Pati-Guṇa-Prakaraṇam : The Eightfold Divine Attributes of Siva in Saiva Siddhantha


TaHiEnFrEs

|| பதியின் குணங்கள் ||

இறைவனுக்கு எண்குணங்களைச் சிவாகமங்கள் கூறும்.

  1. தன்வயத்தனாதல்
  2. தூய உடம்பினனாதல்
  3. இயற்கை உணர்வினனாதல்
  4. முற்றுணர்வினனாதல்
  5. இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனாதல்
  6. பேரருள் உடையவனாதல்
  7. முடிவிலாற்றலுடைமை
  8. வரம்பிலின்பமுடைமை

இக்குணங்களைப் பின்வருமாறு விளக்கிக் கூறுவர்:

1. தன்வயத்தனனாதல்

சுதந்திரமுடையவன் எனப் பொருள். தான் பிறருக்கு அடிமையாக இருக்காது, பிறரைத் தன் ஆணைவழி நின்று தன் ஏவலுக்கேற்ப அதிகாரம் நடத்தும் பண்புடைமை.

2. தூயஉடம்புடைமை

உயிரின் இருப்பை உடலின் இயக்கத்தால் அறிவது போல இறைவனின் இருப்பை அவனது அருளால் அறிகின்றோம். ஆணவம் என்னும் குற்றத்தால் சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய உயிர்களின் மாயாகாரிய வடிவம் போல் அல்லாது, இப்படிப்பட்ட இயல்புடையதென்று உரைக்க இயலாத அருளே திருமேனியுடையவனாதல்.

3. இயற்கைஉணர்வினனாதல்

கருவி கரணங்களின் துணைகொண்டு கற்றல், கேட்டல், சிந்தித்தல் போன்ற ஆன்மாக்களின் அறிவு போலல்லாது, தன்னியல்பால் அறிவே உருவாய்ப் பிரகாசித்தல்.

4. முற்றுணர்வினனாதல்

அறிவு செயற்கையாக இல்லாமல் இயற்கையாகவே விளங்கினும் ஒரு காலத்தில் ஒன்றையே அறியும் சிற்றறிவாயிடின் பயனின்றாம், முழுமுதற்பொருள் என்பதற்கேற்ப தன் வியாபகத்துள் கிடக்கும் உயிர்களின் நிலையையும், ஏனைய பொருட்களின் நிலையையும் ஏககாலத்தில் உணர்தல்.

5. இயல்பாகவேபாசங்களில்நீங்கியவனாதல்

தன்னிச்சையாகவே பாசமின்றித் தூயவனாக இருக்கும் தன்மை.

6. பேரருளுடைமை

அறிவுப் பொருட்களான உயிர்த்தொகுதிகள் தங்களைப் பிணித்துள்ள ஆணவத்தால் அறிவு சுருங்க பேரின்பம் துய்க்க இயலாது துன்புறுவது கண்டு அவற்றுக்குப் பாசநீக்கம் செய்து பேரின்பம் துய்ப்பித்தல் வேண்டுமென்று எழும் இரக்கமாகும்.

7. முடிவிலாற்றலுடைமை

அறிவித்தாலன்றித் தாமே அறிய மாட்டாத சீவர்களையும், அசைவித்தாலன்றித் தாமே அசைய மாட்டாத பிரபஞ்சங்களையும் ஒருகாலத்தில் ஒருங்கே அறிவித்தற்பொருட்டும், அசைவித்தற் பொருட்டும் வேண்டப்படுவதாகிய ஒரு பேராற்றலுடையவனாதல்.

8. வரம்பிலின்பமுடைமை

நிரம்பிய பேரின்பமே தன்மையால் உடையவனாதல். இஃது இறைவன் யாதொரு குறையுமில்லாதவன் என்பதை உணர்த்தும்.

உமாபதிசிவம் அவனைக் ‘குணமிலான்’ என்று கூறுகின்றார். அதன் நுட்பம் உணர்தற்குரியது. குணமிலான் என்றது மூலப்பிரகிருதி காரணமாய்‌ உயிர்கட்குரிய இராசதம்‌, தாமதம்‌, சாத்விகம்‌ என்ற மூன்று குணங்களும்‌ இல்லாதவன்‌ என்பதை உணர்த்தும்‌. திருமூலர்‌, “முக்குண நிர்க்குணன்‌ “ என்று கூறுவது இங்குச்‌ சிந்தித்தற்குரியது.

