Bhū-Parīkṣā-Prakaraṇam : Classification and Examination of Land for Agamic Construction


TaHiEnFrEs

|| சைவாகமத்தில் பூமி பரிசோதனை ||

முதலில் ஆச்சாரியன் பூமியை சுவை, வாசனை, நிறம், மண், நீர் முதலியவைகளாலும், சகுனத்தாலும் பரிசீலிக்கவேண்டும்.

காமிகம் பூபரீக்ஷா படலம்

பூமியை அதன் தன்மையைக் கொண்டு, சைவம், பிராம்மம், வைஷ்ணவம், ஐந்திரம், ஔக்ஷம், பௌதிகம், ஆஸுரம், பைசாசம், ராக்ஷஸம், வாயவ்யம், வாருணம், ஆக்நேயம் என்று பன்னிரண்டு விதமாகக் கூறி அவைகளின் லக்ஷணத்தையும் கூறுகின்றது.

ஆசாரியன் கீழ் வரும் லக்ஷணங்களைக் கொண்டு பூமியின் பேதத்தை அறிந்து கொள்ளவேண்டும்.

  1. சைவீபூமி: கொங்குமரம், மருது, அரசு, விளா, அசோகம், ஆச்சாமரம், நிலத்தாமரை, துளசி, அருகு, விஷ்ணுகிராந்தி, இலவம், மலைநன்னாரி, புறா, கிளி, அன்னப்பறவை இவைகளால் சூழப்பட்டது “சைவீ” பூமியாகும். இது சுபத்தைக் கொடுக்கும்.
  2. பிராம்மீபூமி: பில்வம், பொரசு, தர்ப்பை, நாணல், மான்கள், வாசனை உள்ள ஹோமப் பொருட்கள் இவைகள் உள்ளது “பிராம்மி” பூமியாகும். இது நன்மையைக் கொடுக்கும்.
  3. வைஷ்ணவீபூமி: தும்பை, புளியமரம், புங்கமரம், மூங்கில், பருத்தி, எருக்கு, செம்பருத்தி, அன்னப் பறவை, மேலும் பறவைகள், மிருகங்கள், முட்களில்லாத மரங்கள் இவைகளோடு கூடியது “வைஷ்ணவீ” பூமியாகும். இது பராக்ரமத்தையும், வீரத்தன்மையையும் அளிக்கக்கூடியது.
  4. ஐந்த்ரீபூமி: வாழை, பலா, மா, சரக்கொன்றை, மகிழம், பாதிரி, சிந்துவாரம், நெல்லி, நீலோத் பலம் இவை உள்ளதும், மூன்றாவது நான்காவது வர்ணத்தார்கள் நிறைந்ததும், பாதிரி அகில் வாசனை உள்ளதுமான பூமி “ஐந்த்ரீ” பூமி ஆகும். இது செல்வப் பெருக்கை அளிக்கும்.
  5. ஔக்ஷீபூமி: அழிஞ்சல் மரம் துஷ்டர்கள் அல்லது ஏமாற்றுபவர்கள், மந்தார மரங்கள், கீரி, முயல், உடும்பு, சகோரப் பறவை இவைகளால் சூழப்பட்ட பூமி “ஔக்ஷி” யாகும். இது பராக்கிரமத்தையும், வீரத்தன்மையையும் கொடுப்பதோடு மக்கள் செல்வத்தையும் அளிக்கும்.
  6. பௌதிகீபூமி: பெருநொச்சில், முல்லை, அருகு, அழிஞ்சல், கிம்சுகம், மல்லிகை, அலரி, இலுப்பை இவைகளால் சூழப்பட்டு விபூதி வாசனை உள்ளது “பௌதிகீ” பூமியாகும். இது மனிதர்களுக்கு உணவையும், புஷ்டியையும் கொடுக்கும்.
  7. ஆஸுரீபூமி: செரா மரங்கள் இன்னும் பெரிய மரங்கள், கொடிய பிராணிகள், வெங்காயம், வேடர்கள், துஷ்டர்கள், கழுகு, கோழி, பாம்பு, கடுக்காய் வாசனை இவைகளோடு கூடியது “ஆஸுரீ” பூமியாகும். இது யுத்தத்தைக் கொடுக்கக் கூடியது.
  8. பைசாசீபூமி: இலவமரம், மகிழமரம், தான்றிமரம், நறுவிலி மரம், கழுதை, ஒட்டகம், பன்றி, நரி வேடர்கள், கெட்டவாசனை உள்ளது “பைசாசி” பூமியாகும். இது அழிவை அளிக்கக் கூடியது.
  9. ராக்ஷஸீபூமி: சண்டாளர், விஷம், திருடர், ரோமங்கள் உள்ளதும், மிளகு, வெல்லம் இவைகளின் வாசனை நிறைந்ததுமான பூமி “ராக்ஷஸீ” என்று சொல்லப்படுகிறது. இது அழிவைக் கொடுக்கும்.
  10. வாயவ்யாபூமி: நரிக்கூட்டங்களோடு கூடியதும், சுவர்க்கோழி உள்ளதும், சிறிய சிறிய கற்களோடு கூடியதுமான பூமி “வாயவ்யா” மாகும். இது துக்கத்தையும் ஏழ்மையையும் கொடுக்கக் கூடியது.
  11. வாருணீபூமி: பாக்கு மரங்களால் சூழப்பட்ட பூமி “வாருணீ” பூமியாகும். இது எல்லா காரிய சித்திகளையும் அளிக்கும்.
  12. ஆக்நேயீபூமி: கள்ளி நிறைந்ததும், மோசமான கற்களை உடையதும், விளையாத பூமியாயும், தண்ணீர் இல்லாததாயும் உள்ளது ஆக்நேய பூமியாகும். இது அழிவைக் கொடுக்கும்.

