ஸ்ரீ கஜமுக அனுக்ரஹ மூர்த்தி திருவுருவ லட்சணம்
|| ஸ்ரீ கஜமுக அனுக்ரஹர் ||
உத்தரகாமிகாகமத்தில்:
அனைத்து உயிர்கட்கும் நன்மை அளிப்பதும், புனிதமானதும் அனைத்து வேண்டுகோளையும் நிறைவேற்றுவதுமான விக்நேசானுக்ரக மூர்த்தியைச் (கஜமுகானுக்ரகர்) சொல்கிறேன். சர்வ விக்னங்களையும் ஒடுக்குதலின் பொருட்டு உத்தம ஆச்சாரியன் இவ்வுருவத்தை நிறுவுக. முக்கண்ணர், நாற்கரத்தர், சாந்தர், ஒளிரும் குண்டலம் அணிந்தவர். கொக்கிறகு, பூங்கொத்து (குளிகை – மகுட உரு), சுரி குழல், ஆரமாயுள்ள மலர்மாலை, கொத்தாய்த் தொங்கக் கூடிய மணிவடம், அங்குசம், அட்சமாலை, ஒளிரும் வரதம், வலப்புறம் நிற்கும் கஜாநர், இடப்புறத்தில் கெளரீ, மற்றும் வானச் சுடராம் வெண் கொற்றக்குடையுடன் நல்லுருவமைப்போடு கூடியவராயமைத்து முறைப்படி நிறுவுக.
ஸ்ரீதத்வநிதியில்:
நாற்கரத்தர், முக்கண்ணர், சடைமுடி கொண்டவர், வலமுன் விநாயகரின் சிரசில் வைத்தவராயும் (விநாயகர் – வலப்புறத்தில் நிற்பதாக அமைக்க), மேல் கரங்களில் மான், மழு தரித்தவராயும், வலத்தாளை ஆசனத்தின் மேல் மடித்து வைத்தும், இடத்தாளைத் தொங்கவிட்டும், அனைத்தணிகள் பூண்டும் பசிய பொன்னிறமும், ஒளிர்மேனியும் கொண்டவராய் அமைக்க. இறைவரின் இடப்புறத்தில் மலர்ந்த முகமும், அணிகளனைத்தும் பூண்டவளும், வலக்கரத்தில் வேலையும், இடக்கரத்தில் வரதமும் கொண்ட இரு கரத்தாளும், முக்கண்ணும் வலத்தாளை மடித்து இடத்தாளைத் தொங்கவிட்டவளும், ஏகாசனத்தில் இடங்கொண்டவளுமான தேவியை உமாஸ்கநதருக்குச் சொன்ன வகையால் அமைக்க. விக்னேஸ்வரர் (விநாயகர்) செந்நிறத்தவரும், கிரீட மகுடத்துடன் கூடியவரும், இரு கைகளால் அஞ்சலி செய்பவரும், பாசம், அங்குசம், கொண்டவரும், அனைத்துப் பயன்களை தருபவருமாக அமைக்க. இம்மூர்த்தியை விக்னப்ரசாத மூர்த்தம் எனவும் கூறுவர்.
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியீடான தெய்வத் திருமேனிகள் என்னும் நூலில் இருந்து.
English IAST Transliteration
|| Śrī Gajamukha Anugrahar ||
Uttarakāmikāgame:
Aṉaittu uyirkaṭkum naṉmai aḷippatum, punitamāṉatum aṉaittu vēṇṭukōḷaiyum niṟaivēṟṟuvatumāṉa Vighneśānugraka MūRTTiyaic (Gajamukhānugrahar) solkiṟēṉ. Sarva vighnaṅkaḷaiyum oṭukkutaliṉ poruṭṭu uttama ācāriyaṉ ivvuruvattai niṟuvuka. Mukkaṇṇar, nāṟkarattar, sāntar, oḷirum kuṇṭalam aṇintavar. Kokkiṟaku, pūṅkottu (kuḷikai – makuṭa uru), curi kuḻal, āramāyuḷḷa malarmālai, kottāyt toṅkak kūṭiya maṇivaṭam, aṅkusam, akṣamālai, oḷirum varadam, valappuṟam niṟkum Gajāṉar, iṭappuṟattil Gaurī, maṟṟum vāṉac cuṭarām veṇ koṟṟakkuṭaiyuṭaṉ nalluruvamaippōṭu kūṭiyavarāyamaitu muṟaippaṭi niṟuvuka.