— சைவசித்தாந்தம்கூறும்முப்பொருள்விளக்கம் என்னும் நூலில் இருந்து.


English IAST Transliteration

|| Patiyiṉ Guṇaṅgaḷ ||

Iṟaivaṉukku eṇkuṇaṅkaḷaic Civākamamaṅkaḷ kūṟum.

  1. Tanvayattaṉātāl
  2. Tūya uṭampiṉaṉātāl
  3. Iyarkai uṇarviṉaṉātāl
  4. Muṟṟuṇarviṉaṉātāl
  5. Iyalpākavē pāsaṅkaḷiṉ nīṅkiyavaṉātāl
  6. Pēraruḷ uṭaiyavaṉātāl
  7. Muṭivilāṟṟaluṭaimai
  8. Varampiliṉpamuṭaimai

Ikkuṇaṅkaḷaip piṉvarumāṟu viḷakkik kūṟuvar:

1. Tanvayattaṉaṉātāl

Sutantiramuṭaiyavaṉ eṉap poruḷ. Tāṉ piṟarukku aṭimaiyāka irukkātu, piṟarai ttaṉ āṇaivaḻi niṉṟu taṉ ēvalukkēṟpa atikāram naṭattum paṇpuṭaimai.

2. Tūya uṭampuṭaimai

Uyiriṉ iruppai uṭaliṉ iyakkattāl aṟivatu pōla iṟaivaṉiṉ iruppai avaṉatu aruḷāl aṟikiṉṟōm. Āṇavam eṉṉum kuṟṟattāl ciṟṟaṟivum ciṟu toḻilumuṭaiya uyirkaḷiṉ māyākāriya vaṭivam pōl allātu, ippaṭippaṭṭa iyalpuṭaiyateṉṟu uraikka iyalāta aruḷē tirumēṉiyuṭaiyavaṉātāl.

3. Iyarkai uṇarviṉaṉātāl

Karuvi karaṇaṅkaḷiṉ tuṇaikoṇṭu kaṟṟal, kēṭṭal, cintittal pōṉṟa ātmākkaḷiṉ aṟivu pōlallātu, taṉṉiyalpāl aṟivē uruvāyp pirakāsittal.

4. Muṟṟuṇarviṉaṉātāl

Aṟivu seyarkaiyāka illāmal iyarkaiyāgavē viḷaṅkiṉum oru kālattil oṉṟaiyē aṟiyum ciṟṟaṟivāyiṭiṉ payaṉiṉṟām, muḻumuṭaṟporuḷ eṉpataṟkēṟpa taṉ viyāpakattuḷ kiṭakkum uyirkaḷiṉ nilaiyaiyum, ēṉaiya poruṭkaḷiṉ nilaiyaiyum ēkakālattil uṇartal.

5. Iyalpākavē pāsaṅkaḷil nīṅkiyavaṉātāl

Taṉṉiccaiyākavē pāsaumiṉṟi tūyavaṉāka irukkum taṉmai.

6. Pēraruḷuṭaimai

Aṟivup poruṭkaḷāṉa uyirttokutikaḷ taṅkaḷaip piṇittuḷḷa āṇavattāl aṟivu suruṅka pēriṉpam tuykka iyalātu tuṉpuṟuvatu kaṇṭu avaṟṟukkup pāsanīkkam seythu pēriṉpam tuyppittaḷ vēṇṭumeṉṟu eḻum irakkamāgum.

7. Muṭivilāṟṟaluṭaimai

Aṟivittālaṉṟi tāmē aṟiya māṭṭāta cīvarkaḷaiyum, acaivittālaṉṟi tāmē acaiya māṭṭāta pirapañcaṅkaḷaiyum orukālattil oruṅkē aṟivittaṟporuṭṭum, acaivittaṟ poruṭṭum vēṇṭappatuvatākiya oru pērāṟṟaluṭaiyavaṉātāl.

8. Varampiliṉpamuṭaimai

Nirampiya pēriṉpamē taṉmaiyāl uṭaiyavaṉātāl. Iḥtu iṟaivaṉ yātoru kuṟaiyumillātavaṉ eṉpatai uṇarttum.

Umāpaticivam avaṉai ‘kuṇamilāṉ’ eṉṟu kūṟukiṉṟār. Ataṉ nuṭpam uṇartaṟkuriyatu. Guṇamilāṉ eṉṟatu mūlappirakuruthi kāraṇamāy uyirkaṭkuriya irācatam, tāmatam, cātvikam eṉṟa mūṉṟu kuṇaṅkaḷum illātavaṉ eṉpatai uṇarttum. Tirumūlar, “mukkuṇa nirguṇaṉ” eṉṟu kūṟuvatu iṅkuc cintittaṟkuriyatu.

