The Significance of Śiva Bhakti and Śiva Pūjā in Kali Yuga for Spiritual Growth


TaHiEnFrEs

மஹா இதிகாசமாகிய சிவரகசியம் – நாற்பத்திரண்டாம் அத்தியாயத்தில் இருந்து…

நந்திதேவர் சாம்பவரை அறிவித்தது.

சிவபூஜையின் மேன்மையை வசிட்டர் கூறியதைக்கேட்ட அரசன் ஒருவன் அகமகிழ்ந்து சம்சார சுகத்தைத் துச்சமென்று தள்ளிச் சிவபூசையில் விருப்புறறவனாய் ராஜ்யபாலனம் அதற்கு இடையூறாகுமென்று கண்டு தனது மூத்தபுதல்வனுக்கு ராஜ்ய பாரத்தைக் கொடுத்து அவனைச் சிவார்ச்சனையை விடாமற் செய்து வரும்படிப் போதித்து ஏராளமாய்த்தனத்தை உதவிச் சாம்பவர்களையு மாராதித்து விபூதி ருத்திராக்ஷ தாரணங்களில் ஓர் கணமேனும் வழுவாதிருந்து தீக்ஷைபெற்றுச் சிவபூசை செய்து சிவத்யான பராயணனாய்க் காலங்கழித்து நற்கதியடைந்தான்.

அப்படியே நீரும் சிவபூஜாபரராயிருந்து சாம்பவர்களோடு சகவாசஞ் செய்து சிவலிங்கத்தைப் பூசித்துக்கொண்டிரும். சிவபூசை செய்யாமல் மஹாஐஸ்வர்யத்தை யடைந்து சுகித்தவர் யாருமில்லை. சங்கரானுக் கிரகத்தினாலேயே சகல பாக்யங்களும் பெறப்படுவனவாம். சிவபூஜையின்றிப் பாக்ய மெங்கனம்வரும்? இனி அச்சிவபூஜைக்கு வேண்டிய சௌகரியமும் மஹா பாக்யவான்களுக்கே கிடைக்கும் சிவார்ச்சனைக்கு உபயோகப்படாத பாக்யங்களைத் துர்ப்பாக்கியங்களென்றே யறிய வேண்டும். பாக்ய மிருந்தால் வாணாள் முழுதும் சிவார்ச்சனையில் வழுவாதிருக்கப் பெறலாகும். அவனது ஆயுளே சபலமாகும். . இப்போது சாம்பவர்களைச் சிரத்தை யுடன் பூசித்தாதரிப்பின் சம்புவினருளுக்காளாகலாமென்று நாரதர் கூறியருள அதனைக் கேட்டு மிக்க மகிழ்ந்து சாம்பவ முனிவர்களைப் பூசித்துக்கொண்டு சிவார்ச்சனாபரரானாரென்று நந்திகேஸ்வரர் கூற மஹாபுண்யமாகிய அச்சரிதத்தைப் பிரம்மாமுதலிய சகலருங்கேட்டுச் சந்தோஷத்தால் மயிர் சிலிர்த்துப் பரவசராய்நின்று நந்தியெம்பெருமானை வணங்கி, ஓ ஸ்வாமி! இப்போது நாங்கள் இங்கு செய்யவேண்டிய காரியமென்ன? அந்த ரகசியத்தைக் கூறியருள வேண்டுமென்று பிரார்த்தித்தனர். அப்போது நந்தீஸ்வரர் பிரம்மாதிகளைப் பார்த்துக் தேவர்களே! எவரெவர் கூறியதாவது, பரமசாம்பவர்களாயெப்போதுஞ் சிவார்ச்சனை செய்வதிலேயே பேராவலுடையோரா யிருக்கின்றனரோ மிக்க கோரமாகிய கலியுகத்தில் சித்த சுத்தத்துடன் எவர் சிவசரணாரவிந்தத்தை விட்டகலாத மனமுடையோராய்ச் சிவோபாசனையோடும், “ஸ்ரீ நீலகண்டமதனாந்தக சந்திரமௌளே ஸ்ரீ பாலலோசன யமாந்தக விஸ்வமூர்த்தே.” அடியேனை ரக்ஷியுங்களென்று எவர் ஓர் தடவையாவது பக்தியுடன் கூறுகின்றனரோ அவர்களும் உங்களுக்குப் பூஜ்யராவார்.

இதுவே பரமரகஸ்யம்.