Śrītattva-nidhiyil:
Nāṟkarattar, mukkaṇṇar, caṭaimuṭi koṇṭavar, valamuṉ Vināyakariṉ ciracil vaittavarāyum (Vināyakar – valappuṟattil niṟpatāka amaikka), mēl karankaḷil māṉ, maḻu tarittavarāyum, valattāḷai ācaṉattiṉ mēl maṭittu vaittum, iṭattāḷaiத் toṅkaviṭṭum, aṉaittaṇikaḷ pūṇṭum pasiya poṉṉiṟamum, oḷirmēṉiyum koṇṭavarāy amaikka. Iṟaivariṉ iṭappuṟattil malarnta mukamum, aṇikaḷaṉaittum pūṇṭavaḷum, valakkarattil vēlaiyum, iṭakkarattil varadamum koṇṭa iru karattāḷum, mukkaṇṇum valattāḷai maṭittu iṭattāḷaiத் toṅkaviṭṭavaḷum, ēkācaṉattil iṭaṅkoṇṭavaḷumāṉa tēviyai Umāskandarukkuc coṉṉa vakaiyāl amaikka. Vighneśvarar (Vināyakar) ceṉṉiṟattavarum, kirīṭa makuṭattuṭaṉ kūṭiyavarum, iru kaikaḷāl añjali ceypavarum, pāsam, aṅkusam, koṇṭavarum, aṉaittup payaṉkaḷai tarupavarumaik kaṇṭamaikka. ImmūRTTiyai Vighnaprasāda MūRTTam eṉavum kūṟuvar.
(Thirukkayilaya Paramparai Tiruvāvaḍutuṟai Ātīṉa veḷiyīṭāṉa Teyvat Tirumēṉikaḷ eṉṉum nūlil iruntu)
கலைச்சொல்லகராதி / அருஞ்சொற்பொருள்
- விக்நேசானுக்ரக மூர்த்தி – சிவபெருமான் விநாயகப் பெருமானுக்குத் தமது திருவருளை (அருள்) வழங்கி ஆட்கொண்ட சிறப்புத் திருவுருவம்.
- உத்தரகாமிகாகமம் – இருபத்தெட்டு முதன்மைச் சிவாகமங்களில் ஒன்றான காமிகாகமத்தின் பிற்பகுதியாக அமைந்த, கோவில் திருமேனி அமைப்புகளை விளக்கும் முதன்மை நூல்.
- ஸ்ரீதத்வநிதி – பத்தொன்பதாம் நூற்றாண்டில் மைசூர் சமஸ்தானத்து அரசரால் தொகுக்கப்பட்ட திருமேனி உருவக் கலைச் சாத்திர நூல்.
- ஆச்சாரியன் – சிவாகம நெறிப்படி தீக்கையும் பயிற்சிகளும் பெற்று, தெய்வத் திருமேனிகளை முறைப்படி பிரதிஷ்டை செய்யத் தகுதியுடைய குரு.
- சடைமுடி / ஜடாமகுடம் – சிவபெருமானின் திருமுடி மேல் சுருண்டு அமைந்த புனிதமான சடாபாரம்.
- அங்குசம் – ஆன்மாவின் கர்ம மலத்தை அடக்கி ஒடுக்கும் அதிகாரத்தைக் குறிக்கும் இறைவனின் திருக்கரக் கருவி.
- அட்சமாலை – இடைவிடாத இறைச் சிந்தனையையும் மெய்ஞ்ஞானத்தையும் உணர்த்தும் உருத்திராக்க மாலை.
- வரத முத்திரை – ஆன்மாக்களுக்குத் தேவையான அனைத்துப் பேறுகளையும் அருளாக வாரி வழங்கும் திருக்கர அமைப்பு.
- ஏகாசனம் – சிவபெருமானும் உமாதேவியாரும் ஒரே பீடத்தில் எழுந்தருளியிருக்கும் திருவாசனம்.
- விக்னப்ரசாதமூர்த்தி – அடியார்களின் வாழ்க்கையிலுள்ள அனைத்து இடையூறுகளையும் (விக்னம்) நீக்கி அருள்புரியும் சிவபிரானின் சாந்தத் திருவுருவம்.