Śaivasiddhāntam Kūrum Mupporuḷ Viḷakkam eṉṉum nūlil iruntu.


கலைச்சொல்லகராதி / அருஞ்சொற்பொருள்

  • பதி (Pati) – எப்பொருளையும் கட்டுப்படுத்தும் பரம்பொருள் / சிவபெருமான்.
  • எண்குணங்கள் (Aṣṭa-Guṇas) – சிவாகமங்கள் கூறும் இறைவனின் எட்டு தெய்வீக இயல்புகள்.
  • ஆணவம் (Āṇavam) – உயிர்களின் அறிவை மறைக்கும் மூலமலம் (அறியாமை).
  • முக்குணநிர்க்குணன் (Mukkuṇa Nirguṇa) – பிரகிருதியின் முக்குணங்களுக்கும் (சாத்விக, ராஜச, தாமச) அப்பாற்பட்ட தூயவன்.

|| पति के आठ गुण ||

शिवागम ईश्वर के आठ गुणों का वर्णन करते हैं।

  1. तन्वयत्तनादल्
  2. तूय उडंबिननादल्
  3. इयार्कै उणर्विननादल्
  4. मुट्रुणर्विननादल्
  5. इयल्पाहवे पाशंगळिन् नींगियवनादल्
  6. पेररुळ् उडैयवनादल्
  7. मुडिविलाट्रलुडैमै
  8. वरंबिलिंबमुडैमै

इन गुणों की व्याख्या इस प्रकार की जाती है:

1. तन्वयत्तनादल्

इसका अर्थ स्वतंत्र होना है। दूसरों के अधीन न रहकर, दूसरों को अपनी आज्ञा में रखकर अपनी इच्छा के अनुसार शासन करने का गुण।

2. तूयउडंबिननादल्

जैसे शरीर की चेष्टा से आत्मा की उपस्थिति को जाना जाता है, वैसे ही ईश्वर की उपस्थिति को उनकी कृपा से जाना जाता है। आणव नामक दोष के कारण अल्पज्ञता और अल्पक्रिया वाले जीवों के मायावी आकार के समान न होकर, जिसका स्वरूप ऐसा है जिसे व्यक्त नहीं किया जा सकता—केवल कृपा ही जिनका श्रीविग्रह है।

3. इयार्कैउणर्विननादल्

करण और साधनों की सहायता से सीखने, सुनने और चिंतन करने जैसे जीवों के ज्ञान के समान न होकर, अपने सहज स्वभाव से ही ज्ञान रूप होकर प्रकाशित होना।

4. मुट्रुणर्विननादल्

ज्ञान कृत्रिम न होकर प्राकृतिक रूप से विद्यमान होने पर भी, यदि एक समय में केवल एक ही वस्तु को जाने तो वह अल्पज्ञता होगी और उसका कोई लाभ न होगा। अतः परमेश्वर (मूलपुुरुष) होने के नाते अपने व्यापकत्व में स्थित जीवों की स्थिति और अन्य पदार्थों की स्थिति को एक ही समय में जानना।

5. इयल्पाहवेपाशंगळिन्नींगियवनादल्

स्वेच्छा से ही पाश-रहित होकर पवित्र रहने का स्वभाव।

6. पेररुळ्उडैयवनादल्

चेतन स्वरूप जीव अपने को बाँधने वाले आणव मल के कारण ज्ञान संकुचित होने पर परमानंद का उपभोग न कर सकने से दुःखी होते हैं; उन्हें देखकर उनके पाशों का निवारण करके उन्हें परमानंद का उपभोग कराना चाहिए—इस भावना से उत्पन्न होने वाली दया ही परम कृपा है।

7. मुडिविलाट्रलुडैमै

बिना जनाए स्वयं न जान सकने वाले जीवों को और बिना गतिशील किए स्वयं गति न कर सकने वाले संसार को एक ही समय में एक साथ बोध कराने और गतिशील करने के लिए आवश्यक महान शक्ति से संपन्न होना।

8. वरंबिलिंबमुडैमै

अपने स्वभाव से ही परिपूर्ण परमानंद से युक्त होना। यह इस बात का बोध कराता है कि ईश्वर में कोई कमी या न्यूनता नहीं है।

