“சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான்
திருமுறை 4, பதிகம் 112 பொது, பாடல் எண் : 9 : திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம்.
அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி லவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே.”
our Lord who has a red body and has the name of Civaṉ to denote himself only.
it such a great god admits me as his protege and protects me.
if I invoke him for many days catching hold of him by his name pavaṉ wandering wherever he goes.
he will definitely appear before me thinking this fellow will not cease invoking me for many days.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
சிவ என்னும் பதம் சி-வ-எனப்பிரிந்து, சிகாரம் பதியட்சரமாகவும், வகாரம் பரையட்சரமாகவும் பெயர்பெற்று, சூரியனும் ஒளியும்போலவிளங்கும்.
பிறவியையும் மலத்தையும் நீக்கி மோட்சத்தைத்தரும்
படிநினைத்துச் சிவசத்திகளிடத்தில் உடல் பொருளாவியை
ஒப்பித்தலே சிவபூசை என்பதன் கருத்தாகும்.
அதற்கு மந்திரமும் கிரியையும் பாவனையும் வேண்டப்படும். மந்திரமும் முத்திரையும் கிரியையின் கருத்து இது என்பதை விளக்கும். ஒவ்வொருகிரியையிலும் எய்தற்பாலனவாகி யபலன் இவை என்பதை மனதால் நினைப்பது பாவனையாகும்.
ஆகையால் மனம், வாக்கு, காயமென்னும் மூன்றும் ஒருமித்து மெய்யன்போடு கிரியை செய்தல் வேண்டும். அவை வெவ்
வேறு வழிப்பட அன்பின்றிச் செய்யுங் கிரியையாற் பயனிலவாம்.
“கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
திருமுறை 5, பதிகம் 99 பொது, பாடல் எண் : 9 : திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம்.
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.”
if one has no love towards Araṉ, even if one bathes plunging into crores of holy waters with intention.
it is like the foolish act of the obstinate person who pours water that has the nature of flowing, into a pot of holes and keeping it safe by covering it with a lid.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
சிவபூசை விளக்கம்(1928)
என்னும் நூலில் அச்சுவேலி ச.குமாரசுவாமிக் குருக்கள்.