சிவத்தன்மை பொருந்திய பூமி ‘சைவீ’ என்றும், விஷ்ணு சம்பந்தமுள்ளது ‘வைஷ்ணவீ’ என்றும், பிரும்மா சம்பந்தமுள்ளது ‘பிராம்மி’ என்றும் சொல்லப்படுகிறது. சைவி பூமி பிராம்மணர் முதலானோருக்குச் சிறந்தது. சைவி, பிராம்மி, வைஷ்ணவீ இவை பிராமணர்களுக்கு விசேஷமாகச் சிறந்தது. ஔக்ஷி அரசர்களுக்கும், வைச்யர்களுக்கும் சிறந்தது. பௌதிகி மற்றவர்களுக்குச் சிறந்தது என்று கூறப்படுகிறது. வாருணி பூமி எல்லோருக்கும் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது.

பைசாசி, ஆஸுரி, ராக்ஷஸீ இவை பல தடவை உழுது, பசுக்களைத் தங்க வைத்து ஒரு வருஷத்திற்குமேல் கிரகிக்கத்தக்கவை என்று கூறுவதைக் காணலாம்.

— சைவகாலவிவேகம் என்னும் நூலில் இருந்து.


English IAST Transliteration

|| Śaivāgamattil Bhūmi Parīkṣaṉai ||

Mudaliā Ācāriyaṉ bhūmiyai suvai, vāsaṉai, niṟam, maṇ, nīr mudaliyavaigaḷālum, saguṇattālum parīśīlikkaveṇṭum.

Kāmikam Bhūparīkṣā Paṭalam

Bhūmiyai adhaṉ thaṉmaiyaik koṇṭu, Śaivam, Birāmmam, Vaiṣṇavam, Ainthiram, Oukṣam, Bouthikam, Āsuram, Paisāsam, Rākṣasam, Vāyavyam, Vāruṇam, Ākṉeyam eṉṟu paṉṉiraṇṭu vidhamāgak kūṟi avaigaḷiṉ lakṣaṇathaiyum kūṟugiṉṟadhu.