श्री गजमुख अनुग्रह मूर्ति स्वरूप लक्षण
|| श्री गजमुख अनुग्रहकर्ता ||
उत्तरकामिकागम के अनुसार:
“मैं विघ्नेशानुग्रह मूर्ति (गजमुखानुग्रहकर्ता) के स्वरूप का वर्णन करता हूँ, जो समस्त जीवों का कल्याण करने वाली, अत्यंत पवित्र और सभी मनोकामनाओं को पूर्ण करने वाली है। समस्त विघ्नों के शमन के लिए एक योग्य आचार्य को इस विग्रह की स्थापना करनी चाहिए। वे त्रिनेत्रधारी (त्रिलोचन), चार भुजाओं वाले (चतुर्भुज), शांत-स्वरूप, और देदीप्यमान कुंडल धारण किए हुए हैं। बगुले के पंख, पुष्प-गुच्छ (मुकुट का आभूषण), घुंघराले केश, माला के रूप में पुष्पहार, लटकती हुई मणियों की माला, अंकुश, अक्षमाला, और अभय/वरद मुद्रा से सुशोभित हैं। उनके दाईं ओर गजानन (भगवान गणेश) तथा बाईं ओर देवी गौरी विराजमान हैं। वे आकाश की भांति ददीप्यमान श्वेत छत्र से युक्त हैं। इस प्रकार उत्तम लक्षणों से युक्त विग्रह की विधिवत स्थापना करनी चाहिए।”
श्रीतत्त्वनिधि के अनुसार:
“वे चार भुजाओं वाले, त्रिनेत्रधारी, और जटाजुट से सुशोभित हैं। उनका अग्र-दायाँ हाथ भगवान विनायक के मस्तक पर आशीर्वाद मुद्रा में स्थित है (भगवान विनायक को दाईं ओर खड़ा स्थापित करें)। उनके ऊपरी हाथों में मृग (हिरण) और परशु (कुल्हाड़ी) सुशोभित हैं। उनका दायाँ पैर आसन पर मुड़ा हुआ है और बायाँ पैर नीचे लटक रहा है। वे समस्त आभूषणों से अलंकृत, हरे-स्वर्ण की आभा वाले और प्रकाशमान देह वाले हैं। भगवान के बाईं ओर प्रसन्न मुख वाली, समस्त आभूषणों से युक्त, दाहिने हाथ में वेल (या उत्पल) और बाएँ हाथ में वरद मुद्रा धारण करने वाली, दो भुजाओं वाली, त्रिनेत्रधारी देवी विराजमान हैं, जिनका दायाँ पैर मुड़ा हुआ और बायाँ पैर लटकता हुआ है। वे एक ही आसन (एकासन) पर उमास्कंद मूर्ति के विधान अनुसार स्थापित हैं। विघ्नेश्वर (भगवान विनायक) रक्त वर्ण (लाल रंग) के हैं, किरीट मुकुट धारण किए हुए हैं, अपने दोनों हाथों से अंजलि मुद्रा(प्रणाम) कर रहे हैं, तथा पाश और अंकुश धारण किए हुए हैं। वे समस्त शुभ फलों को देने वाले हैं। इस स्वरूप को विघ्नप्रसाद मूर्ति भी कहा जाता है।”
(तिरुक्कयिलायपरम्परातिरुवावटुतुरैअधीनमद्वाराप्रकाशित ‘दैवत्तिरुमेनिगळ‘ ग्रंथसे)
शब्दावली
- विघ्नेशानुग्रह मूर्ति – भगवान शिव का वह विशिष्ट स्वरूप जिसमें वे भगवान विघ्नेश्वर (गणेश) पर अपनी परम कृपा (अनुग्रह) करते हैं।
- उत्तरकामिकागम – २८ शैवागमों में से प्रधान कामिकागम का उत्तर भाग (उत्तर अंश), जो मंदिर निर्माण, मूर्ति लक्षण और पूजा विधि का प्रामाणिक ग्रंथ है।
- श्रीतत्त्वनिधि – उन्नीसवीं शताब्दी में मैसूर के महाराजा मुम्मडि कृष्णराज वोडेयार द्वारा संकलित एक प्रसिद्ध iconographic (मूर्ति-लक्षण) ग्रंथ।
- आचार्य – शिवागम विधि में दीक्षित एवं निपुण वह गुरु जो देव-प्रतिमाओं की शास्त्रीय प्राण-प्रतिष्ठा करने के लिए अधिकृत हैं।
- जटाजुट – भगवान शिव के सिर पर धारण की हुई पवित्र और गूंथी हुई जटाओं का मुकुट।
- अंकुश – भगवान द्वारा धारण किया गया एक दिव्य शस्त्र, जो जीव के कर्म और अज्ञान रूपी हाथी को नियंत्रित करने का प्रतीक है।
- अक्षमाला – रुद्राक्ष या कमलगट्टे की जपमाला, जो निरंतर ज्ञान और ध्यान का प्रतीक है।
- वरद मुद्रा – हाथ की वह स्थिति जिसमें हथेली बाहर की ओर नीचे झुकी होती है, जो भक्त को कृपा और वरदान प्रदान करने का संकेत देती है।
- एकासन – वह एक ही पीठ या pedestal जिस पर भगवान शिव और देवी पार्वती एक साथ विराजमान होते हैं।