उमापति शिवम् उन्हें गुणमिलान् (गुणहीन) कहते हैं। इसके सूक्ष्म अर्थ को समझना चाहिए। ‘गुणहीन’ कहने का तात्पर्य यह है कि वे मूलप्रकृति के कारण जीवों में विद्यमान राजस, तामस और सात्विक—इन तीनों गुणों से रहित हैं। संत तिरुमूलर का मुक्कुणनिरुकुणन् (त्रिगुण रहित निरंजन) कहना यहाँ विचारणीय है।

— शैवसिद्धान्तमेंप्रतिपादितमुप्पोरुळ्विचार ग्रंथ से।


शब्दावली

  • पति (Pati) – शैव सिद्धान्त में परमेश्वर (भगवान शिव)।
  • एण्गुणंगळ् (Aṣṭa-Guṇas) – शिव के आठ स्वाभाविक और अनादि लक्षण।
  • आणवमल (Āṇava Mala) – जीवों को अज्ञान में बाँधने वाला मूल अज्ञान-रूपी मल।
  • मुक्कुणनिरुकुणन् (Mukkuṇa Nirguṇa) – प्राकृत त्रिगुणों से अतीत विशुद्ध तत्त्व।

|| Attributes of Pati (The Supreme Lord) ||

In Saiva Agamas, eight divine attributes (Aṣṭa-guṇa) are ascribed to the Supreme Lord (Pati):

  1. Self-Independence (Tanvayattaṉātāl): Complete and absolute freedom. Being subject to no higher authority, exercising sovereign rule over all beings according to His divine will.
  2. Possessing a Pure Form (Tūya Uṭampiṉaṉātāl): Just as the soul’s presence is known through body movements, Siva’s presence is realized through His Grace (Arul). Unlike souls bounded by Āṇava whose forms are products of Māyā, Siva’s embodiment is Pure Divine Grace beyond physical description.
  3. Natural Intuitive Knowledge (Iyarkai Uṇarviṉaṉātāl): Unlike souls that acquire knowledge sequentially using internal and external instruments (Karaṇas), Siva’s essential nature is self-luminous Awareness itself.
  4. Omniscience (Muṟṟuṇarviṉaṉātāl): Knowing all states of all souls and objects within His all-pervasive presence simultaneously at all times.
  5. Eternal Freedom from Bonds (Iyalpākavē Pāsaṅkaḷiṉ Nīṅkiyavaṉātāl): Being inherently pure and forever unattached to the bonds of Pāśa (Āṇava, Karma, Māyā).
  6. Infinite Compassion (Pēraruḷ Uṭaiyavaṉātāl): The boundless grace arising to liberate bound souls (Paśu) from Āṇava-induced ignorance and lead them to Eternal Bliss.
  7. Infinite Power (Muṭivilāṟṟaluṭaimai): The limitless omnipotence required to illuminate all souls and set the entire universe into motion simultaneously.
  8. Boundless Bliss (Varampiliṉpamuṭaimai): Possessing unending Supreme Bliss, demonstrating His absolute perfection without any deficiency.

Acharya Umapathi Sivam describes Him as ‘Guṇamilān’ (Quality-less). The subtlety here is that Siva is free from the three material Guṇas (Sattva, Rajas, Tamas) derived from Mūlaprakṛti. Saint Tirumular’s phrase “Mukkuṇa Nirguṇan” (He who is beyond the three guṇas) is worthy of contemplation here.

— Excerpted from Mupporuḷ Viḷakkam in Saiva Siddhanta.


Glossary

  • Pati – The Lord, Supreme Being / Siva in Saiva Siddhanta.
  • Aṣṭa-guṇas – The eight intrinsic divine attributes of Siva.
  • Āṇava Mala – The primordial impurity of ego/ignorance that veils the soul’s consciousness.
  • Mukkuṇa Nirguṇa – The Supreme reality beyond the three material modes of Prakṛti.

|| Attributes de Pati (Le Seigneur Suprême) ||

Les Agamas Śaiva attribuent huit caractéristiques divines (Aṣṭa-guṇa) au Seigneur Suprême (Pati) :