Ācāriyaṉ kīḻ varum lakṣaṇaṅkaḷaik koṇṭu bhūmiyiṉ pēdhathaik koṇṭu aṟintu koḷḷaveṇṭum.

  1. Śaivī Bhūmi: Koṅgumarām, maruthu, arasu, viḷā, asōkam, āccāmarām, nilathāmarai, tuḷasi, arugu, viṣṇukirānti, ilavam, malaiṉaṉṉāri, puṟā, kiḷi, aṉṉappaṟavai ivaigaḷāl cūḻappaṭṭatu “Śaivī” bhūmiyāgum. Ithu śubathaik koṭukkum.
  2. Birāmmī Bhūmi: Bilvam, porasu, tarppai, nāṇal, māṉkaḷ, vāsaṉai uḷḷa hōmap poruṭkaḷ ivaigaḷ uḷḷatu “Birāmmī” bhūmiyāgum. Ithu naṉmaiyaik koṭukkum.
  3. Vaiṣṇavī Bhūmi: Tumpai, puḷiyamarām, puṅgamarām, mūṅgil, parutti, erukku, cempaparutti, aṉṉap paṟavai, mēlum paṟavaigaḷ, mirugaṅkaḷ, muṭkaḷillāta marāṅkaḷ ivaigaḷōṭu kūṭiyatu “Vaiṣṇavī” bhūmiyāgum. Ithu parākkiramathaiyum, vīrathaṉmaiyaiyum aḷikkakkūṭiyatu.
  4. Ainthirī Bhūmi: Vāḻai, palā, mā, carakkoṉṟai, makiḻam, pāthiri, cinthuvāram, nelli, nīlōtpalam ivai uḷḷatum, mūṉṟāvatu nāṉkāvatu varṇattārkaḷ niṟaiñcatum, pāthiri akil vāsaṉai uḷḷatumāṉa bhūmi “Ainthirī” bhūmi āgum. Ithu celvap perukkai aḷikkum.
  5. Oukṣī Bhūmi: Aḻiñcal marām tuṣṭarkaḷ allatu ēmāṟṟupavarkaḷ, mantāra marāṅkaḷ, kīri, muyal, uṭumpu, cakōrap paṟavai ivaigaḷāl cūḻappaṭṭa bhūmi “Oukṣī” yāgum. Ithu parākkiramathaiyum, vīrathaṉmaiyaiyum koṭuppatōṭu makkaḷ celvathaiyum aḷikkum.
  6. Bouthikī Bhūmi: Perunoccil, mullai, arugu, aḻiñcal, kimcukam, mallikai, alari, iluppai ivaigaḷāl cūḻappaṭṭu vibhūti vāsaṉai uḷḷatu “Bouthikī” bhūmiyāgum. Ithu maṉitharkaḷukku uṇavaiyum, puṣṭiyaiyum koṭukkum.
  7. Āsurī Bhūmi: Cerā marāṅkaḷ iṉṉum periya marāṅkaḷ, koṭiya pirāṇigaḷ, veṅkāyam, vēṭarkaḷ, tuṣṭarkaḷ, kaḻugu, kōḻi, pāmpu, kaṭukkāy vāsaṉai ivaigaḷōṭu kūṭiyatu “Āsurī” bhūmiyāgum. Ithu yuthathaik koṭukkak kūṭiyatu.
  8. Paisācī Bhūmi: Ilavamarām, makiḻamarām, tāṉṟimarām, naṟuvili marām, kaḻuthai, oṭṭagam, paṉṟi, nari vēṭarkaḷ, keṭṭavāsaṉai uḷḷatu “Paisācī” bhūmiyāgum. Ithu aḻivai aḷikkak kūṭiyatu.
  9. Rākṣasī Bhūmi: Caṇṭāḷar, viṣam, tiruṭar, rōmaṅkaḷ uḷḷatum, miḷagu, vellam ivaigaḷiṉ vāsaṉai niṟaiñcatumāṉa bhūmi “Rākṣasī” eṉṟu collappaṭukiṟatu. Ithu aḻivaik koṭukkum.
  10. Vāyavyā Bhūmi: Narikkūṭṭaṅkaḷōṭu kūṭiyatum, cuvarkkōḻi uḷḷatum, ciṟiya ciṟiya kaṟkaḷōṭu kūṭiyatumāṉa bhūmi “Vāyavyā” māgum. Ithu dukkathaiyum ēḻmaiyaiyum koṭukkak kūṭiyatu.
  11. Vāruṇī Bhūmi: Pākku marāṅkaḷāl cūḻappaṭṭa bhūmi “Vāruṇī” bhūmiyāgum. Ithu ellā kāriya siddhikaḷaiyum aḷikkum.
  12. Ākṉeyī Bhūmi: Kaḷḷi niṟaiñcatum, mōsamāṉa kaṟkaḷai uṭaiyatum, viḷaiyāta bhūmiyāyum, taṇṇīr illātatāyum uḷḷatu Ākṉeya bhūmiyāgum. Ithu aḻivaik koṭukkum.