- विघ्नप्रसादमूर्ति – भगवान शिव का वह शांत और कृपालु स्वरूप जो साधक के जीवन से समस्त विघ्नों को दूर कर प्रसाद (अनुग्रह) प्रदान करता है।
Iconographic Features of Śrī Gajamukha Anugraha Mūrti
|| Śrī Gajamukha Anugraha Mūrti ||
According to the Uttara Kāmikāgama:
“I describe the Vighneśānugraha Mūrti (also known as Gajamukhānugraha Mūrti), which bestows auspiciousness upon all living beings, is supremely sacred, and fulfills all prayers. To neutralize all obstacles (vighna), a qualified ācārya must consecrate this divine form. He is three-eyed (trilocana), four-armed (caturbhuja), serene (śānta), and adorned with glowing ear-ornaments (kuṇḍala). He features crane feathers, a crest of flowers (jeweled crown-ornament), curling locks, a necklace of woven flowers, hanging strings of radiant beads, the goad (aṅkuśa), the rosary (akṣamālā), and the glowing boon-bestowing gesture (varada). Lord Gajānana stands on His right side, Goddess Gaurī on His left, accompanied by a glowing white ceremonial umbrella that shines like a celestial orb. Having fashioned Him with all auspicious proportions, he should consecrate Him according to sacred tradition.”
According to the Śrī Tattvanidhi:
“He is four-armed, three-eyed, and crowned with matted locks (jaṭāmakuṭa). His front right hand is placed in blessing upon the head of Lord Vināyaka (who is positioned standing on the right). His upper hands hold the deer (mṛga) and the axe (paraśu). His right leg is folded upon the pedestal while His left leg hangs down. Adorned with all ornaments, He possesses a radiant body with the hue of greenish-gold. To the left of the Lord stands the Goddess with a cheerful countenance, adorned with all jewels, holding a spear/lotus in Her right hand and displaying the varada gesture in Her left. Having two arms and three eyes, with Her right leg folded and Her left leg hanging down, She shares a single pedestal (ekāsana) as prescribed for the Umāskanda manifestation. Vighneśvara (Vināyaka) is crimson-red in complexion, adorned with a kirīṭa crown, folding both hands in reverent añjali posture, and carrying the noose (pāśa) and the goad (aṅkuśa), bestowing all spiritual and material fruits. This manifestation is also designated as Vighnaprasāda Mūrti.”
(Sourced from the text ‘Teyvat Tirumēṉikaḷ’ published by the Thirukkayilaya Paramparai Tiruvāvaḍutuṟai Ātīṉam)
Glossary
- Vighneśānugraha Mūrti – The specific benevolent manifestation of Lord Shiva bestowing divine grace (anugraha) upon Lord Ganesha.
- Uttara Kāmikāgama – The supplementary portion of the Kāmikāgama, one of the 28 primary Śaivāgamas detailing ritual consecration and iconography.
- Śrī Tattvanidhi – An authoritative 19th-century encyclopedic treatise on South Indian Hindu iconography and ritual forms compiled by Maharaja Krishnaraja Wodeyar III.
- Ācārya – A fully initiated Śaiva preceptor qualified to conduct Agamic rites and divine consecrations (pratiṣṭhā).
- Jaṭāmakuṭa – The tall crown formed of matted hair, characteristic of Lord Shiva in His ascetic and supreme forms.