  1. Indépendance Absolue (Tanvayattaṉātāl) : Liberté totale. N’être assujetti à aucune autre autorité et gouverner toutes choses selon Sa volonté divine.
  2. Forme Absolument Pure (Tūya Uṭampiṉaṉātāl) : Tout comme l’existence de l’âme est connue par le mouvement du corps, la présence de Śiva est réalisée par Sa Grâce (Arul). Son corps sacré n’est pas fait de matière illusoire (Māyā), mais est la Grâce Divine personnifiée.
  3. Omniscience Naturelle (Iyarkai Uṇarviṉaṉātāl) : Contrairement aux âmes qui apprennent par des instruments mentaux, Śiva est Conscience et Lumière par Sa propre nature.
  4. Omniscience Totale (Muṟṟuṇarviṉaṉātāl) : La capacité de connaître simultanément l’état de toutes les âmes et de toutes les choses dans Son omniprésence.
  5. Liberté Éternelle des Liens (Iyalpākavē Pāsaṅkaḷiṉ Nīṅkiyavaṉātāl) : Être intrinsèquement pur et exempt de tout lien (Pāśa).
  6. Compassion Infinie (Pēraruḷ Uṭaiyavaṉātāl) : La grâce infinie qui s’élève pour libérer les âmes de l’ignorance et leur accorder la Félicité Éternelle.
  7. Toute-Puissance Infinie (Muṭivilāṟṟaluṭaimai) : La puissance illimitée nécessaire pour éclairer toutes les âmes et mouvoir le cosmos.
  8. Félicité Infinie (Varampiliṉpamuṭaimai) : La possession de la Béatitude Suprême permanente, prouvant Sa perfection absolue.

Acharya Umapathi Sivam Le qualifie de ‘Guṇamilān’ (Sans Qualité). Cela signifie qu’Il est exempt des trois Guṇasmatériels (Sattva, Rajas, Tamas). La citation de Tirumular “Mukkuṇa Nirguṇa” exprime cette vérité profonde.

— Extrait du Mupporuḷ Viḷakkam dans le Saiva Siddhanta.


Glossaire

  • Pati – Le Seigneur Suprême / Śiva.
  • Aṣṭa-guṇas – Les huit attributs divins de Śiva.
  • Āṇava Mala – L’impureté primordiale de l’ignorance.
  • Mukkuṇa Nirguṇa – Transcendant les trois qualités matérielles de la nature.

|| Atributos de Pati (El Señor Supremo) ||

Los Śaiva Agamas asignan ocho atributos divinos (Aṣṭa-guṇa) al Señor Supremo (Pati):

  1. Independencia Absoluta (Tanvayattaṉātāl): Libertad total. No estar sujeto a ninguna autoridad externa y gobernar según Su voluntad divina.
  2. Forma Pura (Tūya Uṭampiṉaṉātāl): Así como la existencia del alma se reconoce por los movimientos del cuerpo, la presencia de Śiva se percibe por Su Gracia (Arul). Su cuerpo divino no es de materia ilusoria (Māyā), sino la Gracia misma.
  3. Conocimiento Intuitivo Natural (Iyarkai Uṇarviṉaṉātāl): A diferencia de las almas que adquieren conocimiento a través de instrumentos mentales, la naturaleza de Śiva es la Sabiduría Autoluminosa.
  4. Omnisciencia (Muṟṟuṇarviṉaṉātāl): Conocer el estado de todas las almas y de la creación simultáneamente en todo momento.
  5. Libertad Inherente de Ataduras (Iyalpākavē Pāsaṅkaḷiṉ Nīṅkiyavaṉātāl): Ser intrínsecamente puro y libre de los lazos de Pāśa (ignorancia, karma, maya).
  6. Misericordia Infinita (Pēraruḷ Uṭaiyavaṉātāl): La compasión divina que surge para liberar a las almas del sufrimiento y otorgarles la Dicha Épica.
  7. Poder Infinito (Muṭivilāṟṟaluṭaimai): La omnipotencia ilimitada requerida para iluminar a las almas y poner en movimiento el universo.
  8. Dicha Ilimitada (Varampiliṉpamuṭaimai): La posesión de la Dicha Suprema constante, demostrando Su perfección absoluta.

Acharya Umapathi Sivam lo llama ‘Guṇamilān’ (Sin Cualidades). La sutileza estriba en que Śiva carece de las tres Guṇas compuestas de materia (Sattva, Rajas, Tamas). El dicho de Tirumular “Mukkuṇa Nirguṇa” es digno de reflexión aquí.

— Extracto del Mupporuḷ Viḷakkam en el Saiva Siddhanta.


Glosario

  • Pati – El Señor Supremo / Śiva en el Śaiva Siddhānta.
  • Aṣṭa-guṇas – Los ocho atributos divinos intrínsecos de Śiva.
  • Āṇava Mala – La impureza primordial de ignorancia y ego.
  • Mukkuṇa Nirguṇa – Trascendente a las tres cualidades materiales de la naturaleza.

/