கடவுள் சிவபெருமான் ஒருவரே. அவர் அறக்கருணையாலும் மறக்கருணையாலும் உயிர்களுக்கு அநுக்கிரகம் செய்யும் பொருட்டு எடுத்துக்கொண்ட அருள் வடிவங்கள் சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் முதலாகப் பலஉள்ளன. சிவபெருமானது ஆணையைப் பெற்று உயிர்களுக்கு நிக்கிரக அநுக்கிரகங்களைச் செய்கின்ற திருமால் நான்முகன் முதலிய தேவர்களும் உள்ளனர். முன்னே சொல்லிய கடவுளரின் திருவுருவங்களும் பின்னே சொல்லிய தேவர்களின் திருவுருவங்களும் சிவாலயத்தில் வைத்துப் பூசிக்கப் பெறுவதால் சிவாலயம் அனைத்துத் தெய்வங்களின் சொரூபமாக அமைந்திருக்கிறது. மேலும் உயிர்களுக்கு அருள்புரிவதற்குச் சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் ஆகிய மூவகைத் திருமேனிகளையும் கொள்ளுவார். சிவாலயத்தின் பள்ளியறையிலுள்ள கண்ணாடியில் அருவ வடிவமும் சிவலிங்கத்தில் அரு வுருவ வடிவமும் சந்திரசேகரர், விநாயகர் முதலிய திருவுருவங்களில் உருவ வடிவமும், அமைந்துள்ளன.
இன்னும் சிவாலயத்திலுள்ள சிவலிங்கம் பதி, இடப தேவர் பசு, பலிபீடம் பாசம் என்பதும் அறியத்தக்கதாகும்.
இங்ஙனமாகச் சிவாலயத்தில் உள்ள உண்மைகள் விரிக்கிற் பெருகும். உண்மை நூல்களை ஓதியுணர்ந்த ஆன்றோர்களிடம் இவற்றைக் கேட்டுத் தெளிந்து அமைதி பெறுவது அறிவுடைமையாகும்,
பொருளாற்றலும் அருளாற்றலும்.
காணப் பெறுகின்ற எல்லாப் பொருள்களிலும் அவ்வவற்றுக்கெனத் தனித்தனியே ஆற்றல்கள் அமைந்திருக்கின்றன. இதைப் “பெளதிக ஆற்றல்” என்று சொல்லுவோம். இதைப் போலவே எல்லாப் பொருள்களிடத்திலும் எதனாலும் அளந்தறிய முடியாத தெய்வீக ஆற்றலும் நிறைந்திருக்கிறது. அதனாலேயே அறிவற்ற பெளதீக ஆற்றல் அறிவுள்ள மனித ஆற்றலுக்கும் அப்பாற் பட்டுச் செயற்பட்டு விடுகிறது.
பொருளாற்றல் பொருள்களில் தங்கியிருந்து வெளிப்படுவது போல அருளாற்றல் அருள் நிறைந்த சிவஞானியரது உள்ளம் உடம்பு செயல் முதலியவற்றிலும் அவர் கைக்கொள்ளும் தருப்பை மாவிலை முதலியவற்றிலுமாக எளிதில் வெளிப்பட்டு அனைவருக்கும் பயனை வழங்குகிறது.
கும்பாபிஷேக தத்துவம் என்னும் நூலில் சைவத்திரு தத்புருஷ தேசிகர் அவர்கள்.
English IAST Transliteration
kaṭavuḷ civaperumāṉ oruvarē. avar aṟakkaruṇaiyālum maṟakkaruṇaiyālum uyirkaḷukku anukkirakam ceyyum poruṭṭu eṭuttukkoṇṭa aruḷ vaṭivaṅkaḷ candirasēkarar, comāskandar mutalākap palavuḷḷaṉa. civaperumāṉatu āṇaiyaip peṟṟu uyirkaḷukku nikkiraka anukkirakaṅkaḷaic ceykiṉṟa tirumāl nāṉmukaṉ mutaliya tēvarkaḷum uḷḷaṉar. muṉṉē solliya kaṭavuḷariṉ tiruvuruvāṅkaḷum piṉṉē solliya tēvarkaḷiṉ tiruvuruvāṅkaḷum civālayattil vaittup pūccikkap peṟuvadāl civālayam anaittut teyvaṅkaḷiṉ sorūpamāka amaintirukkiṟatu. mēlum uyirkaḷukku arulpuriṟataṟkuc civaperumāṉ aruvam, aruvuruvam, uruvam ākiya mūvakaitt tirumēṉikaḷaiyum koḷḷuvār. civālayattiṉ paḷḷiyaṟaiyullḷa kaṇṇāṭiyil aruva vaṭivamum civiliṅkattil aruvuruvam vaṭivamum candirasēkarar, viṉāyakar mutaliya tiruvuruvāṅkaḷil uruva vaṭivamum, amaintuḷḷaṉa.
iṉṉum civālayattilluḷḷa civiliṅkam pati, iṭapa tēvar pacu, palipīṭam pācam eṉpatum aṟiyatakkadākum.
iṅṅaṉamākac civālayattil uḷḷa uṇmaikaḷ virikkiṟ perukum. uṇmai nūlkaḷai ōtiyuṇarnda āṉṟōrkaḷiṭam ivaṟṟaik kēṭṭut teḷintu amaiti peṟuvatu aṟivuṭaimaiyākum.
poruḷāṟṟalum aruḷāṟṟalum.
kāṇap peṟukiṉṟa ellāp poruḷkaḷilum avvavaṟṟukkeṉat taṉittaṉiyē āṟṟalkaḷ amaintirukkiṉṟaṉa. itaip “pautika āṟṟal” eṉṟu solluvōm. itaip pōlavē ellāp poruḷkaḷiṭattilum etaṉālum aḷantariya muṭiyāta teyvīka āṟṟalum niṟaintirukkiṟatu. ataṉālāyē aṟivaṟṟa pautīka āṟṟal aṟivuḷḷa maṉita āṟṟalukkum appāṟpaṭṭuc ceṟpaṭṭu viṭukiṟatu.
poruḷāṟṟal poruḷkaḷil taṅkiyiruntu veḷippaṭuvatu pōla aruḷāṟṟal aruḷ niṟainta civajñāṉiyaratu uḷḷam uṭampu ceyal mutaliya vaṟṟilum avar kaikkoḷḷum taruppai māvilai mutaliya vaṟṟilumāka eḷitil veḷippaṭṭu aṉaivarukkum payaṉai vaḻaṅkukiṟatu.
kumpābhiṣēka tattuvam eṉṉum nūlil caivattiru tatpuruṣa dēśikar avarkaḷ.