Śaivathhaṉmai porunthiya bhūmi ‘Śaivī’ eṉṟum, Viṣṇu cambanthamuḷḷatu ‘Vaiṣṇavī’ eṉṟum, Pirummā cambanthamuḷḷatu ‘Birāmmī’ eṉṟum collappaṭukiṟatu. Śaivi bhūmi Birāmmaṇar mudaliyōrukkuś ciṟantatu. Śaivi, Birāmmī, Vaiṣṇavī ivai Pirāmaṇarkaḷukku vicēṣamāgaś ciṟantatu. Oukṣi arasarkaḷukkum, Vaiśyarkaḷukkum ciṟantatu. Bouthiki maṟṟavarkaḷukkuś ciṟantatu eṉṟu kūṟappaṭukiṟatu. Vāruṇi bhūmi ellōrukkum ciṟantatāgaś collappaṭukiṟatu.

Paisāci, Āsuri, Rākṣasī ivai pala taṭavai uḻutu, pasukkaḷai thaṅka vaittu oru varuṣattiṟkumēl kiragikkathakkavai eṉṟu kūṟuvathaik kāṇalām.

Śaivakāla Vivekam eṉṉum nūlil iruntu.


கலைச்சொல்லகராதி / அருஞ்சொற்பொருள்

  • பூபரீக்ஷா (Bhūparīkṣā) – நிலத்தின் தன்மைகளையும் தகுதிகளையும் ஆகம வழியில் பரிசோதித்தல்.
  • காமிகாகமம் (Kāmikāgama) – 28 சிவாகமங்களில் முதலாவதும் முக்கியமானதுமான மூல ஆகமம்.
  • காரியசித்தி (Kāriya Siddhi) – மேகொள்ளும் அனைத்துச் செயல்களிலும் பெறப்படும் முழுமையான வெற்றி.
  • சுபலக்ஷணம் (Śuba Lakṣaṇam) – மங்கலத்தையும் நன்மையையும் அளிக்கும் நற்குறிகள்.

|| शैवागम में भूमि परीक्षण ||

सर्वप्रथम आचार्य को भूमि का परीक्षण उसके स्वाद, गंध, रंग, मिट्टी, जल और शकुन (शुभ-अशुभ संकेतों) के आधार पर करना चाहिए।

कामिक आगम — भूपरीक्षा पटलम

आगम भूमि को उसके स्वभाव और लक्षणों के आधार पर बारह प्रकारों में विभाजित करता है: शैव, ब्राह्म, वैष्णव, ऐंद्र, औक्ष, भौतिक, आसुर, पैशाच, राक्षस, वायव्य, वारुण, और आग्नेय।

आचार्य को निम्नलिखित लक्षणों द्वारा भूमि के भेदों को पहचानना चाहिए:

  1. शैवीभूमि: कोंरई, मरुदु, पीपल, कैथ, अशोक, आच्छा वृक्ष, भू-कमल, तुलसी, दूर्वा, विष्णुक्रांति, सेमल, कपोत (कबूतर), तोता और हंसों से घिरी भूमि “शैवी” कहलाती है। यह शुभता प्रदान करती है।
  2. ब्राह्मीभूमि: बिल्व, ढाक, दर्भ घास, कांस, हिरण और सुगंधित यज्ञ सामग्रियों से युक्त भूमि “ब्राह्मी” कहलाती है। यह कल्याण प्रदान करती है।
  3. वैष्णवीभूमि: द्रोणपुष्पी, इमली, करंज, बाँस, कपास, मदार, गुड़हल, हंस, पक्षी, पशु और बिना काँटे वाले वृक्षों से युक्त भूमि “वैष्णवी” कहलाती है। यह पराक्रम और वीरता प्रदान करती है।
  4. ऐंद्रीभूमि: केला, कटहल, आम, अमलतास, मौलसिरी, पाढ़ल, निर्गुंडी, आँवला, नीलकमल से युक्त तथा पाढ़ल व अगरु की गंध वाली भूमि “ऐंद्री” कहलाती है। यह धन-समृद्धि प्रदान करती है।
  5. औक्षीभूमि: अकोल वृक्ष, मन्दार, नेवला, खरगोश, गोह और चकोर पक्षियों से घिरी भूमि “औक्षी” कहलाती है। यह पराक्रम, वीरता और वंश वृद्धि प्रदान करती है।
  6. भौतिकीभूमि: निर्गुंडी, चमेली, दूर्वा, अकोल, पलाश, कनेर और महुआ से घिरी तथा भस्म (विभूति) की गंध वाली भूमि “भौतिकी” कहलाती है। यह अन्न और पुष्टि प्रदान करती है।
  7. आसुरीभूमि: विषैले व बड़े वृक्ष, हिंसक पशु, प्याज, व्याध (शिकारी), चील, मुर्गा, सांप और हरड़ की गंध वाली भूमि “आसुरी” कहलाती है। यह युद्ध और कलह का कारण बनती है।
  8. पैशाचीभूमि: सेमल, मौलसिरी, बहेड़ा, गधा, ऊंट, सूअर, लोमड़ी और दुर्गंध युक्त भूमि “पैशाची” कहलाती है। यह विनाश लाती है।
  9. राक्षसीभूमि: विष, चोर, बाल/रोम, तथा काली मिर्च और गुड़ की गंध वाली भूमि “राक्षसी” कहलाती है। यह सर्वनाश करती है।
  10. वायव्याभूमि: सियार के झुंड, झींगुर और छोटे-छोटे कंकड़-पत्थरों से युक्त भूमि “वायव्या” कहलाती है। यह दुख और दरिद्रता देती है।
  11. वारुणीभूमि: सुपारी के वृक्षों से घिरी भूमि “वारुणी” कहलाती है। यह सभी कार्यों में सफलता (कार्यसिद्धि) प्रदान करती है।
  12. आग्नेयीभूमि: नागफनी/कांटेदार झाड़ियों से भरी, नुकीले पत्थरों वाली, बंजर और जलहीन भूमि “आग्नेयी” कहलाती है। यह विनाशकारी होती है।

शिव-तत्त्व से युक्त भूमि ‘शैवी’, विष्णु-तत्त्व से युक्त ‘वैष्णवी’ और ब्रह्मा से संबंधित भूमि ‘ब्राह्मी’ कहलाती है। शैवी, ब्राह्मी और वैष्णवी भूमियाँ ब्राह्मणों के लिए विशेष श्रेष्ठ हैं। औक्षी भूमि क्षत्रियों और वैश्यों के लिए तथा भौतिकी भूमि अन्य वर्गों के लिए उत्तम कही गई है। वारुणी भूमि सभी के लिए अत्यंत श्रेष्ठ मानी गई है।

