கூறப்பட்டமையானும், இன்னும் இராமாவாதார மெடுத்த காலத்து “த்யாத்வா ரகுபதிம் க்ருத்தம் காலாநல மிவாபரம் – பீத க்ருஷ்ணாஜிநதரம் பஸ்மோத்துளன விக்ரஹம்” என்னும் இராமாயண சுலோகத்தானும், “ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாக்ஷ¡த் ருத்ர மிவாபரணம் – பஸ்மோத் தூளித ஸர்வாங்கம் த்ருஷ்டுவா காம வசங்கதா” என்னும் அத்தியாத்மராமாயண சுலோகத்தானும், விபூதி தரித்திருந்தனரென்பது வெளியாகலானும், “கண்ணன்வென்பூதி பூசிக் கண்டிகை மாலை சாத்திப் – புண்ணியத் திங்கள்வேணி யானிரு பாதம் போற்றி” எனக் கண்ண அவதாரத்திலுங் கண்டிகையு நீறுமணிந்தனர் என்று கூர்மபுராணங் கூறுவதனானும், “சிவஸ்ய விஷ்ணோர் தேவாநாம்” எனவரும் பராசரஸ்மிருதி சுலோகத்தானே விபூதியைத் திரிபுண்டாமாகத் தரிப்பின்கேசவமூர்த்திக்கும் இலக்குமிதேவியார்க்குந் திருப்தியுண்டாகிறது எனத் தெரிதலானும், ஏனைய பிரமாண நியாயங்களானும் விஷ்ணுவுஞ் சிவசின்ன தாரணரும், சிவசின்ன தாரணப் பிரியருமாகலின், அவற்கும் அவனை வழிபடுமடியார்க்குஞ் சிவசின்னங்கள் உரியனவாமென்று தெளியப்பட்டது.
யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்த மகாசரபம் சிவஸ்ரீ நா.கதிரைவேற் பிள்ளை இயற்றிய சைவபூஷண சந்திரிகை என்னும் நூலில் இருந்து…
English IAST Transliteration
Dēvātiyaruñ civaciṉṉa tāraṇar
viṭṭuṇu, piramaṉ, intiraṉ, tēvar, muṉivar, kiṉṉarar, kimpuruṭar, kantarvar, vittiyātarar, nākar, karuṭar mutaliya kaṇattavarkaḷum, maṉitaruḷ aṉēkarumākiya civaṉaṭiyar yāvaruñ civaciṉṉaṅkaḷait tarittirukkiṉṟaṉar eṉpatu vētakama upaniṭata mirutipūraṇa itikācāti cāttiraṅkaḷāl aṟiya kiṭakkiṉṟatu.
mālayiniṉ tiramaṟṟai yamaramalar makaḷircaci maṟṟai vāṉakkōlamaṭa vāriyakkar kantarvara rakkarkula vacurar vēdaccīlamuṉi vararmaṟṟō rivaruḷarun tavamuṭaiyīr tiruveṇṇīṟucālavumuttūḷaṉamuppuṇṭaranāṭorumpōṟṟittariyār yārē.-śrī sūta caṅkitai.
viṣṇuvum vibūtiruttirākṣa tāraṇarē
cilar, ācāriyaruṭ ciṟantavarāy, civacattikaḷuḷoruvārāy, civapattaruṭ ciṟantavarāy, kāttaṟ kaṭavuḷarāy viḷaṅkum viṣṇukkuṁ avaṉai vaḻipaṭuvārkkum vibūti ruttirākkṣatāraṇam takkatantry eṉkiṉṟaṉar. “basmadik tāṅgā ruttirākṣā paraṇā: – dakṣiṇāyān diki viṣṇu” eṉavarum (atharvaṇavēdam) basmajābāla upaniṭata clōkattāṉē tirmāl śrīkāci kṣēttirattilē teṉṟicaikkaṇiruntu vibūtiruttirākṣa tāraṇamuṭaiyarāy upācikkiṉṟaṉar eṉpatu peṟappaṭalāṉum, “civēnaviṣṇu nāsaiva” eṉavarum śrī sūta caṅkitaic clōkattāṉē tirmālukkuṁ avartēviyārkkuñ caiva tarumamum, vibūti tāraṇamuṅ kūṟappaṭṭamaiyāṉum, iṉṉum irāmāvatāra meṭutta kālattut “dhyātvā raghupatiṁ kruttaṁ kālānala mivāparaṁ – pīta kr̥ṣṇājīnadharaṁ pasmōtthūlana vigrahaṁ” eṉṉum irāmāyaṇac clōkattāṉum, “svarṇa varṇa jaṭāpāraṁ sākṣāt rudra mivāparaṇaṁ – pasmōt dhūlita sarvāṅgaṁ druṣṭuvā kāma vacaṅgadhā” eṉṉum attiyātmarāmāyaṇac clōkattāṉum, vibūti tarittiruntaṉar eṉpatu veḷiyākalāṉum, “kaṇṇaṉveṇpūti pūcik kaṇṭikai mālai cāttip – puṇṇiyat tiṅkaḷvēṇi yāṉiru pātaṁ pōṟṟi” eṉak kaṇṇa avatārattiluṅ kaṇṭikaiyu nīṟumaṇintaṉar eṉṟu kūrmapurāṇaṅ kūṟuvatāṉum, “civasyai viṣṇōr dēvānām” eṉavarum parācarasmiruti clōkattāṉē vibūtiyait tripuṇṭarāmākat tarippiṉkēcavamūrttikkum ilakkumitēviyārkkuṅ tiruptiyuṇṭākiṟatu eṉat teritalāṉum, ēṉaiya piramāṇa niyāyaṅkaḷāṉum viṣṇuvuñ civaciṉṉa tāraṇarum, civaciṉṉa tāraṇap piriyarumākalil, avarkkuṁ avaṉai vaḻipaṭumaṭiyārkkuñ civaciṉṉaṅkaḷ uriyaṉavāmeṉṟu teḷiyappaṭṭatu.
yāḻppāṇattu mēlaipulōli caivacittānta makācarapam sivaśrī nā.katiraivēṟ piḷḷai iyaṟṟiya caivapūṣaṇa cantirikai eṉṉum nūlil iruntu…