- Aṅkuśa – The elephant goad held by deities, symbolizing the containment of worldly desires and spiritual discipline.
- Akṣamālā – A rosary of rudrākṣa beads representing unceasing meditative devotion and divine jnāna.
- Varada – The sacred hand gesture (mudrā) pointing downward with the palm facing outward, signifying the bestowal of boons and grace.
- Ekāsana – A single shared pedestal or seat upon which Lord Shiva and Goddess Parvati reside together.
- Vighnaprasāda Mūrti – An alternate title for this iconographic form, emphasizing the Lord bestowing the blessing (prasāda) of obstacle removal.
Caractéristiques Iconographiques de Śrī Gajamukha Anugraha Mūrti
|| Śrī Gajamukha Anugraha Mūrti ||
Selon l’Uttara Kāmikāgama :
“Je décris la Vighneśānugraha Mūrti (également connue sous le nom de Gajamukhānugraha Mūrti), qui apporte la de bon augure à tous les êtres vivants, est suprêmement sacrée et exauce toutes les prières. Pour dissiper tous les obstacles (vighna), un ācārya qualifié doit consacrer cette forme divine. Il possède trois yeux (trilocana), quatre bras (caturbhuja), est serein (śānta), et orné de boucles d’oreilles brillantes (kuṇḍala). Il arbore des plumes de grue, un plumet de fleurs (ornement de couronne), des boucles ondulées, une guirlande de fleurs, des rangs de perles suspendues, l’aiguillon (aṅkuśa), le rosaire (akṣamālā), et la posture de bénédiction (varada). Le Seigneur Gajānana se tient à Sa droite, la Déesse Gaurī à Sa gauche, accompagnés d’un parasol royal blanc éclatant comme un astre céleste. L’ayant façonné selon de nobles proportions, l’officiant doit l’installer selon les rites sacrés.”
Selon le Śrī Tattvanidhi :
“Il possède quatre bras, trois yeux, et une couronne de cheveux tressés (jaṭāmakuṭa). Sa main droite avant repose en bénédiction sur la tête du Seigneur Vināyaka (qui se tient debout à Sa droite). Ses mains supérieures tiennent le cerf (mṛga) et la hache (paraśu). Sa jambe droite est repliée sur le piédestal tandis que Sa jambe gauche pend. Orné de tous les bijoux, Il possède un corps radieux à la teinte d’or verdâtre. À la gauche du Seigneur se tient la Déesse au visage épanoui, parée de tous les joyaux, tenant une lance/lotus dans Sa main droite et affichant le geste varada dans Sa main gauche. Possédant deux bras et trois yeux, avec Sa jambe droite repliée et Sa jambe gauche pendante, Elle partage un piédestal unique (ekāsana) selon le rituel prescrit pour Umāskanda. Vighneśvara (Vināyaka) est de teint cramoisi, coiffé d’une couronne kirīṭa, joignant les mains en geste de salutation (añjali), et portant le lasso (pāśa) et l’aiguillon (aṅkuśa), accordant tous les fruits spirituels. Cette forme est également nommée Vighnaprasāda Mūrti.”
(Extrait de l’ouvrage ‘Teyvat Tirumēṉikaḷ’ publié par le Thirukkayilaya Paramparai Tiruvāvaḍutuṟai Ātīṉam)
Glossaire
- Vighneśānugraha Mūrti – La forme bienveillante du Seigneur Shiva accordant Sa grâce divine (anugraha) au Seigneur Ganesha.
- Uttara Kāmikāgama – La seconde partie du Kāmikāgama, l’un des 28 Śaivāgamas fondamentaux régissant l’iconographie et les rites des temples.
- Śrī Tattvanidhi – Un grand manuel iconographique de l’Inde du Sud compilé au XIXe siècle présentant les caractéristiques des divinités.
- Ācārya – Le maître spirituel śaïvite initié et habilité à accomplir la consécration rituelles des images divines (pratiṣṭhā).
- Jaṭāmakuṭa – La couronne formée par les cheveux tressés et mêlés, propre au Seigneur Shiva.
- Aṅkuśa – L’aiguillon à éléphant tenu par la divinité, symbolisant la maîtrise des pulsions et du mental.
- Akṣamālā – Le rosai sacre de perles de rudrākṣa, symbolisant la répétition des mantras et la connaissance spirituelle (jñāna).