पैशाची, आसुरी और राक्षसी भूमियों को अनेक बार जोतकर, एक वर्ष से अधिक समय तक गायों को बांधकर/चराकर शुद्ध करने के बाद ही ग्रहण किया जा सकता है।

— शैवकालविवेकम् ग्रंथ से उद्धृत।


शब्दावली

  • भूपरीक्षा (Bhūparīkṣā) – भूमि की गुणवत्ता और उपयुक्तता का आगमिक परीक्षण।
  • कामिकागम (Kāmikāgama) – २८ मूलागमों में से प्रथम एवं मुख्य आगम ग्रंथ।
  • कार्यसिद्धि (Kāryasiddhi) – सभी संकल्पित कार्यों में पूर्ण सफलता की प्राप्ति।
  • शुभलक्षण (Śubha Lakṣaṇa) – कल्याण और मंगल का प्रतीक गुण या चिह्न।

|| Examination of Land in Saiva Agamas ||

First, the Acharya must examine the land through taste, smell, color, soil texture, water quality, and omens.

Kamika Agama — Bhu Pariksha Padalam

The Agama classifies land into twelve distinct types based on its inherent characteristics and symptoms: Saiva, Brahma, Vaishnava, Aindra, Auksha, Bhauthika, Asura, Paisacha, Rakshasa, Vayavya, Varuna, and Agneya.

The Acharya should identify the variations of land through the following attributes:

  1. Saivi Land: Surrounded by Konrai, Maruthu, Sacred Fig (Arasu), Wood Apple, Ashoka, Acca trees, Land Lotus, Tulasi, Arugu grass, Vishnukranthi, Silk Cotton, Mountain Sarsaparilla, and inhabited by doves, parrots, and swans. This land bestows auspiciousness (Subham).
  2. Brahmi Land: Featuring Bilva, Flame of the Forest (Porasu), Darbha grass, reeds, deer, and aromatic sacrificial materials. It bestows welfare and goodness.
  3. Vaishnavi Land: Abundant in Thumbai, Tamarind, Punga, Bamboo, Cotton, Calotropis, Hibiscus, swans, various birds, animals, and thornless trees. It bestows valor and heroism.
  4. Aindri Land: Rich in Banana, Jackfruit, Mango, Golden Shower (Konrai), Magizham, Pathiri, Chaste tree, Gooseberry, Blue Water Lily, inhabited by diverse communities, and carrying the fragrance of Pathiri and Agarwood. It grants immense wealth and prosperity.
  5. Aukshi Land: Surrounded by Alinjil trees, Mandara trees, mongooses, rabbits, monitor lizards, and Chakora birds. It grants valor, heroism, and progeny.
  6. Bhauthiki Land: Surrounded by Chaste trees, Jasmine, Arugu grass, Alinjil, Flame of the Forest, Oleander, and Mahua, bearing the fragrance of Sacred Ash (Vibhuti). It provides food and nourishment.
  7. Asuri Land: Characterized by Cera trees, massive ancient trees, fierce animals, wild onions, hunters, eagles, roosters, snakes, and the scent of Myrobalan. It causes conflict and war.
  8. Paisachi Land: Featuring Silk Cotton, Magizham, Belleric Myrobalan, donkeys, camels, wild boars, foxes, and foul odors. It causes destruction.
  9. Rakshasi Land: Marked by poison, thieves, stray animal hair, and smelling of black pepper and jaggery. It brings total ruin.
  10. Vayavya Land: Inhabited by packs of jackals, crickets, and filled with small pebbles. It brings sorrow and poverty.
  11. Varuni Land: Surrounded by Betel Nut (Areca) palms. It grants success in all endeavors (Karya Siddhi).
  12. Agneyi Land: Filled with cacti/thorny bushes, jagged rocks, barren soil, and lacking water. It brings destruction.