- Varada – Le geste sacré de la main (mudrā) tournée vers le bas, symbolisant l’octroi des bénédictions et de la grâce.
- Ekāsana – Le piédestal ou trône unique partagé conjointement par le Seigneur Shiva et la Déesse Parvati.
- Vighnaprasāda Mūrti – Nom alternatif de cette forme divine, soulignant la grâce accordée pour dissiper tous les obstacles (vighna).
Características Iconográficas de Śrī Gajamukha Anugraha Mūrti
|| Śrī Gajamukha Anugraha Mūrti ||
Según el Uttara Kāmikāgama:
“Describo la Vighneśānugraha Mūrti (también conocida como Gajamukhānugraha Mūrti), que otorga auspiciosidad a todos los seres vivos, es supremamente sagrada y cumple todas las plegarias. Para mitigar todos los obstáculos (vighna), un ācārya cualificado debe consagrar esta forma divina. Posee tres ojos (trilocana), cuatro brazos (caturbhuja), es sereno (śānta), y está adornado con pendientes deslumbrantes (kuṇḍala). Presenta plumas de grulla, un adorno floral en la corona, rizos ondeados, una guirnalda de flores, sartales de cuentas colgantes, el aguijada (aṅkuśa), el rosario (akṣamālā), y el gesto de concesión de dones (varada). El Señor Gajānana se encuentra a Su derecha, la Diosa Gaurī a Su izquierda, acompañados por una sombrilla real blanca que brilla como un cuerpo celestial. Habiéndolo esculpido con proporciones auspiciosas, debe instalarlo formalmente según la tradición.”
Según el Śrī Tattvanidhi:
“Él posee cuatro brazos, tres ojos y una corona de cabellos trenzados (jaṭāmakuṭa). Su mano derecha frontal descansa bendiciendo la cabeza del Señor Vināyaka (situado de pie a la derecha). Sus manos superiores sostienen el ciervo (mṛga) y el hacha (paraśu). Su pierna derecha está doblada sobre el pedestal mientras que su pierna izquierda cuelga. Adornado con todos los ornamentos, posee un cuerpo radiante con el tono del oro verdoso. A la izquierda del Señor se encuentra la Diosa con rostro radiante, adornada con todas las joyas, sosteniendo una lanza/loto en Su mano derecha y mostrando el gesto varada en la izquierda. Con dos brazos y tres ojos, con Su pierna derecha doblada y Su pierna izquierda colgando, comparte un pedestal único (ekāsana) según lo prescrito para la manifestación de Umāskanda. Vighneśvara (Vināyaka) es de tez carmesí, adornado con una corona kirīṭa, juntando ambas manos en gesto de reverencia (añjali), y portando el lazo (pāśa) y la aguijada (aṅkuśa), otorgando todos los frutos. Esta manifestación también es llamada Vighnaprasāda Mūrti.”
(Extraído del libro ‘Teyvat Tirumēṉikaḷ’ publicado por el Thirukkayilaya Paramparai Tiruvāvaḍutuṟai Ātīṉam)
Glosario
- Vighneśānugraha Mūrti – La manifestación benévola del Señor Shiva otorgando Su gracia divina (anugraha) al Señor Ganesha.
- Uttara Kāmikāgama – La sección posterior del Kāmikāgama, uno de los 28 Śaivāgamas principales que rige la construcción de templos e iconografía.
- Śrī Tattvanidhi – Un compendio iconográfico enciclopédico del siglo XIX que detalla las características y atributos de las deidades.
- Ācārya – El preceptor espiritual śaiva calificado e iniciado para realizar la consagración litúrgica de las murtis (pratiṣṭhā).
- Jaṭāmakuṭa – La alta corona formada por los cabellos trenzados, característica del Señor Shiva.
- Aṅkuśa – La aguijada de elefante sostenida por las deidades, que simboliza el control sobre los impulsos mentales.
- Akṣamālā – El rosario sagrado de cuentas de rudrākṣa, que representa la contemplación continua y el jñāna.
- Varada – El gesto sagrado de la mano (mudrā) orientada hacia abajo con la palma hacia afuera, que simboliza la concesión de gracia.
- Ekāsana – El pedestal o Asiento único compartido por el Señor Shiva y la Diosa Parvati.
- Vighnaprasāda Mūrti – Título alternativo de esta forma sagrada, que enfatiza la bendición (prasāda) de eliminar todos los obstáculos.
/