Land imbued with Śiva-tattva is called ‘Saivi’, that associated with Viṣṇu is ‘Vaishnavi’, and that linked to Brahmā is ‘Brahmi’. Saivi, Brahmi, and Vaishnavi lands are exceptionally suited for Brahmins. Aukshi land is best for rulers (Kshatriyas) and merchants (Vaishyas), while Bhauthiki land is suitable for others. Varuni land is universally auspicious for all.

Inauspicious lands (Paisachi, Asuri, Rakshasi) must be repeatedly plowed and purified by keeping cattle grazing on them for over a year before they can be accepted.

— Excerpted from Saiva Kala Vivekam.


Glossary

  • Bhu Pariksha – The Agamic examination of land suitability and qualitative attributes.
  • Kamikagama – The primary and foremost treatise among the 28 Mūlāgamas.
  • Karya Siddhi – Complete fruition and accomplishment of all undertaken endeavors.
  • Subha Lakshana – Auspicious signs and favorable qualitative characteristics.

|| Examen de la Terre dans les Saiva Agamas ||

Tout d’abord, l’Acharya doit examiner la terre à travers le goût, l’odeur, la couleur, la texture du sol, la qualité de l’eau et les présages.

Kamika Agama — Bhu Pariksha Padalam

L’Agama classe la terre en douze types distincts en fonction de ses caractéristiques inhérentes : Saiva, Brahma, Vaishnava, Aindra, Auksha, Bhauthika, Asura, Paisacha, Rakshasa, Vayavya, Varuna et Agneya.

L’Acharya doit identifier la nature du terrain selon les signes suivants :

  1. Terre Saivi : Entourée d’arbres Konrai, Maruthu, Figuier sacré, Pomme de bois, Ashoka, Loto terrestre, Tulasi, herbe Arugu, colombes, perroquets et cygnes. Elle apporte la prospérité et le bien-être (Subham).
  2. Terre Brahmi : Caractérisée par le Bilva, l’herbe Darbha, des roseaux, des cerfs et des substances aromatiques de sacrifice. Elle apporte le bienfaits.
  3. Terre Vaishnavi : Abondante en Tamarinier, Bambou, Coton, Hibiscus, cygnes et arbres sans épines. Elle confère le courage et la valeur.
  4. Terre Aindri : Riche en Bananiers, Jacquiers, Manguiers, Lys d’eau bleus, et exhalant le parfum du bois d’Agle. Elle apporte une grande richesse.
  5. Terre Aukshi : Entourée d’arbres Alinjil, Mandara, de mangoustes, lapins et oiseaux Chakora. Elle donne la vaillance et une descendance prospère.
  6. Terre Bhauthiki : Entourée de Jasmin, herbe Arugu, Laurier-rose et exhalant la senteur de la Cendre Sacrée (Vibhuti). Elle donne la nourriture et la santé.
  7. Terre Asuri : Marquée par de grands arbres toxiques, des animaux feroces, des aigles, des serpents et l’odeur du Myrobolan. Elle engendre les conflits et la guerre.
  8. Terre Paisachi : Comprenant des ânes, chameaux, sangliers, renards et de mauvaises odeurs. Elle apporte la destruction.
  9. Terre Rakshasi : Contenant du poison, des poils d’animaux et de fortes odeurs de poivre noir et de mélasse. Elle cause la ruine totale.
  10. Terre Vayavya : Remplie de chacals, de grillons et de petits cailloux. Elle apporte le chagrin et la pauvreté.
  11. Terre Varuni : Entourée de palmiers à noix d’Arec. Elle accorde le succès dans toutes les entreprises (Karya Siddhi).
  12. Terre Agneyi : Remplie de cactus, de roches arides et manquant d’eau. Elle est destructrice.

La terre imprégnée de Śiva-tattva est dite ‘Saivi’, celle associée à Viṣṇu est ‘Vaishnavi’, et celle liée à Brahmā est ‘Brahmi’. Les terres Saivi, Brahmi et Vaishnavi sont particulièrement favorables. La terre Varuni est universellement propice à tous.

Les terres néfastes (Paisachi, Asuri, Rakshasi) doivent être labourées à plusieurs reprises et purifiées en y faisant paître du bétail pendant plus d’un an avant de pouvoir être utilisées.

— Extrait du Saiva Kala Vivekam.


Glossaire

  • Bhu Pariksha – L’examen agamique de la qualité et de la viabilité des sols.
  • Kamikagama – Le premier et le plus important traité parmi les 28 Mūlāgamas.
  • Karya Siddhi – L’accomplissement parfait et le succès de tous les projets.
  • Subha Lakshana – Signes de bon augure et caractéristiques favorables.

|| Examen de la Tierra en los Saiva Agamas ||

En primer lugar, el Acharya debe examinar la tierra a través del gusto, el olor, el color, la textura del suelo, la calidad del agua y los presagios.

Kamika Agama — Bhu Pariksha Padalam

El Agama clasifica la tierra en doce tipos distintos según sus características inherentes: Saiva, Brahma, Vaishnava, Aindra, Auksha, Bhauthika, Asura, Paisacha, Rakshasa, Vayavya, Varuna y Agneya.

El Acharya debe reconocer las diferencias del terreno según los siguientes atributos:

  1. Tierra Saivi: Rodeada de árboles Konrai, Maruthu, Higuera sagrada, Ashoka, Loto terrestre, Tulasi, hierba Arugu, palomas, loros y cisnes. Otorga auspiciosidad y bienestar (Subham).
  2. Tierra Brahmi: Caracterizada por Bilva, hierba Darbha, cañas, ciervos y materiales aromáticos para sacrificios. Otorga bienestar.
  3. Tierra Vaishnavi: Con abundantes tamarindos, bambú, algodón, hibisco, cisnes y árboles sin espinas. Concede valor y valentía.
  4. Tierra Aindri: Rica en plátanos, mangos, jazmines, lirios de agua azules y aroma a madera de áloe. Concede gran riqueza y prosperidad.
  5. Tierra Aukshi: Rodeada de árboles Alinjil, Mandara, mangostas, conejos y aves Chakora. Concede valor y descendencia.
  6. Tierra Bhauthiki: Rodeada de jazmín, adelfa y con la fragancia de la Ceniza Sagrada (Vibhuti). Concede alimento y nutrición.
  7. Tierra Asuri: Con árboles gigantescos, animales feroces, cazadores, águilas, serpientes y olor a mirobálanos. Causa guerras y conflictos.
  8. Tierra Paisachi: Con asnos, camellos, jabalíes, zorros y malos olores. Trae destrucción.
  9. Tierra Rakshasi: Marcada por veneno, pelos de animales y aroma a pimienta negra y panela. Provoca la ruina total.
  10. Tierra Vayavya: Habitada por manadas de chacales, grillos y piedras pequeñas. Aporta tristeza y pobreza.
  11. Tierra Varuni: Rodeada de palmeras de areca. Concede el éxito en todas las empresas (Karya Siddhi).
  12. Tierra Agneyi: Con cactus, rocas afiladas, suelo estéril y falta de agua. Es destructiva.

La tierra con Śiva-tattva se llama ‘Saivi’, la vinculada a Viṣṇu es ‘Vaishnavi’ y la de Brahmā es ‘Brahmi’. Las tierras Saivi, Brahmi y Vaishnavi son especialmente excelentes. La tierra Varuni es universalmente favorable para todos.

Las tierras desfavorables (Paisachi, Asuri, Rakshasi) deben ararse repetidamente y purificarse dejando pastar ganado en ellas durante más de un año antes de poder ser aceptadas.

— Extracto del Saiva Kala Vivekam.


Glosario

  • Bhu Pariksha – El examen agámico de la calidad y viabilidad de la tierra.
  • Kamikagama – El primer y principal tratado entre los 28 Mūlāgamas.
  • Karya Siddhi – La plena consecución y éxito de todos los proyectos iniciados.
  • Subha Lakshana – Signos auspiciosos y atributos cualitativos favorables.

/